தற்சார்பு வாழ்க்கை க்கு தயாராகுவோம் என்றதும் பலர் வீட்டுதோடடத்தை மைய படுத்தியே தற்சார்பு வாழ்க்கை வெற்றி பெறும் என புரிந்து கொண்டிருப்பதாக தொடரும் பதிவுகள் மூலம் உணர முடிகின்றது.
இந்த புரிதலின் ஊடாக பின்வரும் காலத்தில் ஏற்பட கூடிய குழப்பங்கள், சோர்வுகளை ஆரம்ப நிலையிலேயே உணர்த்த சரியான வழி காட்டலை தர வேண்டியது முக்கியம்.
எல்லோரையும் வீட்டு தோட்டம் எனும் ஒரே திக்கினுள் ஊக்குவிப்பதை விடவும்
அவரவர் வாழும் பிரதேசங்களில் கிடைக்கும் வளங்கள், பொருட்களை குறித்து தெளிவாக ஆராய்ந்து பின்பே எந்த முயற்சிக்கும் முதலீடு செய்யனும் என்று நான் நினைக்கின்றேன்
தற்சார்பு வாழ்க்கைக்கு வீட்டு தோட்டம், மந்தை வளர்ப்பு, மீன்பிடித்தொழில், விவசாயம், கைப்பணி மற்றும் உணவு சேமிப்பு, பாதுகாப்பு அலங்கரிப்பு என பல்வேறு பட்ட யுக்திகளை அவரவர் திறமைக்கு ஏற்றபடி தேர்வு செய்யலாம்.
எல்லோராலும் எல்லாமும் முடியாது அல்லவா?
„ இதை செய் என்பதை விட
எதை செய்ய உன்னால் முடியுமோ அதை தேர்ந்து எடு“ என்பது சிறப்பு. எதோ ஒன்றை தேர்ந்து எடுக்கணும் என்பது முக்கியம் 😍
🔸 விவசாயம், தோட்டம் எனும் போது அதனுள் பல பயிர் செய்கைகள்
🔸 மந்தை வளர்ப்பினுள் பல தெரிவுகள் இருக்கின்றன
குறிப்பிடட பிரதேச மக்களை ஒன்றிணைத்து ஒவ்வொருவரும் அவரவர்க்கு பிடித்த எதோ ஒன்றை உற்பத்தி செய்வதே இலங்கை போன்ற சிறு தேசத்தினுள் சமூகம் சார்ந்த தற்சார்பு வாழ்க்கைக்கு சிறந்த வழி காட்டலாகும்.
ஆர்வம் இல்லாத ஒன்றை செய் என திணிப்பதை விட அவரவர் ஆர்வம் காட்டும் துறையில் ஊக்கம் கொடுத்து அனைத்து வளங்களையும் நிறைவு செய்யும் போது தான் தற்சார்பு வாழ்க்கைக்கு பயன் கிடைக்கும். இலக்கும் முற்று பெறும்
உதாரணமாக
🔶 பெரும் தோட்டம் செய்யும் பிரதேசங்களுக்கு அருகில் வாழ்வோர் வீட்டு தோட்டம் உணவு உற்பத்தி சார்ந்து வழி காடடபடுவதை விட உணவு பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் நகரங்கள் நோக்கிய சந்தைப்படுத்தல் முயற்சிகளில் நுழையலாம்.
🔶 அல்லது அவர்கள் பகுதியில் கிடைக்காத பொருளை உற்பத்தி செய்யலாம்.
நிச்சயமாக இன்னொருவர் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் ஒரு தொழிலை ( அவரே தடுமாறுவதை அறிந்தும் ) எத்தனை இலாப நோக்கம் இருந்தாலும் தொடங்க கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
„ கீரைக்கடை போட்டாலும் அதுக்கு எதிராக இன்னொரு கடை போட்டு“ தானும் வாழாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் எங்கள் தமிழ் சமூகம் அழிந்து கொண்டிருக்கின்றது எனும் உண்மையை நாங்களும் புரிந்து கொள்ளணும்.
தற்சார்பு வாழ்வின் வெற்றிக்கு ஒருவரிலொருவர் சார்ந்தும் உதவி செய்தும், ஊக்கம் கொடுத்தும் தானும் தான் சார்ந்த சமூகமும் முன்னேறணும் எனும் சிந்தனை மாற்றம் தேவை. ( யூதர்கள் வெற்றி இந்த பார்முலாவுக்குள்ளும் இருக்கின்றது )
♦️ பழ தோட்டங்கள், காய்கறி கீரை தோட்ட விவசாயிககள் தங்கள் உற்பத்தி பொருட்களை இருந்த இடத்திலிருந்தே மொத்த குத்தகைக்கு இடைத்தரகர் மூலம் விற்பதை தவிர்த்து மக்களை தோட்டத்துக்கு நேரடியாக வர வைத்து அவர்களுக்கு தேவையானதை அவர்கள் பறித்து கொள்ளும் படி அல்லது உடனே பறித்து கொடுத்து பணம் பெறலாம்.
இதற்கு தோட்டக்காரர் உடன் ஒரு உதவியாளர் போதும்.அல்லது குடும்ப உறுப்பினர்களே உதவலாம்.
🔹 இதன் மூலம் விவசாயிக்கு வேலையாள் கூலி மொத்தமாக வெளியே போகாது.
🔹 விவசாயி,நுகர்வோருக்கும் இடையில் மூன்று நான்கு மடங்கு தரகு கூலி கணிசமாக குறைந்து இருவருமே பயனடைவார்கள்.
தோட்டத்தில் விளைச்சல் அதிகமாக கிடைக்கும் காய்கள், பழங்களை உற்பத்தி செலவுக்கும் உழைப்புக்கும் கணக்கிட்டு கொஞ்சம் கட்டுப்படியாகும் விலைக்கு பொது மக்களுக்கு விற்றாலும் இருவருக்கும் சந்தைக்கு போய் விற்கும், வாங்கும் விலையை விட இலாபம் கிடைக்கும்.
உற்பத்தி செய்யும் விவசாயியிடம் ஒரு கிலோ கத்தரிக்காயை 20 ரூபாவுக்கு வாங்கி அதை சந்தையில் மும்மடங்கு விலை வைத்து 60 ரூபாவுக்கு நுகர்வோர் வாங்குவதை விட நேரடியாக தோட்டதுக்கு போய் 40 ரூபாவுக்கு வாங்கும் போது இருவருக்கும் 20 ரூபாய் இலாபம் கிடைக்குமா இல்லையா?
செல்வந்த நாடு சுவிஸில் நான் வாழுமிடங்களில் காணும் சிறந்த வழி காட்டல் இது.பெரும் பழ தோட்டங்கள், காய்கறி பண்ணை, பூந்தோட்ட்ங்களில் இந்த நடைமுறை உள்ளது.
தேவை :
தீயதை நினைப்பதும், தீ என தெரிந்தே அதை தொடுவதையும் தவிர்த்து நல்லதை, நன்மைகளை வெற்றி பெற்றோர்களின் அடிச்சுவடுகளை தொடர்ந்து நாமும் அதே வெற்றி கொடியை தொடரனும் எனும் சிந்தனை மாற்றம்..!😍
Nisha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!