23 மே 2020

இனி வரும் காலம்...?



இனி வரும் காலம்...?

கொரோனாவுடன் வாழ பழகணும் என்றால் கொரோனா பத்தி ஆராய்வதுக்கு Holiday  விட்டு அரசாங்கம் அறிவிக்கும் இனாம்களும், இலவசங்களும் கிடைக்கும் என்று  நம்பி இலவு காத்த  கிளி போல் அலையவும் வேணும்.

கொரோனா தர போகும் கொடுமை குறித்து அரசாங்கங்கள் சீரியசன்ஸ் இல்லாமல் ரெண்டு மூணு மாதத்தில் முடிந்திரும் என தற்கால  நிவாரணங்களாக அறிவித்ததை நம்பி
விண்ணம்பித்தவர்களுக்கு  கொடுக்காமல் தவிர்க்க ஆயிரம் புது காரணம் தேடுது.

கொரோனா தொற்றினால் நீயே உனக்குள் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியின் மூலம் மீண்டு வா எனும் முடிவு போல்  இந்த பொருளாதார நெருக்கடி, பசி, பட்டினி யிலிருந்து மீண்டு வரணும் என்று அரசுகள் கை விடும் நிலையில் தான் காலம் எம்மை நிறுத்தி இருக்கின்றது.

எல்லோருக்கும் பிரச்சனை தான்..🖤
ஆனால் பலர் தங்களுக்கு மட்டுமே பிரச்சனை என தங்களுக்கு கீழே பல்லாயிரம் கோடி மக்கள் படும் பாடுகளை அறியாமல் வாழ்கின்றார்கள்.

சுவிஸ் மட்டுமல்ல ஒட்டு மொத்த ஐரோப்பாவுமே பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை எதிர் நோக்குகின்றது.
இப்போதைக்கு மூன்று மாதங்கள் எவரையும் வேலை நீக்கம் செய்ய வேண்டாம் எனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்காலிகமானது என்பது கூட உணராதவர்களாக எங்கட தமிழர் வழக்கம் போல் நிலைமையின் தீவிரம் புரியாமல் இருக்காங்க.

கொரோனா தந்த உளவியல் அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில் வேலையும் இல்லை என்றால்.....? 

நிச்சயம் கடினம் தான் 

ஆனாலும் என்ன? 

🔹 எதிர்கால கனவு  வீடு, வாசல், நகை, நட்டு என அடுத்தவரை பார்த்து பறக்க ஆசைப்படாமல் 

🔹❣️ மூணு வேளைக்கு இல்ல என்றாலும் ரெண்டு வேளை சாப்பாடு 
🔹❣️குடிக்க சுத்தமான நீர் 
🔹❣️ஆரோக்கியமான உடல் நிலை
🔹❣️ இருக்கும் உடைகளை துவைத்து உடுத்தும் சிக்கனம் 
🔹❣️முக்கியமாக கிடைக்கும் உணவை விரயமாக்காமல் சேமிக்க தொடங்குங்கள் 
🔹❣️ போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து 

🔶 அரசாங்க அதிகாரங்கள். புதிய நோய் பரப்பும் வைரஸ் மட்டும் அல்ல இயற்கையும் மக்களுக்கு எதிராக மோதுகின்றாள்🙆‍♀️

அண்டத்திலும் கண்டத்திலும் எதுவும் எமக்கு சாதகமாக இல்லை. சூரிய கிரகத்திலும் எதோ பிரச்சனையாம். காலநிலை கோளாறு விவசாய உற்பத்திகளை கடுமையாகவே பாதிக்குமாம்.

என்ன நீ ...? எங்களை ஒரேயடியாக பயம் காட்டுகின்றாய் என திட்டிடாதீர்கள்

நான் ஆராய்ந்தறியாமல் மேம்போக்காக எதையும் எழுதுவதில்லை. உண்மையில் வாழ்க்கையில் முதல் தடவை ஓய்ந்து நிற்கின்றேன்.இனி அடுத்து என்ன எனும் கலக்கம் தவிர்க்க முடியல்ல. எல்லா கதவும் அடைபட்டு கொண்டிருக்கின்றது.

ஒன்று மட்டும் உறுதி ❣️
🌻 இன்றைய நிலையில் ஐரோப்பிய அமெரிக்காவை விட ஆசிய நாடுகள் முக்கியமாக இந்திய, இலங்கை வாழ் மக்கள் நிலை உயர்ந்தே இருக்கின்றது .

உங்கள் மன பிளவுகள், கடந்த கால அரசியல் விருப்பு வெறுப்புகள், இனமத பேதங்களை கசப்புகளை கடந்து சமூகம் சார்ந்து ஒன்று படுவீர்கள் என்றால் இனி வரும் காலம் சிறக்கும் ❣️

Swiss - lockdown  ஆரம்பித்த மார்ச் மாதமே 10 - 30 வீதம் சம்பள குறைப்பு செய்தது.

அது தான் எல்லா செலவும், பில்லும் கட்டி 
பலருக்கு சாப்பாட்டுக்கு மிஞ்சுவது எனும் உண்மை நிலை யை புரிந்து முதலில் அவரவர் குடும்பத்து நிலையை பாதுகாத்து கொள்ளுங்க. மற்றவர்களையும் எச்சரித்து உளவியல் ரீதியாக ஓரளவு தயார் படுத்துங்க.

இதில் சுற்றுலா பயணிகள் இல்லை என்றால் இன்னும் பல இலட்சம் பேர் வேலை போகும் வரவு இல்லை எனில் செலவுகளும் குறையும். இது தான் உலகம் இனி எதிர்கொள்ள போகும் யதார்த்தம்.

ஆடம்பர, அனாவசிய செலவுகளை தவிர்த்து  தேவைக்கு வாழ தயாராகுவோம்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழ்க்கை ஒன்றும் சொர்க்கத்துல இல்லை...✍️✍️✍️




Nisha 
23.05.2020

1 கருத்து:

  1. கலக்கம் தவிர்க்க முடிவதில்லைதான்....கலங்கலாம் ஆனால் மனம் தளர்ந்துவிடக் கூடாது. அடைபட்டு இருக்கும் கதவுகள் நிச்சய்ம திறக்க்கும்.

    நம்பிக்கைதான் வாழ்வு

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!