தற்சார்பு வாழ்க்கை நோக்கிய வழி காடடலில்... 4
எமக்கு தேவையானதை நாமே உற்பத்தி செய்வதோடு அதை பதப்படுத்தி பாதுகாப்பதும் சேமிப்பதும் இனி வரும் காலங்களில் எமக்கு அவசியமாகின்றன.
எல்லோரும் வீட்டு தோட்டங்களில் ஈடுபட்டால், இதை
தொழிலாக செய்வோருக்குரிய விவசாய உற்பத்தி பொருட்களின் விலை வீழ்ச்சியடையம் என கலங்கி எதிர் வினையாற்றி கொண்டிருக்காமல் விவசாயிகள் விவசாய பொருட்களை உள்ளூர் நுகர்வுக்காகவென மட்டும் உற்பத்தி செய்யாது மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் நோக்கி நகர்த்த வேண்டும்.
இனி வரும் காலங்களின் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ளும் முயற்சிகள் வேகமாக்க வேண்டும்.
தனி மனிதர் தற்சார்பில் முழுமையடையும் போது சமூக தானாக எழுச்சியடையும்.
மதிப்பு கூட்டல் (Value addition) என்றால் என்ன?
நீண்ட கால தேவைக்கு ஏற்ற படி ஒன்றை பலதாக்கி பதப்படுத்தி, உருமாற்றி சேமிக்கும் கொள்ளும் யுக்தி மதிப்பு கூட்டல் எனப்படும்.
உதாரணமாக..!
🔻 ஓரிரு நாளில் அழுகி போகும் பழங்களில் இருந்து பழக்கலவை பழச்சாறு, பழப்பாகு,
பழவற்றல்
🔻 பச்சை மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயி விளைச்சல் அதிகமாகும் போது தேவைக்கு போக மீதி அழுகி வீணாகின்றதே என கலங்குவதை விட அதை பழுக்கும் வரை விட்டு வெய்யிலில் காய வைத்தால் காய்ந்த மிளகாய்.
காய்ந்த மிளகாயை
• உரலில் இடித்தால் சம்பல்தூள்.
• மிக்சியில் அடித்து அரித்தால் தனி மிளகாய் தூள்.
• மல்லி சீரகம் மிளகு சேர்த்து வறுத்து அரைத்தால் யாழ் கறித்தூள்
🔻 சில மணி நேரங்களில் கெட்டுபோகும் பாலை சீஸ், பன்னீர், பால் பவுடர், கிரீம், என ஒவ்வொரு தொழிலிலும் ஒன்றை பத்தாக மாற்ற கற்றுக் கொள்வதே காலத்துக்கேற்ற மாற்றம்.
உணவு உற்பத்தி செய்யும் விவசாயி இவ்வாறான முயற்சிகள் மூலம் தொழில் முனைவோனாக வெற்றி பெறுவதோடு அதிக லாபங்களையும் பெறுகின்றான்.விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கவலை பட்டு கொண்டிருக்காமல் மாற்றுத்தீர்வுகளை யோசித்தால் மதிப்புக் கூட்டி விற்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.
உணவு பொருள் சேமிப்புக்கும் மதிப்பு கூட்டி பயன் படுத்தவும் பெரும் தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்பது இல்லை
நான் வாழும் சுவிஸ் தேசம் வருடத்தில் 9 மாதங்கள் குளிரும் 3 மாதங்கள் மட்டுமே வெயிலும் கொண்டதான நாடு என்பதால். 3 மாதங்களில் விளையும் வீட்டு தோட்ட உற்பத்திகளை பக்குவமாக சேமித்து குளிர் காலங்களில் பயன் படுத்துவார்கள்.
வீட்டு தோட்டங்களினுடான மக்கள் தற்சார்பை நோக்கிய வழி காட்டலில் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தேவைப்படும் ஆலோசனைகள் சில இங்கே பகிர்கின்றேன்.
• இஞ்சி உள்ளி இரண்டும் எம்மவர் சமையலில் இன்றியமையாதவை.
இஞ்சிக்கும் உள்ளிக்கும் தினசரி உணவு தயாரிப்பில் இருக்கும் முக்கியத்துவம் உடல் நலன் ஆரோக்கியம் சார்ந்தது. தினசரி தேவைக்கு பயன் படுத்தும் இஞ்சியும் உள்ளியையும் தினம் தேவைக்கு வாங்கி உரித்து பயன் படுத்துவோம்.
அவ்வாறான வசதி இல்லாத கொரோனா வைரஸ் போன்ற நெருக்கடியான சூழலிலும் விளைச்சல் அதிகமாகி விலை மலிவாக கிடைக்கும் காலத்திலும் உள்ளி வாங்கி உரித்து நீர் தன்மை இல்லாத போத்தலில் போட்டு மூடி பிரிட்ஜ் ல் வைத்தால் ஒரு வாரம் வரை இருக்கும் ( உரித்த உள்ளி கழுவ கூடாது)
உரித்த உள்ளி sun Fellower அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு காற்று போகாமல் மூடி வைத்தால் ஒரு மாதம் இருக்கும்.
உள்ளியை எண்ணெய் விட்டு மிகவியில்மை போல் அரைத்து ஐஸ் க்யுப் களில் போட்டு பிரீஷர் ல் வைத்து கட்டியானதும் ஒரு டப்பாவில் போட்டு மூடி மீண்டும் பிரிஸ்ர் ல் வைத்து தேவைக்கு ஏற்ற படி எடுத்து பயன் படுத்தலாம்
உணவு விடுதிகளுக்கு சேமிப்போர் இஞ்சி பூண்டு பேஸ்ட் தனித்தனியே அரைத்து பெரிய டப்பாக்களில் மூன்று நான்கு மாதம் வைத்து கொள்ளலாம்.
பிரிஸ்சர் ல் இருந்து வெளியே எடுத்து பயன் படுத்தியபின் ஒரு Tea ஸ்பூன் எண்ணெய் விட்டு மீண்டும் பிரிஜ் ல் மூன்று நான்கு நாள் வைத்து பயன் படுத்தலாம்.
• மரவெள்ளி மாவாக்கி பொதியிட்டால் சந்தை வாய்ப்பு இலகுவாக இருக்கும்.
• ஈரப் பலாக்காயை சீவி துண்டு போட்டு வெயிலில் காய வைத்து பதப் படுத்தலாம்..
பெரும்பாலான உணவு பொருட்கள் போத்தலிலும் ரின்னிலும் அடைத்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை அரச அதிகாரிகள் உருவாக்கி கொடுக்க முயற்சிக்கலாம்
மேலும் என்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டலாம் ?
தொடர்வோம்...!
Nisha
அருமை.(.உள்ளி என்பதுதான் என்னவென்று புரியவில்லை.)..தொடர வாழ்த்துகள்..
பதிலளிநீக்கு