19 நவம்பர் 2016

நீங்க நல்லா இருக்கோணும்

19/11/2016 சர்வதேச ஆண்கள் தினம்

இந்த வாழ்க்கை எனும் நீண்ட நெடும் பயணத்தில் என்னைப்புரிந்து, என்னை வளப்படுத்த்தியவர்களுள் முதன்மையாய் ஆண்கள்இருக்கின்றார்கள்.

அப்பா எனும் ஆண் என் ரோல் மாடலாய் இருந்தாரெனில் நான் பிறந்து நான்கு வயது வரை என் பாதம் மண்ணில் படாமல் தூக்கிச்சுமந்தவர்களாய் மாமாக்களும், ஏழ்மையிலும் எளிமையாய் என் பசியுணர்ந்து தன் கையில் இருக்கும் கடைசி ஒரு ரூபாயில் தின்பணடம் வாங்கித்தந்து விட்டு பொடி நடையாய் பல மணி நேரம் நடந்தே வீடு அழைத்து வரும் தாத்தாவும், என்னுள் மறைந்திருக்கும் திறமைகளை கண்டுணர்ந்து பாராட்டிச்சீராட்டி ஊக்கம் தந்த பள்ளிக்கால அதிபர், ஆசிரியர்களும், நான் துவண்ட நேரம் என்னுள் உயிர்ப்பாகி எனை பெலப்படுத்திய அண்ணாக்களும், கலங்கும் நேரம் கண்ணீர் துடைக்கும் தம்பிகளும், நண்பர்களுமாய்
அப்பா, மாமா, தாத்தா, ஆசிரியர், அண்ணா, தம்பி என என்முன் வடிவெடுத்து எனை ஆள்வோருக்கும், துணையாய் தூணாய் என் செயல்களில் கரம் கொடுக்கும் என்னவர்க்கும், எனை அதட்டி உருட்டி ஆட்டம் காட்ட வைக்கும் என் அன்பு மகனுக்கும் இன்று மட்டும் அல்ல.... என் ஆயுள் உள்ள வரை நன்றிகளும், பாராட்டுகளும், வாழ்த்துகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். 


என்னுள் நுழைந்து என்னை உயிர்ப்பித்து 

மண்ணான என்னை விண்ணுக்கும் உயர்த்தி 
ஒடிந்து விழும் போதில் ஊன்று கோலுமாகி 
தாயாய், சேயாய், தந்தையாய், தமையனாய்
பொறுமையாய் தோள் தந்து சுமை தாங்கி
தரணியில் அனைத்துமாய் தரத்தினில் சிகரமாய் 
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உணர்த்தி 
உரிமையாய் திட்டி, உண்மையாய் பாராட்டி 
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா 
வஞ்சனை யற்ற நல் உள்ளங்களாயென்னுள் 
உறங்கிடும் உணர்வை உயிர்ப்பிக்கும் 
உத்தமராயென்னகம் தங்கிடும்
வேந்தர் குலமே நீர் வாழ்க!

9 கருத்துகள்:

 1. சிறப்பானதோர் பகிர்வு. பாராட்டுகளும் நன்றியும்.....

  பதிலளிநீக்கு
 2. வாவ்...
  நன்றிகள் சகோ

  பதிலளிநீக்கு
 3. தங்களது நன்றியுணர்வுக்கு ஒரு ராயல் சல்யூட்

  பதிலளிநீக்கு
 4. சிறப்புப் பதிவு அக்கா...

  பாராட்டுக்கள்...

  வாழ்த்துக்கள்....

  நன்றி...

  பதிலளிநீக்கு
 5. சகோதரி உங்கள் மின்னஞ்சல் தெரிவிக்க வேண்டுகிறேன்- நா.முத்துநிலவன் - muthunilavanpdk@gmail.com

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு சகோ! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!