25 நவம்பர் 2016

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3

 தீர்வு  என்ன? 

 நம் சந்ததிக்கேனும்   உள்ளதை உள்ளபடி உணர்த்தி வளர்த்தெடுப்போம் என  உணர்வு பூர்வமாக அணுகாமல் உள்ளப்பூர்வமாக சிந்தித்தாலே பாதி விடுதலை கிடைத்து விடும்.


விடுதலைப்போராட்டம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?
பள்ளிகளில் தரப்படுத்தல் என்றொன்றில்லா விட்டால் இந்த விடுதலைப்போராட்டம் அவசியமாகி இருக்குமா?
எதற்காக இத்தனை உயிர்களை நாம் இழந்தோம்?
நாம் இழந்தது உயிர்கள் மட்டும் தானா?
அக்காலத்தில்  யாழ்ப்பாணத்தில் பிறந்த சான்றோர்கள் உலகத்தமிழர்கல் தலை நிமிர்ந்து வணங்கும் இடத்தில் இருந்தார்கள். தமிழ்மொழி என்றாலே யாழ்ப்பாணம் நினைவுக்கு வரும்படி தம்மை உயர்த்திக்கொண்டார்கள். சாதனையாளர்களாக, செல்வத்தில் சிறந்தோராக போற்றுமிடத்தில் இருந்தார்கள்.

இன்றைய நிலை என்ன?
90கள்வரை இலங்கையின் பெரும்பான்மையான வைத்திய சாலைகளில் எம்மின வைத்தியர்கள் தான் அதிகமாய் கடமையாற்றினார்கள் கடமை உணர்வும், ஆர்வமும், விருந்தோம்பும் மாண்பும் கல்ந்து செல்லுமிடமெல்லாம் எம் கற்றோர் தம்மை உயர்த்தினார்கள். கொழும்பு போன்ற பெரிய வைத்திய சாலைகளிலேயே பத்து தமிழ் வைத்தியருக்கு ஒரு சிங்கள வைத்தியர் எனும் நிலை இருந்த காலம் அது,
இலங்கையில் பல பகுதிகளிலும் பல உயர் பதவிகளை வகித்தார்கள்.
தமிழன் அறிவில் மேலோங்குவதை கண்டு பொறாமைப்பட்ட சிங்கள அரசு அவனை குட்டிக்குனிய வைக்க ஆரம்பித்தது தான் தரப்படுத்தல்...!
இந்த தரப்படுத்தல் என்பதே என்ன என இன்றைய தலைமுறைக்கு தெரியுமோ என்னமோ?
இன்றைக்கு என்ன நடக்கின்றது?
இலங்கை அரசு எதை நினைத்ததோ.அது நன்றாகவே நடக்கின்றது.
அறிவை அகற்றி அகந்தையை புகுத்தி சிந்தனையை தாறுமாறாக்கி நாடு விட்டு நாடு கடத்தி,, எஞ்சியோர் சிந்தனையையும் எச்சில் இலைக்கு பறக்கவைத்து...எடுத்ததுக்கெல்லாம் பலகலைக்கழக மாணவர்கள் போராட்டம் என கல்வியை நிறுத்தி தெருவுக்கு போராட இறங்கு முன் கொஞ்சமேனும் சிந்தியுங்களேன்பா!
உங்கள்கல்வியை பகிஷ்கரித்து உங்கள் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி அனாதிகளாய் அல்லலுற்று எங்கோ ஒரு நாட்டில் டாய்லட் கிளின் செய்ய, பாத்திரங்கள் கழுவவா இத்தனையையும் நாம் இழந்தோம்?
என்ன தான் செய்யலாம்? எங்கே செல்லும் இந்த ப்பாதை?

2 கருத்துகள்:

  1. ஒரு சமூகம் கல்வியால்தான் முன்னேற்றம் அடையும் என்பதை நாம் நன்கறிவோம்... நம் கல்வியைப் பிடிங்கி எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் சிங்கள அரசின் பாதையில் இருந்து நமக்கான தீர்க்கமான பாதையை சமைப்போம்...
    புதிய உலகு படைப்போம்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு சமூகம், நாடு எதுவுமே உயர் வேண்டும் என்றால் அதற்கு ஆணி வேர் கல்விதான். கோன் உயரக் குடி உயரும் என்றும் சொல்லப்பட்டதுதானே! வேதனைதான். தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!