17 நவம்பர் 2016

இப்படியும் சிலர் அல்ல, இப்படித்தான் பலர்

கனி இனிமை என்பதனால் கனிதரும் மரத்தினை வேரோடு பிடுங்குதல் சரியோ ?
இனிமை தரும் கனிமரமானாலும் விதையிட்டபின் சரியாக பராமரிக்காவிட்டால்  பலன் தருமோ?
கனி பறித்த பின் பூக்களையும் சேர்த்தே உதிர்த்து விட்டால் அம்மரம் மீண்டும் கனி தருமோ?
உறவு, நட்பெனும் விதையூன்றி அக்கறை, பாசம், நம்பிக்கை,விட்டுக்கொடுத்தல், பொறுமை தனை பசளையாக்கி,அன்பெனும் நீரையும் அடிக்கடி ஊற்றாமல் நம் தேவையின் நேரம் வாடி பட்டுப்போன மரத்தில் கனிகளை மட்டும்  எதிர்பார்ப்பது போல் ............. ?

 உச்சி வெயிலின் உக்கிரம் தாங்கி 
பல்லினப்பறவைகள் கூடிக்களிக்க 
பூவும்,பிஞ்சும்,காயும் கனியுமாய் 
பயன் தந்த பொழுதினில்
ஊஞ்சல் கட்டி உல்லாசம் கண்டு
ஏறி மகிழ்ந்தோர் எட்டி உதைக்க
இதம் தரும் தென்றலென
நிழல் நாடி நின்றோர் ஒதுங்கிச்செல்ல
கல்லெறிகளினால் காயங்கள் வலிக்க
நீரின்றி வேரும் உடலும் காய்ந்து
கிளைகளை உடைத்து ஒடித்த பின்னும்
பாதைகள் எங்கும் முட்செடி விதைத்து
வாதைகள் தனையே விசமாய் ஊற்றி
வேசம் கட்டி பாசம் காட்டி
தேவைகள் நேரம் தேடுவாரிங்கே!

இப்படியும் சிலர் அல்ல,இப்படித்தான் பலர்!
20 கருத்துகள்:

 1. யதார்த்த உண்மைகளை கவி வடிவில் தந்தீர் நன்று

  பதிலளிநீக்கு
 2. நவீன காலத்தில் இப்படித்தான் பலர் அழகான கவிதை! மரம் என்றால் என்றாவது படுவதுதானே இயல்பு பட்டமரமும் விறகாகி உதவும்)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதர் எனில் மரிப்பதும் உறுதி தானே ? அதற்காக தேவைகள் நேரம் மட்டும் தேடலாமோ? முதுமையின் நேரம் ஒதுக்கி விடலாமோ?

   பின்னூட்டத்துக்கும் இந்த பக்கம் எட்டிப்பார்த்ததுக்கும் நன்றிப்பா!

   நீக்கு
 3. இப்படி கவிதை எழுத உங்களை இந்த சூழ்நிலைக்கு தள்ளியது எது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில பல பகிர்வுகளுக்கு நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது சார்என் மனதில் தோன்றியது
   அனைத்தும் கற்பனை இல்லை தானே?

   நீக்கு
 4. தானாய் உதவுபவர்களை மனிதர்கள் மதிப்பதே இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?!! கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தானாய் உணர்ந்து உதவுபவர்களை மதிப்பதில்லை எனும் அர்த்தத்தில் இல்லை ஐயா. ஒரு மரத்தின் காய் கனி தேவையெனில் நாம் அதை பராமரிப்பதற்குரிய விளைச்சலை தானே தரும். நமக்கு தேவை எனும் போது மட்டும் தண்ணீரை ஊற்றி விட்டு பழத்தினை எதிர்பார்க்கலாமா? தொடர்ந்த பராமரிப்பும், நீரூற்றலும் தானே மரத்தின் விளைச்சலுக்கு முக்கியம். அது போல் தானே மனிதர்களும் என சொல்ல வந்தேன்.

   நீக்கு
  2. நீங்கள் அப்படிச் சொல்லவில்லை. நான்தான் அப்படிச் சொல்ல விழைந்தேன்!!

   :))

   நீக்கு
  3. தானாய் உதவுபவர்களையும், சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய நினைக்கும் ஆண்மக்களையும் உலகம் ஒரே தராசில் வைத்து தான் பார்க்கும். இளிச்சவாயன்கள் எனும் நாமமிடும் பட்டமும் கிடைக்கும், அதைக்குறித்து இன்னொரு பதிவில் பகிர்ந்து விடலாம்.

   நீக்கு
 5. வாழ்வின் தவிர்க்கவே முடியாத அவசியம் சந்திக்க வேண்டிய நிகழ்வு களில் ஒன்று ...
  நம்மை உரப்படுத்தும்...
  கடந்து போகும் விசயத்தில் ஒன்று

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  சகோதரி
  உண்மை நிலை இதுதான் கவியில் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உதிரத்தில் வளர்ந்த மொழி:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் ரூபன்
   கருத்திட்டமைக்கு நன்றி

   நீக்கு
 7. தேவை நேரத்தில் தேடுவாரிங்கே..அதுவே வாழ்வுமுறையாகிப் போனதுவும் கொடுமை!
  அருமை நிஷா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலோனோரின் அனுபவம் இப்படித்தானேப்பா!

   நீக்கு
 8. அருமையான கவிதை வரிகள்...உண்மை நிலையைச் சொல்லிவிட்டீர்கள்!

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!