19 அக்டோபர் 2016

மாலு பான் ரெடி!

மாலுபாண்
**************
இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வார்கள், சமைத்த கறியை வைத்து செய்யும் பன்!

பன்னுக்குள்  மீன், இறைச்சி, முட்டை மரக்கறி என எதைவேண்டுமானாலும் பிரட்டல் கறியாக செய்து  பேக் செய்து எடுப்பதே மாலு பான் எனப்படும், 

பாண் செய்ய தேவையான பொருட்கள்; 
*******************************************
கோதுமை மா 500கிராம். பத்து பன் செய்யலாம் 
ஈஸ்ட்-.20 கிராம்
சீனி 1 தே.கரண்டி
உப்பு ஒரு தே. கரண்டி 
வெதுவெத்ப்பான நீர் 250 மி.ல்லீ
பாண் செய்யும் முறை;
*************************

சீனி ஈஸ்ட்-. வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து வைக்கவும்
கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டு உப்பு ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
சப்பாத்தி மாவுக்கு பிசைவது போல் கைகளில் ஒட்டாத பதம் வந்ததும் காற்றுப்போகாமல் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
கறி செய்ய தேவையான பொருட்கள்
*****************************************

மீன் (ப்ரெஷ் மீன் அல்லது ரின்னில் அடைக்கப்பட்டது.)
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் பூண்டு, இஞ்சி, சீரகம் கடுகு கறிவேப்பிலை மிளகாய் தூள் சுவைக்கேற்ப
கறிசெய் யும் முறை;
***********************

ப்ரெஷ் மீன் என்றால்:சுத்தம் செய்யப்பட்ட மீன், மஞ்சள் துள், உப்பு சேர்த்து அவித்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு,வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு, வெங்காயம் வதக்கி உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்.
அடிப்பிடிக்காதபடி அடிக்கடி கிளறி கிழங்கு பாதிவெந்ததும் பிசைந்த மீன், சில்லி பவுடர் அல்லது கறிமிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்..
கறி நன்றாக அவிந்து சேர்ந்த்தும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கைகளில் வைத்து தட்டையாக தட்டி நடுவில் கறி வைத்து மூடி உருண்டைகளாக்கவும்.
கடைசியாக முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடித்து பூசி ஒவனில் 200_220 டிகிரி சூட்டில் 25-- 30 நிமிடங்கள் வைத்து பேக் பண்ணி கோல்ட் கலரில் வந்ததும் வெளியே எடுக்கவும்.
*பாண் நன்றாக ஊதி வர ஒவனை அடிக்கடி திறக்கக்கூடாது
**மரக்கறி பான் தேவை என்பவர்கள் மீன் போடாமல் துருவிய கேரட், லீக்ஸ் போட்டு கிழங்குடன் பிரட்டி எடுங்கள். அப்படியே முட்டைக்கு பதில் கொஞ்சம் ஓவனில் வைக்கும் முன் பாலை பூசி விடுங்கள், பான் மெதுமையாக இருக்கும், 
***அவசரமாகவும், இலகுவாகவும்  செய்ய வேண்டும் எனில் முழுக்கிழங்கை அவிய விட்டு தோலுரித்து பிசைந்து வெங்காயம் மசாலாவை தாளித்ததும் அவித்த கிழங்குத்துண்டங்களை போட்டு பிரட்டி எடுக்கலாம்,
****முட்டையை அவித்து கோதுடைத்து  பன்னுக்குள் அப்படியே வைத்தும் பேக் செய்யலாம்.

மாலு பான் ரெடி! ஆனால் யாருக்கும் கிடையாது!அனைத்தினையும் நாங்களே சாப்பிட்டு முடித்து விட்டோமாக்கும்!
******************************************

5 கருத்துகள்:

 1. ஆகா
  அடுத்தமுறை எங்களுக்கும் கொஞ்சவையுங்கள்

  பதிலளிநீக்கு
 2. ஆகா
  அடுத்த முறை எங்களுக்கும் கொஞ்சம் எடுத்து வைக்கவும்
  முந்தைய கருத்துரையில் எழுத்துப் பிழை நேர்ந்துவிட்டது
  மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
 3. சமீபத்தில்தான் பேக்கரியில் பன் வாங்கி அதற்குள் வெங்காயம், கேரட் வைத்து மூடி தோசைக்கல்லில் போட்டுப் புரட்டிச் சாப்பிட்டோம். மாலு என்றால் அர்த்தம் இன்றுதான் தெரிந்தது. நான் பெயர் என்று நினைத்திருந்தேன். (சுராங்கனி பாட்டைக் கேட்டு)

  பதிலளிநீக்கு
 4. நாவில் எச்சில் ஊறுகின்றது! மாலுப்பான் கிடைக்கல [[

  பதிலளிநீக்கு
 5. பான் என்றாலே அங்கு ப்ரெட் வகைகள்தானே. அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் இதைச் சாப்பிட்டது இல்லை ஆனால் இடையில் காய் வைத்துச் சைவம் செய்து உண்பதுண்டு. அங்கு நாங்கள் இருந்த பகுதியில் அருகில் இருந்த பேக்கரியில் ஃப்ரெஷ்ஷாக பான் கிடைக்கும் . நாம் கேட்பதைச் செய்தும் தருவார்கள். பிஸ்கோத்து முதல் எல்லாமே நாம் எதைச் சுட்டிக் காட்டிக் கேட்கிறோமோ அதைச் சுடச் சுட செய்துதருவார்கள். இலங்கையில் பேக்கரி மிகவும் பிரபலம். அங்கு சாப்பிட்ட இஞ்சி பிஸ்கோத்து போல (நல்ல டார்க் ப்ரௌன் கலரில் இருக்கும் ) எங்குமே இதுவரைச் சாப்பிட்டதில்லை. அத்தனை அருமையான சுவையுடன் இருக்கும். மிக மிக அருமையான சுவை.

  மிக்க நன்றி பான் என்று சொல்லி எனது பழைய நாட்களை நினைவுபடுத்தியமைக்கு

  கீதா

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!