15 அக்டோபர் 2016

கேள்விக்குள் ஒளிந்திருப்பது என்ன?



சமீபத்தில் ஒரு திருமண விருந்துபசாரம் எமது Hegas Catering Services ஊடாக இரவு விருந்துக்கு ஆர்டர் வந்திருந்தது.
என் நிர்வாகத்தின் கீழ் ஆறு உதவியாளர்களும் ஒரு வாகன சாரதியுமாக சரியான நேரத்துக்கு போய் சேர்ந்தாலும் சில பல காரணங்களால் பவ்வே மேசையை தயார் செய்வதில் சின்ன சின்ன சங்கடங்கள்
அன்றைய மெனுவாக கொத்துரொட்டி, பூரி, பிரைட் நூடில்ஸ், சோறு அதற்குரிய கறிகள், கூட்டுக்கள், பொரியல்கள் என... அனைத்தும் தயாராய் சென்றாலும் மெயின் உணவான பூரி, நூடில்ஸ், பரோட்டாக்கொத்து எப்போதுமே உடனடியாக மண்டபத்தில் இருக்கும் சமையலறையை பயன் படுத்தி தான் செய்வோம், உடனடியாக செய்து பரிமாறுவது தான் எமது சிறப்பே! 
சுவிஸில் எப்பக்கத்தில் இருந்தாலும் விருந்து மண்டபத்து சமையலறை யில் அடுப்பு வசதிகள் இல்லை எனில் அதற்கேற்ப காஸ் அடுப்பு ஒழுங்குகளோடு செல்வோம்.
அன்றைய நாள் விருந்தில் மேலே குறிப்பிட்ட் உணவுகளை ஆயத்தம் செய்ய எமக்கு ஒரு மணி நேரம் தேவை என்பதனால் மூன்று உதவியாளர்கள் அதற்கான ஆயத்தங்களிலும் ஒருவர் பாத்திரங்களை கழுவுவதிலும் இருவர் பவ்வே மேசைக்குரிய ஆயத்தங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அனைத்தும் என் மேற்பார்வையில் நடைபெறும் என்பதனால் பெண் என்பதனால் பலரின் பார்வை என்னை ஆச்சரியமாய் பார்ப்பது சாதரணமானது. நீங்களா இதை முன் நின்று செய்கின்றீர்கள் என கேட்பவர்கள் சிலர்?
****எங்கள் வீட்டுப்பெண்கள் இப்படி செய்யமாட்டார்கள் நீங்கள் கிரேட் அக்கா என என்னை விட பெரியவர்களும் அக்கா என அழைத்து என் பணியின் கனம் உணர்ந்து மனமார்ந்து பாராட்டி தொடர்ந்தும் எம்மை ஊக்குவிப்பவர்கள் பலர்!
*என்னிடம் பணி செய்வோரை நான் என்றுமே வேலையாட்களாய் பார்த்ததில்லை என்பதனால் அவர்களும் எம்மை வேறு படுத்தி பார்ப்பதில்லை.
அன்றைய விருந்தின் முடிவில் அனைத்தினையும் நான் சொன்னபடி ஒதுக்கி வாகனத்தில் ஏற்றுவதற்காக பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த ஒரு தம்பியிடம் சென்று ஒருவர் தம்பி சாப்பாடு எல்லாம் நலல் ரேஸ்டாக இருக்குது! யார் இதை ஒழுங்கு செய்தது? யாரிடம் ஆர்டர் விடயமாக பேச வேண்டும் என கேட்கவும். அவர் என்னை காட்டி அக்காவிடம் பேசுங்கள் என்றார்.
உடனே பெண்பிள்ளையா நடத்துவது என்பது போல் என்னை நட்பில்லாமல் ஒரு மாதிரி பார்த்து விட்டு.... அப்ப நீ எடுபிடியோ தம்பி? 
கேள்விக்குள் ஒளிந்திருப்பது என்ன?

5 கருத்துகள்:

  1. ji this is male chuvanistic society
    people would not like to give credit to women
    the same people would not appreciate boys/gents who support ladies...but you carry on

    பதிலளிநீக்கு
  2. கேள்வியில் ஒரு இளக்காரத்தனமும், நையாண்டியும், பெண் மேலாளரா ? என்ற கர்வமும் இருக்கின்றது.

    கிடக்கட்டும் விட்டுத்தள்ளுங்கள் இவர்களை எல்லாம் மனதில் ஏற்றினால் நமது வேலைகள்தான் பாதிக்கும் அடுத்த சாதனைகள் தடையாகும்.

    பதிலளிநீக்கு
  3. கேள்வி கேட்போர் கேட்கட்டும்...
    நாம் அதற்கான பதிலாய் வாழ்வைக் காட்டுவோம்...

    ஓளிந்திருப்பதை பற்றி கவலையின்றி ஒளிவீசுங்கள் அக்கா....

    பதிலளிநீக்கு
  4. கேட்பவர் கேட்கட்டும்.... நமக்குப் பிடித்த நல்ல விஷயத்தைத் தொடர்ந்து செய்வோம்.

    பதிலளிநீக்கு
  5. கேள்வியைப் புறம் தள்ளுங்கள் சகோதரி/நிஷா தோழி! பேசுபவர்கள், கேள்வி கேட்பவர்கள் கேட்டுவிட்டுப் போகட்டும்! அவர்கள் மனப்பக்குவம் அவ்வளவுதான் என்று விட்டுவிடுங்கள். உங்கள் திறமையை முன்னிருத்துங்கள்! நாம் புறம் தள்ளி முன்னேறும் போது இந்த வகைப் பேச்சுகள் தானாகவே நீர்த்துப் போய்விடும்! நீங்கள் ஒளிர்வீர்கள்! தங்கள் சாதனைகள் பல்கட்டும்!!

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!