22 மே 2016

இலங்கை தேசத்திற்காய் இறைவா! நீர் வர வேண்டும்

இலங்கைக்கான வேண்டுதல்களை செவி கொடுத்து கேட்க இறைவனுக்கும் மனமில்லை போலும்! அழிவுகளும் அழிப்புக்களும் தொடர்ந்து கொண்டெ இருக்கின்றது. அம்மக்களும் சாம்பலிலிருந்து மீளும் பீனிக்ஸ்களாய்தம்மை தாமேகட்டி எழுப்பினாலும் மீண்டும்மீண்டும் அழிவுக்குள் இரையாவதுமாய் தான்  இருக்கின்றார்கள்!
சின்னஞ்சிறிய தேசம், யுத்தம், சுனாமி, யுத்தம், வெள்ளம், புயல், என எத்தனை தான் தாங்கும்? கடந்த சில வாரங்கள் இயற்கையின் கால் மாற்றத்தினால் கடும் வெயில், வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் புற்றுக்களின் குடியிருக்கும் சகல ஜீவராசிகளும் குடியிருப்புக்கள் நோக்கி குடிபுகுந்து மக்கள் தூக்கத்தினையும் நிம்மதியையும் பறித்தன!முக்கியமாக பாம்பினங்கள்
இலங்கையின் கிழக்குப்பகுதியின் இருக்கும் எங்கள் வீட்டுக்குளேயே தினம் நான்கைந்து பாம்புகள் வந்தும் அடித்துகொல்வதுமாய் பதட்டமான சூழலில்இருந்தார்களாம்! நீர்நிலைகளில் நீர் வற்றிப்போக குடிநீர் தட்டுப்பாட்டுடன் வெயில்க்கொடுமையில் மக்கள் மயங்கி விழுவதும் மரணமடைவதும் செய்திகளாகின!வெயிலின் அகோரத்தினால் வீட்டினுள் நிறுத்தியிருந்த மோட்டார் வண்டி வெடித்து வீடொன்று எரிந்த சம்பவமும் இலங்கை வடக்குப்பகுதியில் நடந்தது!
இவ்வாரமோ காற்றழுத்த வேகம் புயலையும் மழையையும் உருவாக்க நள்ளிரவின் வீட்டின் கூரைகள் பறந்தோட, வீதியெங்கும் மரங்கள் ஒடிந்து விழ போக்குவரத்துப்பாதிக்கப்பட்டு,மின் தடைகள் தொடர இலங்கையின் பிரதான நதியான களனி ஆறும் இதர நீர் நிலைகளிலும் நீர் மட்டம் உயர்ந்து கொழும்பும் அதை அண்டிய மத்திய பிரதேசங்களும் வெள்ளத்தினுள் மூழ்கியது.
மழையினால் நீர் மட்டம் உயர நீர்வாழ் உயிரினங்களும் விடுகள் தேடி வர எங்கும் எதற்கும் வித்தியாசமில்லாத சூழலில் மின் தடையும் சேர்ந்து இலங்கையே அழுகின்றது! வெள்ளம் எனில் சாதாரண வெள்ளம் இல்லாமல் மூன்று இலட்சம் மக்களை இடம் பெயர வைத்து கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்துச்சென்று கொண்டிருந்தாலும் இன்ஞும் அதன் அகோரம் தொடர்கின்றது.இதற்கிடையில் தொடர் மழையினால் மலையக கிராமங்களில் மண் சரிவுகள் ஏறட்ட கிராமமே மண்ணுக்குள் புதைந்து போனாலும் இதுவரையான் இழப்பின் எண்ணீக்கை தெளிவில்லாத நிலையில் இருக்கின்றது!
மக்கள் இழப்புக்களை சந்திக்க இன்னும் சிலரோ அன்று எங்கள் மேல் குண்டு போட்டதால் இன்று இயற்கை உங்களை கொல்கின்றதென பேச பாதிக்கப்பட்டமலையகதமிழர்கள் ஏழைகளும் தமிழர்களுமாயிருப்பதால் அரசின் நிவாரணமும் மந்தகதியில் செயல்பட மக்கள் உயிருடன் உணர்வுடன் பரிதவிக்கின்றார்கள்!வெள்ளத்துக்கு தெரியுமா? தமிழன், சிங்களவன், முஸ்லிம் எனும் இனமத வேற்றுமை? அது நிறம், மணம், குணம் பார்த்தா தேடித்தேடி அழிக்கின்றது?
இனியும் நிலஅதிர்வுகளும் மண் சரிவுகளும் கடல் கொந்தளிப்புக்களும் தொடரும் என வானிலைமையம் எச்சரித்திருக்கின்றது! அங்கே எம் உறவுகளும் உயிரோடும் உணர்வோடும் வாழ்கின்றார்கள் என்பதையும் அவர்கள்ளையும் இவை அனைத்தும் பாதிக்கும் என்பதையும் நாம் ஏன் உணராமல் போனோம்?
என்ன செய்வோம்? ஏது செய்\வோம்? எங்கே தான் செல்வோம்?

இலங்கை தேசத்திற்காய் இறைவா! நீர் வர வேண்டும் என் தேச மக்களுக்கே விடுதலை தரவேண்டும் அழிவில் வாழும் மக்கள் அமைதி வழி வாழ அருள் நீர் தர வேண்டும் இருளையெல்லாம் அகற்றி பெரு வெளிச்சம் காண இறைவா! நீர் வர வேண்டும் கண்ணீர்கள்,கவலைகள்,கஷ்டங்கள் போக்க கருணை நீர் காட்ட வேண்டும் காணாமல் போகும் உறவுகளை மீண்டும் கண்டு மனம் குளிர இறைவா!நீர் வர வேண்டும் நாதியற்று தவிக்கும் என் தேச மக்களுக்கு நாடொன்று அமைத்து தர இறைவா!நீர் வர வேண்டும் நாளெல்லாம்கேட்கும் கதறலின் சத்தம் காணாமல் போக இறைவா!நீர் வர வேண்டும் நோய் நொடிகள் அகற்றி கடலலைகள் காத்த என்னருமை உறவுகள் காலனோடு போராடி,காலத்தை வென்று பல வருஷம் வாழ இறைவா!நீர் வர வேண்டும் இறைவா!நீர் வர வேண்டும்
அழிவிலிருந்து காத்து அமைதி தர
இறைவா!சீக்கிரம் நீர் வர வேண்டும்!
*********************************************
2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழீழப்போரின் இறுதி நேரம் மனம் கதறி வேண்டியது! இன்றும் பொருந்தும்!

8 கருத்துகள்:

 1. கருணை காட்டுவீர் கடவுளே...

  பதிலளிநீக்கு
 2. கட்டுரைக்கும் கவிதைக்குமான
  வித்தியாசத்தை மிக எளிதாக
  புரிய வைத்தப் பதிவு

  தகவலாக பதிவைப் படித்துவந்த எனக்கு
  கவிதையைப் படித்ததும்
  கண் கலங்கத் துவங்கியது

  இறைவனைத் தான் நம்ப வேண்டும்
  வேறு வழி ?

  பதிலளிநீக்கு
 3. கடினமான நேரம்.இடர்பாடுகள் நீங்கி அமைதி கிடைக்க பிரார்த்திக்கிறோம்

  பதிலளிநீக்கு
 4. இலங்கையின் நிலை சீரடைய இறைவனை பிரார்த்திப்போம்!

  பதிலளிநீக்கு
 5. நெஞ்சை உலுக்கும் செய்திகள். கவிதையின் உருக்கம் கடல் கடந்து இருக்கும் உங்கள் பதற்றத்தினை தெரியப் படுத்தியது. இங்கே, தமிழ்நாட்டில்,இலங்கையில் நிகழ்ந்த பேரிடர் பற்றி, ஊடகங்கள் மக்களிடம் சரியாக சொல்லவில்லை.தேர்தல்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. கடவுள்தான் நம் தேசத்துக்கு கருனைகாட்ட வேண்டும் .

  பதிலளிநீக்கு
 7. செய்திகள் உண்மையாகவே கலங்க வைக்கின்றதுதான். இலங்கை சீக்கிரம் இடர்பாடுகளிலிருந்து மீண்டிட வேண்டும் என்று வேண்டுவோம்...வேறு வழி?

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!