09 பிப்ரவரி 2016

அப்பப்போ தோன்றியவை!



என்னவுண்டு சொல்லிவிடு
நின்மனதில் என்னவுண்டு
நித்தம் நித்தமென் மனதில்
நீயிருக்க......
உன் மனதில் நானிருக்க
நின மனதை தந்து விடும் `
எணணமுண்டோ சொல்லி விடு

**********************

மகிழ்ச்சியான மனதுடனே
நெகிழ்ச்சியாக நீ பேசி
என் கவலை போக்கிய நாட்கள்
இன்றும் பசுமையாக என் மனதில்
உன் நினைவுகளை தானாய்
தாலாட்டி செல்வதை 
நீ அறிவாயா
***************

உந்தன் உறவானதனால் 
எந்தன் சித்தம் கலங்கியதே 
சிந்தனைகள் நீயானதால்
 வேதனைகள் அண்டியதே
நித்தம் உனை நினைப்பதினால் 
நெஞ்சம் கலங்கி பித்தானதே
இத்தனைக்கும் என் அன்புனக்கு 
இற்றைவரை புரியல்லையே
 *****************************

மாறியதும் நீதான் 
எனை மாற்றியதும் 
உன் அன்புதான்
தேற்றியதும் 
தினம் தேடியதும்
உன் அன்பைத்தான் 

இன்றும் தேடுகின்றேன் 
காணாமல் போன
மாயம் தானென்ன வென்று சொல்லிவிடு
தேடாமல் நான் இருப்பேன் என் உயிரே
****************************

 
 புகைப்படங்களை இணையத்தில் 
 பகிர்ந்தவர்களுக்கும் நன்றி!

வலைப்பூவுக்காக மீள் பதிவு 
எழுதப்பட்ட காலம்

08-12-2010 அதற்கு முன்னரும்!



11 கருத்துகள்:

  1. உணர்வுப்பூர்வமாய் இருக்கின்றன நிஷா

    பதிலளிநீக்கு
  2. அப்பப்போ தோன்றியவையுடன் இறுதியில் பதிந்த படமும் மிக அருமை

    பதிலளிநீக்கு
  3. அப்பப்போ தோன்றியவை என்றாலும் அழகான காதலின் ஏக்கம் நிறைந்த வரிகள்! அருமை.

    சரி சகோ ...மகிழ்வான காதல் வரிகள் எழுதுங்களேன். பொதுவாகவே காதல் என்றால் பிரிதல் ஏக்கம் நிறந்த வரிகள்தான் பொதுவாக எழுதப்படுகின்றது! அதனால்தான்..இந்த வேண்டுகோள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சியான காதலைவிட சோகமான காதல்தான் ரசிக்க வைக்கிறது...பூரிக்கட்டையால் அடிவாங்கி சோகமாக இருந்தாலும் என் காதல் இன்று வரை இனிக்கதான் செய்கிறது

      நீக்கு
  4. நிசாவா இது?
    நேர்கொண்ட வார்த்தைகள்...
    நிற்கவைத்து கேள்வி கேட்கும் உண்மை..
    போராடியேனும் தன் கருத்தை நிலைநாட்டும் வலிமை..
    ம்ம்ம்ஹீம்....இது சந்தேகமா இருக்கு...

    பதிலளிநீக்கு
  5. அப்பப்போ தோன்றியவை இப்போ அழகாக அருமையாக இருக்கு, பகிர்வுக்கு நன்றி,, தொடருங்கள்,

    பதிலளிநீக்கு
  6. //காணாமல் போன
    மாயம் தானென்ன வென்று சொல்லிவிடு
    தேடாமல் நான் இருப்பேன் என் உயிரே//
    அருமையான வரிகள் மிகவும் நன்று வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. அப்பப்போ தோன்றிய அழகான கவிதைகளை ரசித்து வாசித்தேன். அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    அழகிய வரிகள் இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. உணர்வுக் குவியல். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. அப்பப்போ தோன்றியவை இனி அடிக்கடி தோன்றட்டும்...
    பெரிய கவிதை....
    சின்னக் கவிதை...
    அப்பப்பா... எப்படி இதெல்லாம்...
    உங்கள் கருத்துக்கள் நிறைவாய் இருக்கும்...
    இந்த சின்னக் கவிதைகளும் நிறைவாய்... அருமையாய்... அழகாய்... இருக்கு...
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!