11 பிப்ரவரி 2016

உழைப்பாளி எங்கள் விவசாயி!


உலகம் போற போக்கைப்பாத்து
ஒளிஞ்சி கொண்ட எங்க ஆண்டவரே!
கொஞ்ச மனமிரங்கி எங்கள பாருங்க!

வியர்வை சிந்த மண்ணக்கொத்தி
பசள போட்டு பதப்படுத்தி
வித விதமா விதை விதைச்சி
ஊருக்கெல்லாம்
சோறும் போட்டேங்க!
இப்ப நானு வாழ சோறு கேட்டு
நாயி மாதி அலையிறேனுங்க
நானு செய்த பாவம் என்னங்க?

உயிரக்குடுத்து காடு கழனி
வெட்டிக்கிட்டோமுங்க,
வாயைகட்டி வயித்தக்கட்டி
வீடு ஒண்ணும் கட்டிக்கிட்டோமுங்க!
நாங்க தாங்க படிக்கல்ல
நம்ம புள்ளயாச்சும் படிக்கணுமிண்ணு
ஊரெல்லாம் ஒண்ணு சேர்ந்து
பள்ளிக்கூடமும் கட்டிக்கிட்டோமுங்க!

கோவில் குளம் எல்லாம் கட்டி
கோபுரமும் பெரிசாக்கட்டி
நோய் நொடின்னு வந்திட்டா
வைத்தியரு ஆசுப்பத்திரி
எல்லாமே  இருந்திச்சிங்க.
நாடுதாங்க நமக்கில்ல
வீடாச்சும் இருக்குதேண்ணு
நிம்மதியா தூங்கினேனுங்க!

வயசான காலத்தில ஓய்ஞ்சிருக்க
நினைச்சி நானும் கோட்டை
எல்லாம் கட்டிகிட்டேனுங்க.
இப்ப நம்ம வாழ்வே சிதைஞ்சி போச்சிங்க
வீடும் இல்ல வாசலும் இல்ல
பெண்டு பிள்ளைக படும்பாட
பாத்து நமக்குக்கண்ணீர் வரல்லங்க!
கண்ணீரெல்லாம் வத்திப்போச்சுங்க!

எண்ட ரத்தத்தால நிறஞ்சி போச்சிங்க.
ராசா மாதி இருந்தேனுங்க.
எல்லாமே இருந்திச்சிங்க
இப்ப எல்லாமிருந்தும் ஒண்ணுமில்லாம
நாதியத்துப்போயித்தேனுங்க
நா வறண்டு தவிச்சிப்போய்
நா தினமும் சாகுறேனுங்க. .
நானு செய்த பாவம் என்னங்க?

கல்லுப்போல கிடக்குற ஐயாசாமி
பெரிய சாமி,சின்னச்சாமி 
எல்லாச்சாமியும் ஒண்ணு சேருங்க!
எங்க மேல இரக்கம் காட்டுங்க
சீக்கிரமா வழியக்காட்டுங்க.
நானு நிம்மதியா சாகணுமுங்க.


படங்கள் இணையத்தில் எடுத்தவை!

13 கருத்துகள்:


 1. //நானு செய்த பாவம் என்னங்க??////

  நெற்றி வியர்வை நிலத்தில் விழ வேலை செஞ்சது தப்புங்க. ஊரை ஏற்றி பிழைச்சு இருந்தா இந்த சாமிக்கிட்ட கெஞ்சாமல் இருந்திருக்கலாம்

  பதிலளிநீக்கு
 2. வேதனையாக இருக்கிறது .. கவிதை நன்று நிஷா

  பதிலளிநீக்கு
 3. கவிதை சோகமென்றால்...படம் பல கதை சொல்கிறது..
  ஈழத்தமிழ் கமழ்கிறது....அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஈழத்தமிழ் இப்படி இருக்குமா என எனக்கு தெரியாது, ஆனால் கிராமத்து விவசாயிக்கு இலக்கிய,இலக்கண தமிழ் தெரியாது என்பதால் அவன் மனக்குழுறலை அவன் வார்த்தையில் எழுத முயற்சி செய்தேன்!

   நீக்கு
 4. பெண்டு பிள்ளக படும்பாட
  பாத்து நமக்குக்கண்ணீர் வரல்லங்க!
  கண்ணீரெல்லாம் வத்திப்போச்சுங்க!

  வேதனையின் உச்சகட்டம் இன்றைய அவல நிலையை அழகாக சொன்னீர்கள் கல்லுச்சாமியிடம்....

  பதிலளிநீக்கு
 5. ஐயோ.. என்னப்பா இது.. கண்களைக் குளமாக்கும் வாழ்க்கை... அதை அப்படியே படம்பிடித்துக்காட்டும் வரிகள்.. மனம் பிசையும் வலி.

  பதிலளிநீக்கு
 6. நாடு..போகிற போக்கை பார்த்தால்...யாருமே..நிம்மதியா சாகமுடியாதுங்க.......

  பதிலளிநீக்கு
 7. சொல்ல வார்த்தை வரலை..

  பதிலளிநீக்கு
 8. படங்களும் வரிகளும் வேதனையாக உள்ளது மனம் கலங்கி விட்டது உண்மையான நிலையும் இதுதான்

  பதிலளிநீக்கு
 9. புதுமையான உங்கள் முயற்ச்சி அருமை கவிதை சூப்பர் தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 10. அடேங்கப்பா... புதுமையான கவிதையாவுல்ல இருக்கு....
  விவசாயியின் வேதனையைச் சொல்லி... இன்றைய நிலையை மிக அருமையாக எழுதியிருக்கீங்க...
  அருமை அக்கா... அருமை.

  பதிலளிநீக்கு
 11. வரிகளில் உணர்வுகள் வழிகின்றன. அருமை.

  பதிலளிநீக்கு
 12. ஒரு வலியை உணர்ந்தவரே இன்னொருவரின் வலியை அனுமானித்து அழுத்தமாக எழுத இயலும். இந்தக் கட்டுரை அவ்வாறானதே!!!!

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!