14 நவம்பர் 2015

சொல்தலும் செய்தலும்.... செந்தணல் போன்றதே!

ஆம் ஒரே வார்த்தையாய் ... பேசாதே! பாராதே! செய்யாதே! இப்படி தே தே என தேவைக்கும் மேலேசொல்லும் போது சொல்லும் நமக்கு  நம் சொல் தேனாய் தான் இனிக்கின்றது. அதை நாமே செயல் படுத்தி பார்க்கும் போது தான் அதன் கஷ்ட நஷ்டம் புரிகின்றது...!

ஆனாலும்??

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி.என்பர்.அது எனக்கு இச்சூழலில் நன்கு பொருந்தும் எங்கேயோ எப்படியோ இருந்த நான் இந்தபக்கம் வந்து .. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல திக்குதெரியாமல்அலையும் படி ஆனதே என முதல் நாள் நொந்தே போனேன்! வலையும் வேண்டாம், மீனும் வேண்டாம் ஆளை விடுங்கப்பா என சம்ஸிடம் சொல்லியும் ஆனது! 

ஆனாலும் குமார்  விடுவதாயில்லையே! தளம் திறந்ததோடு தன் வேலை முடிந்தது என செல்லாமல் என்னை ஊக்கப்படுத்தி அதை போடுங்க அக்கா இப்படி எழுதுங்க அக்கா என பதிவும் போட வைத்து... அதுக்கு விளம்பரமும் செய்து... இன்னும் கடவுட்,பேனர் தான் பாக்கி...எனும்படிக்கு  என்னை பதிய வைக்க தன் சிந்தனை சிறகை விரித்து என் மனசெல்லாம் பரந்து பறக்கும் குமார் இருக்க என் மனதில் தோன்றுவதை பதிவதற்கு பயம் ஏன் எனும் தைரியத்தினையும் தந்து விட்டார். 

தம்பியுடையான் சண்டைக்கஞ்சானாம்.. நானும் அஞ்ச மாட்டேன்பா.. அதான் எங்க சேனைப்படை எனக்கு பாதுகாப்பா தினம் தினம்  திட்டி திட்டி, தட்டிக் கொட்டி .. அப்படி செய்யக்கா.. இப்படி செய்யக்கா உன் கூட யாமிருக்க பயமேனக்கா என வழி நடத்துகின்றதே! என் கைவிரலை பிடித்து வழி நடத்தி எழுத வைக்காதது தான் பாக்கி! 

நினைத்து பார்க்கின்றேன்.. இத்தனைக்கும்  நான் என்ன தவம் செய்தேன்? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வாழ்ந்து... இது வரை முகம் பாராமலே... மனம் உணர்ந்து என்னை உயிர்ப்பிக்கும் இவர்கள் அன்புக்கு நான் என்ன செய்து விட்டேன்?அபிப்ராய பேதங்களும் புரிதலின்மையும்.... உடன் பிறந்தோரையேயே விரோதியாக்கும் இக்காலத்தில் நிஷா அக்கா என அழைத்து அன்னையைபோல் பாசம் காட்டி என்னுள் அடங்கி என்னை அடக்கும் அன்பை கொட்டும் இவர்கள் யார்?

சொல்லத்தானே வேண்டும்!

எங்கள் சேனையில் அன்பு மட்டும் தான் பேசும். மதமும்,இனமும் மொழியும் பேசுவது என்ன.. உரசக்கூடச்செய்யாது. எம் அன்பு புரியாதோருக்கு புதிர் தான். புரிந்தோரோ... எம் ஜோதியில் தாமும் ஒருவராகி என்னுள் உயிர்ப்பர்!

ஆம் உயிர்ப்புத்தான்... மனிதம் மறந்த இப்பூவுலகில் மனிதராய் வாழ நாம் ஒவ்வொரு நொடியும் உயிர்க்க வேண்டி இருக்கின்றதே! எனக்கு மட்டும் விதிவிலக்காகுமா? 

என்னை சுற்றி ஒரு வட்டம் என்னை உயிர்ப்பிக்க.... இரவும் பகலும் இருபத்தி நான்கு மணி நேரமும் பாதுகாப்பாய் இருக்கின்றார்கள் என்பதே என்னை வானுயரும் உயரத்தில் கொண்டு போய் விட்டிருக்கின்றது என சொல்வேன்..! 

நாடோடியாய் புகலிடம் தேடி வந்த நாட்டில். நாலு பேர் பார்த்து ஆச்சரியப்பட நான் ஏதேனும் சாதித்தேன் எனில் அதற்கு முதல் காரணம் நான் கொண்ட இறை நம்பிக்கை எனில் இறையின் வழிகாட்டலாய் என்னை வழி நடத்தியதெல்லாம் என் சுரேஷ் அண்ணா,சுதா அண்ணா,முஸம்மில், சம்ஸ், ஹாசிம்,, குமார், பானு, ஜானி எனும்பெரும்படையணி தரும் உந்து சக்தி தான். இவர்களின் உற்சாகம் தரும் வார்த்தைகள் தான் என்னை இத்தனை நாளும் இயக்கியது என்பேன். 

பூஜ்ஜியமாயிருந்த என்னை... உன்னால் முடியும்மா.. நீ சாதிப்பே என என்னை உயர்த்திய ஒவ்வொருவர் பற்றீயும் அவர்கள் எனக்காக செய்தவை பற்றியும் தான் நான் முதலில் உங்களுடன் பகிரபோகின்றேன்.. 

நானும் பிறந்தேன், வாழ்ந்தேன், மறைந்தேன் என்றில்லாமல் எதையேனும் செய்தேன் என எவரேனும் சொன்னால் அதன் பின்னால் இறைவனின் கருணையோடு.. என் மேல் நான் கொண்ட நம்பிக்கையோடு ,என்னவர்,என் மகன், மகள்  துணை மட்டுமல்ல... என்னை சுற்று பூச்சரமாய் சூழ்ந்து நிற்கும் என் அன்பு பாசமலர்களும் தான் காரணம்..! 

எதையும் சொல்தல் எளிது தான்..அதை செய்தல் செந்தணலை கடப்பது  போலிருந்தாலும்... என் பாதம் படும் இடமெல்லாம் குளுமையாயிருக்க வேண்டுமே என எனக்காக பாடு படும் என் உடன் பிற்வாமல் என்னுடன் பிறப்பாய் ஆனோருக்கு இந்த வலைப்பூவும் பதிவுகளும் சமர்ப்பணம்!

இப்பட்டியலில் இனிமேல் இதை படிக்கும் நீங்களும் சேரலாம்.

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

15 கருத்துகள்:

 1. வாழ்த்துகள். என்னை போன்றோர்கள் தொடர்வதற்கு ஒரு ஈமெயில் சப்ஸ்கிரிப்ஷன் விட்ஜெட்டும் வைக்கலாமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி! அப்படியே செய்கின்றேன் ஐயா!

   நீக்கு
 2. கடலின் ஆழத்தில் கண்டெடுக்கும் முத்தினை முத்தாக்கிட எத்தனை வகை செய்தாலும் யார் யார் அதை வடிவம் செய்தாலும் அது முத்தானதால் கிடைத்த பாக்கியமல்லவா அவ்வாறே முத்தாய் இருக்கும் உங்களை மிளிரச்செய்வதில் அனைவர் பங்கும் உங்களை வந்து சேர்கிறது உங்களின் கருத்துகள் ஆக்கங்கள் தனிக்கோர்வையாய் அமையும் போது அதனை வெளியிடும் போது கிடைக்கும் ஆனந்தமே தனி நாம் புத்தகங்களை வெளியிடுகிறோமே அந்த நிலையில் இதுவும் சேர்கிறது தொடருங்கள் இது காலாகாலம் உங்கள் தடங்களாகும் வாழ்த்துகள் என்றும் உங்களோடு நாங்களிருக்கிறோம் உடன் பிறவாச் சகோதரங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிப்பா! உங்கள் ஆதரவு தான் என் வெற்றிக்கு வித்தே.

   நீக்கு
 3. வணக்கம் தங்களின் எழுத்துலக பிரவேசத்துக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறேன் கண்ணில் கண்டதை, காதில் கேட்டதை தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் இருக்கிறோம் படிக்க......
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெம்ப நன்றி! தொடருங்கள் தொடர்வோம்.

   நீக்கு
 4. உங்கள் திறன் கண்டு ஊக்குவிப்பவர்களுக்கு
  மனமர்ந்த நல்வாழ்த்துக்கள்

  நீங்கள் பதிவுலகில் நிச்சயம் ஓர்
  உயர்விடம் அடைவீர்கள்
  அறிகுறிகள் தெரிகிறது

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி ஐயா!

   நீக்கு

 5. தங்களின் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெம்ப நன்றி. உங்கள் ஆதரவை தொடர்ந்து தர வேண்டுகின்றேன்.

   நீக்கு
 6. வணக்கம்...

  நலம் நலமே ஆகுக.

  தங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன்...
  முடிந்தால்... முடியும் போது எழுதுங்கள்...

  http://vayalaan.blogspot.com/2015/11/12.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் டபிள் ஒக்கேங்க சார்!
   டர்ண்ண்ண்ண்ண்ண்ண்@

   நீக்கு
 7. மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தரவேண்டுமா? அன்பு உங்கள் உடன்பிறந்தது.. எழுத்து உங்களுடன் உருவானது.. எனவே தயக்கம் உடைத்து எண்ணங்களை எழுத்தாக்கிப் பகிருங்கள்... உங்கள் வலையெழுத்தின் பின்னாலிருந்து வளப்படுத்தும் நல்லுள்ளங்களுக்கு அன்பான பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா எல்லாம் உங்களை பார்த்து கற்றுக்கொண்டது தானே! அனைத்து புகழும் நல்ல சூழலையும் நட்புக்களையும் தந்த இறைவனுக்கே!

   உங்கள் ஆலோசனைகள் ஆதரவை என்றும் தொடருங்கள் அக்கா!.

   நீக்கு
 8. பதிவுலகத்திற்கு வரவேற்கிறேன். பதிவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள்.... தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!