23 ஆகஸ்ட் 2019

அமேசான் மழைக்காடுகள் எரிந்து கொண்டிருக்கிறன..

உலகத்தின் மிகக் குறைந்த கவனத்தைப் பெற்ற மற்றொரு பேரழிவு!
எங்கள் பூமி எரிந்து கொண்டிருக்கிறது!
நாம் வாழும் பூமிக்கு தேவையான சுவாசக்காற்றின்  20% வீத ஆக்ஸிஜனைக் கொடுக்கும் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் எரிகின்றன.
உலகின் மிகப் பெரிய உயிர்ப் பெருந்திணிவும் பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான்_காடுகள்_பற்றி எரிகிறது.


ஆம் அமேசான் மலைக்காடுகள் .....!
உலகத்தின் சுவாசம் 
பூமிப்பந்தின் நூரையீரல் 
பூமியில் ஈரப்பதமான இடங்களில் முக்கியமானதுமாகும்.!
பிரேசில்,பொலிவியா மற்றும் பராகுவே: அமேசானின் பரந்த பகுதியை தம் வசம் வைத்திருக்கும் மூன்று நாடுகளிலுமிருக்கும் அமேசான் மழைக்காடுகள் மூன்று வாரங்களாக தொடர்ந்து எரிகின்றது.
பூமியின் குளிரான இடங்களில் ஒன்றான சைபீரியா தீப்பிடித்து எரிகிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகள் பல வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெட்ரோலிய மற்றும் கணிம வள நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அதில்  60% அமேசான் காடுகளை உள்ளடக்கிய பிரேசில் முக்கியத்துவம் பெறுகின்றது.
 பூமியில் தண்ணீர் வளமிக்க நாடுகள் பட்டியலில் முதலாவது இடத்தில் இருப்பது பிரேசில் 
 பூமியின் மனிதர்கள் சுவாசிக்க தேவையான பிராண வாயு / ஒட்சிசனில் 20% வீதம் அமேசான் காடுகளின் மூலமே கிடைக்கின்றது.
 மழைக்காடுகள் கார்பனை உறிஞ்சி  பிராணவாயுவான ஆட்சிசனை வெளியிடுகின்றன.
⧪ பூமியின் 10% விலங்கினங்கள், 
⧪ 40,000 மர செடி வகைகள்
 3000 பழ வகைகள் 
அரிய வகை தாவரங்கள், கனிமங்களை தன்னகத்தே மறைத்து அமேசான் காடுகளை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.
அரசியல் ஆளுமைகளின் அதிகார, பேராசையினால் ஏற்பட்ட வெறி காட்டுத்தீயாக எரிந்து கொண்டிருக்கின்றன. முழு வனத்திலும் 30 வீதம் முற்றாக  சாம்பலாகியும்  தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கின்றன.
அமேசன் காட்டின் வளங்களை நாட்டின் முன்னேற்றத்துக்காக பயன் படுத்துவதாக பிரோசிலிய அதிபர் பொல்சானாரோ தன் தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தார். அவரின் வாக்குறுதியை நிறைவேற்ற அங்கே வாழும் பழங்குடி மக்கள் தடையாக இருப்பதனால் அவர்களை காடுகளை விட்டு துரத்தி விட செயற்கையான முறையில் காட்டுத்தீ ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என அமேசான் Waorani  பழங்குடி மக்கள் குற்றம்சாட்டுகின்றார்கள்.
ExxonMobil,TotalSA,Shell போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து அமேசான் காடுகளில் தங்குதடையின்றி பெட்ரோலிய வளத்தை சுரண்டுவதற்கு  தடையாக  அமேசான் பழங்குடிமக்கள் இருக்கின்றார்கள். 
சில மாதங்களுக்கு முன் அமேசான் காட்டுப்பகுதியின் பெற்றோலியம், போன்ற கனிம வளங்களை தோண்டி எடுக்க அரசின் ஆதரவுடன் திட்டமிட்ட பெற்றோலிய நிறுவனங்களை அமேசான் பழங்குடி மக்கள் நீதி மனற உத்தரவின் மூலம் தடுத்திருக்கின்றார்கள்.
அமேசான் காடுகளுக்கு அருகே வாழும் பழங்குடி மக்களை வெளியேற்ற முயற்சிப்பதும் அதனை எதிர்த்து வழக்கு தொடுத்து வெற்றி பெறும் போது காடுகளில் செயற்கை தீ விபத்துகளை ஏற்படுத்தி அவர்களை அச்சுறுத்தி வெளியேற்ற நினைப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
காட்டுப்பகுதியை அண்டி வாழும் கிராமத்து மகக்ளும் விவசாய நிலங்களை உருவாக்கும் திட்டத்தில் சட்டவிரோதமான முறையில்  செயற்கையாக காடுகளுக்கு தீவைத்து சாம்பலாக்குவதை அரசு அனுமதிக்கின்றது.
காட்டுத்தீ பரவிக்கொண்டிருக்கும் காலத்தில் அரசாங்கம் கூறிய அதிக வறட்சி, அதனால் உருவான காட்டுத்தீ எனும் நொண்டிச்சாக்குகளை சூற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மறுத்திருக்கின்றார்கள்.
கடும் வறட்சிக்காலங்களிலும். எல் நீனோ வருடங்களிலும் ஏற்படாத அழிவுகளை இவ்வருடம் இக்காட்டுத்தீ உருவாக்கி இருக்கின்றன. . முன்னெப்போதும் இல்லாத அழிவினை அமேசான் வனம் சந்தித்து கொண்டுள்ளன. 
அமேசான் காடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட்,அக்டோபர் மாதங்களில் தீ ப்பிடிப்பது வழமையானது தான் எனினும் அவை இவ்வருடம் போல் பாதிப்பை தரவில்லை எனவும். இவ்வருடம் அமேசானில் அதிக வறட்சி நிலவவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

2018 ஆம் ஆண்டில் 40000 இடங்களில் தீப்பிடித்ததாக பதிவாகி இருந்தன. 2019 ஆம் ஆண்டில் 73 ஆயிரம் இடங்களில் தீப்பிடித்ததாக பதிவாகி இருக்கின்றன. கடந்த வருடத்தை விட இவ்வருடம் 86% வீதம் 9500 infernos அதிகமாக காட்டுத்தீ அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 9000 தீப்பிழம்புகள் பதிவாகி இருக்கின்றது. 
இயற்கை தன்னை தானே புதுப்பித்து கொள்ளும் நிகழ்வாகவே கடந்த கால காட்டுத்தீ களும் கடந்து சென்றிருக்கின்றன. கடந்த வருடங்களை விட இவ்வருடம் அதிக அழிவை தரும் தீ மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
தீப்பிடித்ததே மனிதர்களின் தவறுகளினால் தான் எனும் குற்றச்சாட்டை அசட்டை செய்து அது குறித்த கவலையை நிராகரித்திருக்கின்றார் பிரேசில் அதிபர் பொல்சானாரோ. "நான் கேப்டன் செயின்சா என்று அழைக்கப்பட்டேன், இப்போது நான் நீரோ, அமேசானை எரிய வைக்கிறேன்" விவசாயிகள் நிலத்தை துடைக்க நெருப்பைப் பயன்படுத்தும் ஆண்டின் காலம் இது என்றும் கூறி இருக்கின்றார்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாக்கும் அரசாங்க நிறுவனங்களின் முயற்சிகளையும் போல்சனாரோ தடுத்துள்ளார்.
இந்த தீ 1.2 மில்லியன் சதுர மைல் அகலம் கொண்ட புகை அடுக்கை உருவாக்கியுள்ளதுடன் புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான காடுகளின் இழப்பு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் காடுகளின் அழிவினால் இனி வரும் காலத்தில் ஐரோப்பிய, ஆபிரிக்க கண்டங்களுக்கு மறைமுகமான பாதிப்பை அடுத்தடுத்த வாரங்களில் உணர்த்தலாம் என்பதோடு , உலகம் முழுவதும் கால நிலை மாற்றங்களில் கடும் பாதிப்பை உருவாக்கலாம் என சூழலியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றார்கள்.

எமது சிந்தனைக்கு....
கடந்த வருடம் பிரான்சின் "நோட்டி டாமே" தேவாலய தீ விபத்தின் போது பதறித்துடித்து தீயை அணைக்க உதவிய உலகத்தின் அக்கறையும், சர்வதேச தொலைக் காட்சிகளின் கவனயீர்ப்பும், மக்களின் வாழ்வாதாரங்களும், வளங்களும் சுரண்டப்படும் போது மௌனமாகிப்போகின்றன.
இந்த பூமி கொடூரமானவர்களின் ஆளுகையில் தனது இயல்பை இழந்து கொண்டே இருக்கின்றது.
உலகம் அமைதியாகி வேடிக்கை பார்க்கின்றது.
இயற்கை தன்னை புதுப்பித்து கொண்டே இருக்க. மனிதனோ அதை புரிந்திடாமல் தான் மீண்டு வர முடியாதென தெரிந்தும், அழிவுக்கே வித்திட்டுக்கொண்டே செல்கின்றான்.
நாங்களும் யாருக்கோ தானே என அமைதியாக கடக்கின்றோம்.
 
உலக வரை படத்தில் அமேசான்  மழைக்காடுகள
விண் வெளியிலிருந்து   
பற்றிஎரிகின்றது அமேசான் 
  பசுமையாய் அமேசான்
எரிகின்றது.  
அகோரமாக எரியும் தீயை இப்படியும் அணைக்கலாம். 
சம்பலாகியது வனங்கள் மட்டும் அல்ல. மனங்களும் தான். 


2 கருத்துகள்:

  1. சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் மிக அருமை! ஆதிக்க மனப்பான்மையும் பேராசையும் மனிதனுக்கு இருக்கும்வரை இந்த மாதிரி அழிவுகள் ஏற்படுவது நிரந்தரமாகி விடுகிறது. உலகின் எல்லா நாடுகளிலும் இந்த மாதிரி அழிவுகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. விரைவில் அணைக்கப்படும் என்று எதிர்பார்ப்போம்

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!