20 டிசம்பர் 2015

நண்பனே! நண்பனே!

என் அன்புள்ள சினேகிதனே
ஆசையில் ஓர் கவிதை
நான் எழுதுவதென்னவென்று
நீ அறிவதினாலாவதென்ன?

பண்புள்ள மானிடனாம்
உன்னிடம் கண்டதென்ன?
அன்புள்ள உன்வார்த்தைகளில்
உரிமையின் ஜாலமென்ன?

நட்புக்கு இலக்கணமாய்
நல் வார்த்தை சொல்வதென்ன?
தப்பென்று தெரியும்போது
தட்டிடும் மாயமென்ன?

தொல்லைகள் தொடர்ந்தாலும்
தோழனாய் தொடர்வதென்ன?
அதிர்ந்திடும் அல்லல்களிலே
அன்னையாய் காப்பதென்ன?

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதென்ன? 
ஒரு  நொடி நான் துவண்டால்
மறு நொடி  உன் கலக்கமென்ன?

அன்புக்கு நீ வேண்டும்.
பண்புக்கு நீ போதும்.
நட்புக்கு இலக்கணமாய்
நட்போடு தொடர்ந்திடுவாய்!மலைகள் இல்லையென்றால் மலையேற முடியுமா? 
அட ஒரு நாளில் உதிர்ந்தாலும் பூக்கள் சிரிக்குமே? 
இறக்கைகள் ஏதுமின்றி அந்தப் பட்டம் பறக்கலையா? 
அட விழுந்தாலும் வருந்தாமல் அருவி சிரிக்குமே 
இரப்பர் மரம் மீது பல காயம் உண்டு தோழா 
காயம் இருந்தாலும் அது பாலைத் தரும் தோழா 
மேற்கில் மறைவதெல்லாம் மரணமாவதில்லை 
கிழக்கு வெளிச்சம் தர மறந்து போனதில்லை 

 தையல் ஊசிக்கெல்லாம் அட காது ஒன்றுதான் 
தன் ஊனத்தால் உடையாமல் உடைகள் தைக்குமே 
துன்பங்கள் ஆணியில்லை வரும் வெற்றியின் ஏணியது 
தீ தலைகீழாப் பிடித்தாலும் நிமிர்ந்து எரியுமே 
துயரம் கடக்காமல் ஒரு உயரம் கிடையாது 
தலையே நீ குனிந்தால் அந்த வானம் தெரியாது 
முற்றுப்புள்ளி முடிவினிலே கோலம் ஒன்று போடு 
ஜெயிக்கும் வரை நீயும் ஒரு கண்ணால் தூங்கு 

23 கருத்துகள்:

 1. நட்புக் கவிதை மிக அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல்ப்ஸ்தென்றல் வந்து பதிவு செய்தமைக்கு நன்றி அவர்கள் உண்மைகளே!

   நீக்கு
 2. வணக்கம்
  கவிதையும்.... எடுத்துக்காட்டிய பாடலும் நன்று.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சியும் நன்றியும் ரூபன்!

   நீக்கு
 3. நட்புக் கவிதை, நட்புக்காக எழுதிய கவிதை,தன்னம்பிக்கைக் கவிதை அருமை.

  //துயரம் கிடைக்காமல் ஒரு உயரம் கிடையாது//

  அருமை.

  பதிலளிநீக்கு
 4. அற்புதம்
  அழ வைத்து விட்டீர்கள். என்
  ஆழ் நெஞ்சத்தை.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா உங்கள் முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 5. ஆஹா! தன்னம்பிக்கையும் நட்பும்- அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் கிரேஸ், உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றிமா!

   நீக்கு
 6. சூப்பர் அக்கா அருமையோ அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுருக்கெனமுடித்து விட்டீர்களே! இக்கவிதை உங்களுக்கானதும் உங்களை மனதில் வைத்தும் பதிந்தேன் என தெரியாதோ?

   நீக்கு
 7. இரு கவிதிகளும் அருமை நிஷா சகோ..

  அதுவும் நட்பு...ரொம்பவே மனதைத் தொட்டுவிட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி சார்.தொடர்ந்து வருக.

   நீக்கு
 8. நண்பனுக்கான நட்புக் கடிதம்..அருமை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பனை நினைத்தே எழுதினேன்.கருத்திடலுக்கு நன்றி.

   நீக்கு
 9. நட்புக்கவி நன்று மிகவும் ரசித்தேன் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் தொடர் வருகைக்கு நன்றி கில்லர்ஜி சார்.

   நீக்கு
 10. நட்பை சிறப்பிக்கும் நல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா! தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 11. இனிமையான பாடலைப் போன்றே உங்கள் முயற்சியும் அருமை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக வருக.
   பின்னூட்டத்திற்காக நன்றி. தொடர்ந்து வருக..!

   நீக்கு
 12. ஆஹா... அற்புதம் அக்கா...
  அருமை...

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!