நம் நிறுவனம் சிறப்பாக நற்பெயரோடு இயங்க தொழிலாளிகளாம் உழைப்பாளர்களின்  மன மகிழ்ச்சியும், உண்மையும் நேர்மையும் அவசியம் எனதைபுரிந்தவர்கள் இலக்குகளுக்கு எல்லை இல்லை. 
முதலாளியாக நாம் தொடர்ந்து நீடித்து நிலைக்க  தொழிலாளிகளின் அனைத்து  பணியிலும் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் உணர்வுகளும்  தேவைகளும் நமக்கு புரியும்.  நம்மால் இயலாத ஒன்றை  நம்மிடம்   பணத்தேவைக்காக வேலை செய்யும் தொழிலாளிகள் மேல் திணிப்பதும் அவர்களின் பணிகளைக்குறித்து அறியாமல் கால நேரங்களை நிர்ணயித்து நாமே முடிவெடுத்து மனிதர்களை மாடுகளாய் நடத்த நினைப்பதும் நம் நிறுவன வளர்ச்சிக்கு நல்லதல்ல.   
அர்ப்பணிப்போடு வேலைக்கு வரும் உண்மையும் நேர்மையுமான தொழிலாளர்களை கண்டு பிடிப்பது கடினம் எனில் அவர்களை இழக்காமல் தக்க வைத்துக்கொள்வது அதை விட கடினம். 
இம்மாதிரி நிரம்ப கற்றல்களும் பெற்றல்களுமாக  சுவிஸில் இன்னொரு கேட்டரிங்க நிறுவனத்தோடு இணைந்து எங்கள் ஹேகாஸ் கேட்டரிங்கும் தனக்காக புதிய பாதையில்  மிக வேகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றது.  
➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽
இணையத்தை அதிலும் பேஸ்புக்கைக்குறித்து எதிர்மறையான சிந்தனைகள் புரிதல்கள் பல இருந்தாலும்  கடந்த பத்தாண்டுகால இணைய அனுபவத்தில் நான் இங்கு கண்டதெல்லாம் நன்மையும்   நல்லவர்களின் அன்பும் நட்பும் மட்டுமே என்பதனால்  இன்று வரை இணையத்தொடர்புகளை சரியாகவே பயன் படுத்தி கொண்டு வந்திருக்கின்றேன், 
 பேஸ்புக்கை நான் நீண்ட காலமாக லைக் பேஜ் மூலம்  வியாபார தொடர்பாடல் களமாக பயன் படுத்துவதன் மூலம் சுவிஸில் பல ஆர்டர்களை பெற்றிருந்தாலும் கடந்த வருடத்தில் ஜேர்மனிலிருந்து வந்த ஆர்ட்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது போயிருக்கின்றது. 
   
கடந்த நான்கு நாட்கள் இந்தியாவிலிருந்து வந்திருந்த உல்லாசப்பயணிகளுக்கான  மதிய இரவு உணவுக்குரிய மொத்த ஆர்டர்களும்,  எங்கள் பேஸ்புக் லைக்பேஜில் நான் இடும் புகைப்படங்கள் பார்த்தும் கருத்துக்களை படித்துமே உங்களை நாங்களாக மெயில் மூலம் தொடர்பு கொண்டோம் என சொன்னார்கள். .. அடுத்து வரும் தொடர் பயணத்திட்டங்களிற்கும் எங்களிடம் உணவு ஆர்டர் செய்வதாகவும் சொல்லி சென்றிருக்கின்றார்கள். 
இணையத்தினை நாங்கள் பலவகைகளில் நன்மையாக  இலவச விளம்பரத்தேவைக்கும் பயன் படுத்தலாம் என்பதனால் நானும் இனி இங்கும் என் நிறுவனத்தினை விளம்பரப்படுத்த நினைத்திருக்கின்றேன். 
தங்கள் விடுமுறைக்காக சுவிஸ் வர திட்டமிடும் நட்பூக்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.  உணவு மற்றும் தங்குமிடதேவைகளை மிகக்குறைந்த செலவில் செய்து தருவோம் என்பதோடு சைவ, அசைவ ஜெயின் உணவுகளை  வீட்டுச்சாப்பாட்டு சுவையில் பக்குவமாக தரமாக பொருட்களை கொண்டு சுவையாக சமைத்தும் தருவோம். 
பயணத்திட்டங்களை  திட்டமிடும் நிறுவனங்கள்,  சினிமா படப்பிடிப்புக்களுக்காக குழுக்களாக வருவோரும் தொடர்பு கொள்ளலாம், 
எங்கள் லைக் பேஜ் புகைப்படங்கள் அனைத்தும் எங்கள் நிறுவன சொந்த அலங்கரிப்புப்படங்களே!
இணைப்பை சொடுக்கினால் படங்களின் அணிவகுப்பை காணலாம். . 
➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽➽
கடந்த வாரத்தில் எங்கள் திருமண மண்டபத்தில்  நடந்த பிறந்த நாள் விருந்தின் உணவுகளின்  அலங்காரமும் அணிவகுப்பும்.  
வரவேற்பு சிற்றுண்டிகளாக... 
ஆட்டிறைச்சியில் செய்யப்பட்ட  ரோல்ஸ், மீன் உருளைக்கிழங்கு சேர்ந்த  கட்லெட், மரக்கறி வைத்த சமோசா, செர்ரி தக்காளி, சீஸ், ஓலிவ்காய் மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூக்கொத்துடன் பல வகை வெஜ் குட்டிப்பிட்சாக்களும் காப்பி, தேனீர் ஆரஞ்சு பானங்களும் இந்த மேசையில் உள்ளது. 
மாம்பழத்துண்டங்களுடன் மெலோனும் பெஷன் ப்ருட் ஐஸ்கிரிமும் இங்குண்டு. 
அன்றைய நாள் மேடை அலங்காரம், பிறந்த நாள் கேக் வைக்க முன். 
 உணவுக்கு பின்  இனிப்பு உணவுகள் அன்னாசி,ஆரஞ்சு, மா, திராட்சை, ஸ்டோபெர்ரி,  தர்பூசனி, மாதுளம்  பழங்களின் அலங்கரிப்பும்,  பன்ன்ங்கொத்தா, திராமீசூ எனும் சுவிஸ் நாட்டு ஸ்பெஷல்  இனிப்பும் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றது. 
செர்ரி தக்காளி, சீஸ், ஓலிவ்காய் மற்றும் வெள்ளரிகாய் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூக்கொத்து. 
இத்தனையும்  என் நேரடி திட்டமிடலிலும், தயாரிப்பிலும் என்பதனால் தினந்தோறும் என் சிந்தனைகள்  நிறுவன வளர்ச்சி, அதற்கான திட்டமிடல், பிள்ளைகளின் தேவைகள் நேரத்துக்கு உணவு மற்றும் வீட்டுத்தேவைகளை கவனித்து நிறுவனத்தினையும் நடத்துதல் என எழுத்துக்காக சிந்தனையை தூரமாக்கி விட்டது.
மீண்டும் வரும் வரை.....  நிச்சயம் வருவேன்.