Swiss
08.07.2020
கடந்த 24 மணி நேரத்திற்குள் 129 புதிய கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Basel-Stadt, Basel-Landschaft, Aargau und Solothurn மாநிலங்களில் கிளப்புகள், பார்கள் மற்றும் உணவு விடுதிகள் உட்பட விருந்து விழா நிகழ்வுகளில், 300 க்கு பதிலாக வியாழக்கிழமை (ஜூலை 9) முதல் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் நிலைமை மோசமாகுமானால் மீண்டும் எல்லை கட்டுப்பாடுகள் இயல்பு நிலை மாற்றங்கள் குறித்து அறிவிப்பும் வரலாம்.
அதிக ஆபத்துள்ள நாடுகளில் ஒன்றில் தங்கள் விடுமுறையை செலவழிக்கும் எவரும் சுவிட்சர்லாந்திற்கு திரும்பிய பின் தனிமைப்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் குறிப்பாக விமானம் மற்றும் எல்லைக் கடப்புகளில் அவதானிக்கப்படுவார்கள். நாட்டிற்குள் நுழைந்த பிறகு அவர்கள் கன்டோனல் அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் வேண்டும்.
தடை செய்யப்படட 29 நாடுகளுக்கு சென்று திருப்புவோருக்கான தனிமைப்படுத்தல் காலத்துக்கு காப்புறுதியோ, ஊதியமோ வழங்கபடாது. ( ஸ்வீடன், செர்பியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை அடங்கும் )
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆபத்து மற்றும் தடை செய்யப்படட நாடுகளின் விபரம்:
அர்ஜென்டினா, ஆர்மீனியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பொலிவியா, பிரேசில், சிலி, டொமினிகன் குடியரசு, Honduras, ஈராக், இஸ்ரேல், கேப் வெர்டே( Cape Verde), கத்தார், கொலம்பியா, கொசோவோ, குவைத், மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ஓமான், பனாமா, பெரு, ரஷ்யா, சவுதி அரேபியா அரேபியா, சுவீடன், செர்பியா, தென்னாப்பிரிக்கா, Turks- uns Caicos-Inseln,, அமெரிக்கா மற்றும் Belarus ஆகியவை ஆபத்தான பகுதிகளில் உள்ளன.
https://www.nau.ch/politik/bundeshaus/coronavirus-diese-lander-sind-auf-der-risikoliste-65735952?utm_campaign=amp_article&utm_source=65739860_body
அங்கு பரவுவது குறைவாகத்தான் இருக்கிறது இல்லையா? நல்ல பாதுகாப்பு நடவடிக்கைகள். தடை செய்யப்பட்ட நாடுகளில் இந்தியா இலங்கை எல்லாம் இல்லை போலத் தெரிகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
கீதா