18 ஜூலை 2020

ஆடிக்கூழின் வாசம்...!

ஆடிக்கூழ் ..🥣🥣

ஆடி வெள்ளி தேடி உன்னை 
நானடைந்த நேரம் 
கோடி இன்பம் நாடி வந்தேன் 
ஆடிக்கூழின் வாசம்.. 

ஆடிப்பிறப்பில் கூடி 
ஆடி,ஓடி விளையாடி 
இடித்துப் புடைத்து வறுத்த பயறை  
நீருள் அமிழ்த்தி  அவித்து,
தீட்டிய  தவிட்டு பச்சை அரிசி 
இடித்து தூளாக்கி, மாவாக்கி 
அரித்து  வறுத்து  
தேங்காய்ப்பாலில் கரைத்து 
அவியும் பயறுடன் கலந்துழாக்கி  
அடி கருகாமல் கிண்டி கிளறி 
பனங்கட்டி, தேங்காய் சொடடை
சில்லுகளாக வெட்டி கலந்து 
உப்பும், மிளகும், சீரகமும் பதமாய் சேர்த்து 
பக்குவமாய் இறக்கி வைத்தேன்..! 

ஊரை நாடி, உறவைத் தேடி 
ஊரோடு உறவாடி 
பாடிக்களித்து பரவசமாகி 
ஆடிக்கூழ்  குடிக்க வாரீரோ..?





2 கருத்துகள்:

  1. ஆடிக் கூழ் - நன்று.

    ஆடிப் பால் என்று கூட ஒரு பானம் தயார் செய்வார்கள் என்று நேற்று பேசிக் கொண்டிருந்தோம்.

    பதிலளிநீக்கு
  2. ஆடிக் கூழ் ஆஹா செமையா இருக்கு.

    ஆடி என்றால் இங்கு அம்மனுக்கு கேழ்வரகில் கூழ் செய்வதுண்டு. ஆடிப்பால்/தேங்காய்ப்பால் எடுத்தும் செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!