28 பிப்ரவரி 2019

இந்தியா/ பாக்கிஸ்தான் பால்கோட் தாக்குதலை தொடர்ந்து இன்ரான் கான் வெளியிட்ட காணொளியின் தமிழ்மொழிபெயர்ப்பு

இந்தியா/ பாக்கிஸ்தான் பால்கோட் தாக்குதலை தொடர்ந்து இன்ரான் கான் வெளியிட்ட காணொளியின் தமிழ்மொழிபெயர்ப்பு




🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
தீவிரவாதத்தால் நாங்கள் இதுவரை 70 ஆயிரம் பேரை இழந்து உள்ளோம் !
ஓர் உயிர் போவதால் அந்த குடும்பத்திற்கு எத்தனை இழப்பு..., காயம் பட்டவர்களுக்கு எத்தனை நாள் மருத்துவமனை அலைக்கழிப்பு என்பதை நன்கு அறிவோம்.

புல்வாமா எனும் துயர சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே அமைதி என்பது மிகவும் அவசியம் ஆகிறது !
இந்த விடயத்தில் இந்தியாவுடன் முழு ஒத்துழைப்பு நல்குவதற்கு தாயாராகவே உள்ளோம் !
அதில் துளி அளவும் சந்தேகம் வேண்டாம் !
ஆனால் இந்தியா அப்படி இணக்கமாக நடக்குமா என தெரியவில்லை! (தேர்தலை மனதில் வைத்து சொல்கிறார் போலும்)

ஒருவேளை இந்தியா இதை ஆயுதம் மூலமே பேசுவோம் எனக் கூறினால், அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் !
காரணம், எந்த ஒரு நாடும் தன் இறையாண்மை-யை ஒருபோதும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காது !

நேற்று காலையில் இந்தியா தாக்குதல் நடத்திய உடனே நாம் திருப்பி தாக்குதல் நடத்த வில்லை ,. முழுமையாக என்ன நடந்தது என தெரியாமல் ஒரு செயலில் இறங்குவது என் பொறுப்புக்கு அழகல்ல!
எனவே உயர் அதிகாரிகள் உடன் பேசினோம்!
என்ன சேதம் என்று ஆய்வு செய்தோம் .., அதன் பின் இன்று PAK விமானத்தை அனுப்பினோம்., அதுவும் எந்த தாக்குதலும் நடத்தாமல் திரும்பி வந்தோம் !

இந்தியா உள்ளே வந்தால் நாங்களும் உள்ளே வருவோம் என்பதை காட்டுவதற்க்க்கா மட்டுமே அதை செய்தோம் !
இந்தியாவின் இரு விமானங்கள் காலையில் உள்ளே வந்தது..., அதை சுட்டு வீழ்த்தி உள்ளோம்!
போர் அறிவு உள்ள அனைவருக்கும் தெரியும்.., எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று!

முதல் உலகப்போர் சில வாரங்களில் முடிந்து இருக்க வேண்டியது... ஆனால் 6 வருடங்கள் தொடர்ந்தது !
War On Terrorism என்ற பெயரில் அமெரிக்கா தொடங்கிய போர்கள் 17 வருடம் தாண்டியும் இன்றும் முடியவில்லை!

நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்..., 
உங்களிடம் இருக்கும் அதே ஆயுதம் தான் எங்களிடமும் உள்ளது !
இந்த போர் தொடங்கி விட்டால் எப்போது முடியும் என்பது மோதிக்கும் தெரியாது எனக்கும் தெரியாது !

I once again invite you (India) :- we are ready for dialogue … புல்வாமா எத்தனை பெரிய பாதிப்பை உருவாக்கி இருக்கிறது என்பதை நான் உணர்ந்துள்ளேன் !
அதை பேச்சு வார்த்தை மூலமே முடிவுக்கு கொண்டு வர முடியும்!
வாருங்கள் அமர்ந்து பேசுவோம் பிரச்சனையை தீர்ப்போம்...!

- இம்ரான் கான். பாகிஸ்தான், பிரதமர்
Inbox Mesage


5 கருத்துகள்:

  1. இதில் நிறைய கேள்விகள் இருக்கிறது...இப்படியான பேச்சை அவர் அன்றே செய்திருக்கலாம்...எப்போது புல்வாமா செய்தி வெளியாகியதோ அப்போதே.

    அவர் அன்றெ இதைச் செய்திருந்தால் அதாவது இதில் பாகிஸ்தான் அரசிற்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது தீவிரவாதம் ஸோ நாங்கள் எங்கள் நாட்டில் அதைக் களைய முயற்சிக்கிறோம் என்று சொல்லி பேசியிருக்கலாம்.

    இரண்டாவது இந்தியா குண்டு போட்டது பாகிஸ்தான் நாட்டில் உள்ளே மக்கள் மீதல்ல. தீவிரவாதிகளின் இடத்தில்தான். எனவே இது தீவிரவாதத்திற்கு எதிராகத்தான் அதை எப்படி ஒழிப்பது என்றுதான் இரு நாடுகளும் பேச வேண்டுமே அல்லாமல் அவர் பேசியது போர் அடிப்படையில் பேசியிருப்பது சரியில்லை என்றே தோன்றுகிறது.

    தீவிரவாதிகள் அழித்திருப்பது நம் இராணுவ வீரர்களை...நம் ஊரில் இருக்கும் தீவிரவாதிகளை அல்ல...அதனால்தான் இந்தியா அங்கு ஊருக்குள் சென்று மக்கள் மீதோ அவர்கள் இராணுவத்தின் மீதோ குண்டு போடவில்லை....தீவிரவாதிகளின் கூடாரத்தின் மீதுதான். இது போர் அல்ல..தீவிரவாதத்திற்கு எதிரான போர் அல்லாமல் நாட்டின் மீதான போர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் அனாவசியமான போர் உயிரிழப்பு இருக்காது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீவிரவாதிகளின் கூடாரம் மீது குண்டு போட்டார்கள் என்பதற்கு ஆதாரம் என்னம்மா? அவன் கிள்ளினான், நானும் கிள்ளினேன் என்ப சொல்வது மக்கள் உயிருடன் விளையாடும் விளையாட்டுகள் அல்ல. எபடியோ ஏதோ ஒரு காரணத்தோடு, அழுத்தம், நிர்ப்பந்தம் எதுவாக இருந்தாலும் இம்ரான் முதல் படியை எடுத்து வைத்துள்ளார். நாம் கடந்த காலம் பேசிக்கொண்டிருக்க தேவையில்லை. நிகழ்காலத்தை சரியாககி எதிர்காலத்தை சீரமைக்கும் படி வேண்டுவதே இரு பக்க தேசத்தின் மக்களுக்கும் நல்லது பாதுகாப்பானது .

      நீக்கு
    2. கண்டிப்பாக...முதலில் புல்வாமாவிற்கு கண்டனம் தெரிவிக்காமல் இருந்தவர் அப்புறம் தான் தெரிவித்தார்...போர் என்பத் இருபக்கமுமே வேதனைதான். அது நம் எதிரியாக இருந்தாலும்....இப்போது அவர் போர் வரக் கூடாது என்று சொன்னது பெரிய விஷயம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை...கடைசியில் அவர்களே ஒத்துக் கொண்டார்கல் அங்குதான் அக்கூட்டத்தின் தலைவர் இருக்கிறார் என்றும். தீவிரவாதம் என்பது விஷமல்லவா நிஷா...அதைத்தான் சொன்னேன்.

      கீதா

      நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!