24 ஆகஸ்ட் 2019

அமேசான் காட்டுத்தீ

உலகம் தன் கவனத்தை அமேசானின் பக்கம் திருப்பியே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்,இயற்கையை நேசிக்கும் மக்களும் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள்.
ஆம்......! சர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தை பயன் படுத்தும்படியான உத்தரவை பிரேசில் ஜனாதிபதி வழங்கி இருக்கின்றார்.
இன்று சனிக்கிழமை தொடக்கம் அடுத்த ஒரு மாதம் இராணுவம் அமேசான் பகுதிகளில் எரியும் காட்டுத்தீயை அணைக்கும் செயல்பாடுகளை தொடரும்.
⧪ அமேசான் காட்டுத்தீ கவனயீர்ப்பு மனிதச்சங்கிலிப்போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடும் ஜப்பான்.
⧪ பிரேசிலில், 40 நகரங்களில்அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டன,
⧪ பல ஐரோப்பிய தலைநகரங்களில் பிரேசிலிய தூதரகங்கள் மற்றும் தூதரகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
⧪ காடழிக்கப்படுவது தொடருமானால் பிரேசில் நாட்டின் மீதி பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என எச்சரிக்கின்றார் பிரான்ஸின் அதிபர் மக்ரோன்
⧪ பிரேசில் தனது காடழிப்பு கொள்கைகளை மாற்ற வேண்டும் எனும் சர்வதேசக்கவனயீர்ப்பை வேகப்படுத்தும் முயற்சிகளாக அமேசான் காடழிப்பு தொடர்பாக பேச உலகின் முக்கிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் இந்த வார இறுதியில் அவசரப்பேச்சுவார்த்தைகக்காக ஒன்று கூடுகின்றார்கள்.
⧪ சனிக்கிழமையன்று பியாரிட்ஸில் உள்ள ஜி 7 க்கு மாநில மற்றும் அரசாங்கத் தலைவர்கள் வரவிருந்த நிலையில், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான மெர்கோசூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைத் தடுப்பதாக அச்சுறுத்தி இருக்கின்றன.
------ போல்சனாரோ, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் காட்டுத்தீயை அணைக்க எடுக்கும் அவசர முயற்சிகள் தொடர்பாக தவறான தகவல்களை தந்ததாக பிரான்ஸ் குற்றம் சாட்டியது, எனவே பிரேசில்,அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகளுடனான மெர்கோசூர் ஒப்பந்தத்தை பிரான்ஸ் ஆதரிக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தைக்கு இரண்டு தசாப்தங்கள் எடுத்துள்ளது, ஆனால் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை.
⧪ ஏனைய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களும் மெர்கோசூர் (தெற்கு பொது சந்தை) ஒப்பந்தத்திலிருந்து விலகிச் செல்ல நிர்பந்திக்கப்படுகின்றார்கள்..
⧪ முதல்முறையாக ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் Boris Johnson, அமேசான் விடயத்தில் தான் “ஆழ்ந்த அக்கறை” கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்,
⧪ தொழிலாளர் தலைவர்Jeremy Corbyn போல்சனாரோவுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைககளுக்காக அழுத்தம் கொடுத்திருக்கின்றார்.
⧪ பிரேசிலின் முன்னாள் சுற்றுச்சூழல் மந்திரி Marina Silva "இந்த நாடு அமேசானில் காடழிப்பைக் குறைக்க ஒரு கடுமையான முயற்சியை மேற்கொண்டது, இப்போது எல்லாவற்றையும் தவிர்த்து வருவதை நாங்கள் காண்கிறோம்"
இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த வேண்டும், ”என்று கூறி இருக்கின்றார்.

⧪ Angela Merkel, German "அமேசான் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து பிரேசிலுக்கும் பிற பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் அதிர்ச்சியையும் அச்சுறுத்தலையும் தருகிறது" என்று மேர்க்கெலின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் வெள்ளிக்கிழமை பேர்லினில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அமெரிக்கா அதிபர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. டிரெம்ப் காட்டுத்தீயை எதிர்த்து போராட நாங்கள் உதவுவோம் என தெரிவித்திருக்கின்றார்.
Wildfires in the South America including the Amazon rainforest of Brazil on 20 August. 
Photograph: VIIRS/Suomi NPP/Worldview/NASA

A Nasa images shows several fires burning in Brazilian states.
Photograph: HO/AFP/Getty Images 
Protesters march in Rio on Friday against the government of Brazilian president Jair Bolsonaro over the fires in the Amazon rainforest.
Photograph: Mauro Pimentel/AFP/Getty Images

அமேசான் மழைக்காடுகள் கற்றுத்தரும் பாடம்.
சமூகம் சார்ந்த அழிப்புக்களை எத்தனை மூடி மறைக்க நினைத்தாலும் அவை வெளி வரும் போது 
அப்பிரச்சனை சார்ந்து கையாளக்கூடியவர்கள் 
கவனத்தில் கொண்டு சேர்க்கப்படுமானால் அத்தனைக்கத்தனை விரைவாக பயனும் அடைவோம் என்பதை அமேசான் காட்டுத்தீக்கு பின்னரான மக்கள் குரல்கள் நிருபிக்கின்றன.

ஆம்......! அமேசான் காட்டுத்தீ பிரேசில் அரசின் மீதான சர்வதேச நெருக்கடியை உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.

23 ஆகஸ்ட் 2019

அமேசான் மழைக்காடுகள் எரிந்து கொண்டிருக்கிறன..

உலகத்தின் மிகக் குறைந்த கவனத்தைப் பெற்ற மற்றொரு பேரழிவு!
எங்கள் பூமி எரிந்து கொண்டிருக்கிறது!
நாம் வாழும் பூமிக்கு தேவையான சுவாசக்காற்றின்  20% வீத ஆக்ஸிஜனைக் கொடுக்கும் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் எரிகின்றன.
உலகின் மிகப் பெரிய உயிர்ப் பெருந்திணிவும் பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான்_காடுகள்_பற்றி எரிகிறது.


ஆம் அமேசான் மலைக்காடுகள் .....!
உலகத்தின் சுவாசம் 
பூமிப்பந்தின் நூரையீரல் 
பூமியில் ஈரப்பதமான இடங்களில் முக்கியமானதுமாகும்.!
பிரேசில்,பொலிவியா மற்றும் பராகுவே: அமேசானின் பரந்த பகுதியை தம் வசம் வைத்திருக்கும் மூன்று நாடுகளிலுமிருக்கும் அமேசான் மழைக்காடுகள் மூன்று வாரங்களாக தொடர்ந்து எரிகின்றது.
பூமியின் குளிரான இடங்களில் ஒன்றான சைபீரியா தீப்பிடித்து எரிகிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகள் பல வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெட்ரோலிய மற்றும் கணிம வள நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அதில்  60% அமேசான் காடுகளை உள்ளடக்கிய பிரேசில் முக்கியத்துவம் பெறுகின்றது.
 பூமியில் தண்ணீர் வளமிக்க நாடுகள் பட்டியலில் முதலாவது இடத்தில் இருப்பது பிரேசில் 
 பூமியின் மனிதர்கள் சுவாசிக்க தேவையான பிராண வாயு / ஒட்சிசனில் 20% வீதம் அமேசான் காடுகளின் மூலமே கிடைக்கின்றது.
 மழைக்காடுகள் கார்பனை உறிஞ்சி  பிராணவாயுவான ஆட்சிசனை வெளியிடுகின்றன.
⧪ பூமியின் 10% விலங்கினங்கள், 
⧪ 40,000 மர செடி வகைகள்
 3000 பழ வகைகள் 
அரிய வகை தாவரங்கள், கனிமங்களை தன்னகத்தே மறைத்து அமேசான் காடுகளை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.
அரசியல் ஆளுமைகளின் அதிகார, பேராசையினால் ஏற்பட்ட வெறி காட்டுத்தீயாக எரிந்து கொண்டிருக்கின்றன. முழு வனத்திலும் 30 வீதம் முற்றாக  சாம்பலாகியும்  தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கின்றன.
அமேசன் காட்டின் வளங்களை நாட்டின் முன்னேற்றத்துக்காக பயன் படுத்துவதாக பிரோசிலிய அதிபர் பொல்சானாரோ தன் தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தார். அவரின் வாக்குறுதியை நிறைவேற்ற அங்கே வாழும் பழங்குடி மக்கள் தடையாக இருப்பதனால் அவர்களை காடுகளை விட்டு துரத்தி விட செயற்கையான முறையில் காட்டுத்தீ ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என அமேசான் Waorani  பழங்குடி மக்கள் குற்றம்சாட்டுகின்றார்கள்.
ExxonMobil,TotalSA,Shell போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து அமேசான் காடுகளில் தங்குதடையின்றி பெட்ரோலிய வளத்தை சுரண்டுவதற்கு  தடையாக  அமேசான் பழங்குடிமக்கள் இருக்கின்றார்கள். 
சில மாதங்களுக்கு முன் அமேசான் காட்டுப்பகுதியின் பெற்றோலியம், போன்ற கனிம வளங்களை தோண்டி எடுக்க அரசின் ஆதரவுடன் திட்டமிட்ட பெற்றோலிய நிறுவனங்களை அமேசான் பழங்குடி மக்கள் நீதி மனற உத்தரவின் மூலம் தடுத்திருக்கின்றார்கள்.
அமேசான் காடுகளுக்கு அருகே வாழும் பழங்குடி மக்களை வெளியேற்ற முயற்சிப்பதும் அதனை எதிர்த்து வழக்கு தொடுத்து வெற்றி பெறும் போது காடுகளில் செயற்கை தீ விபத்துகளை ஏற்படுத்தி அவர்களை அச்சுறுத்தி வெளியேற்ற நினைப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
காட்டுப்பகுதியை அண்டி வாழும் கிராமத்து மகக்ளும் விவசாய நிலங்களை உருவாக்கும் திட்டத்தில் சட்டவிரோதமான முறையில்  செயற்கையாக காடுகளுக்கு தீவைத்து சாம்பலாக்குவதை அரசு அனுமதிக்கின்றது.
காட்டுத்தீ பரவிக்கொண்டிருக்கும் காலத்தில் அரசாங்கம் கூறிய அதிக வறட்சி, அதனால் உருவான காட்டுத்தீ எனும் நொண்டிச்சாக்குகளை சூற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மறுத்திருக்கின்றார்கள்.
கடும் வறட்சிக்காலங்களிலும். எல் நீனோ வருடங்களிலும் ஏற்படாத அழிவுகளை இவ்வருடம் இக்காட்டுத்தீ உருவாக்கி இருக்கின்றன. . முன்னெப்போதும் இல்லாத அழிவினை அமேசான் வனம் சந்தித்து கொண்டுள்ளன. 
அமேசான் காடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட்,அக்டோபர் மாதங்களில் தீ ப்பிடிப்பது வழமையானது தான் எனினும் அவை இவ்வருடம் போல் பாதிப்பை தரவில்லை எனவும். இவ்வருடம் அமேசானில் அதிக வறட்சி நிலவவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

2018 ஆம் ஆண்டில் 40000 இடங்களில் தீப்பிடித்ததாக பதிவாகி இருந்தன. 2019 ஆம் ஆண்டில் 73 ஆயிரம் இடங்களில் தீப்பிடித்ததாக பதிவாகி இருக்கின்றன. கடந்த வருடத்தை விட இவ்வருடம் 86% வீதம் 9500 infernos அதிகமாக காட்டுத்தீ அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 9000 தீப்பிழம்புகள் பதிவாகி இருக்கின்றது. 
இயற்கை தன்னை தானே புதுப்பித்து கொள்ளும் நிகழ்வாகவே கடந்த கால காட்டுத்தீ களும் கடந்து சென்றிருக்கின்றன. கடந்த வருடங்களை விட இவ்வருடம் அதிக அழிவை தரும் தீ மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
தீப்பிடித்ததே மனிதர்களின் தவறுகளினால் தான் எனும் குற்றச்சாட்டை அசட்டை செய்து அது குறித்த கவலையை நிராகரித்திருக்கின்றார் பிரேசில் அதிபர் பொல்சானாரோ. "நான் கேப்டன் செயின்சா என்று அழைக்கப்பட்டேன், இப்போது நான் நீரோ, அமேசானை எரிய வைக்கிறேன்" விவசாயிகள் நிலத்தை துடைக்க நெருப்பைப் பயன்படுத்தும் ஆண்டின் காலம் இது என்றும் கூறி இருக்கின்றார்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாக்கும் அரசாங்க நிறுவனங்களின் முயற்சிகளையும் போல்சனாரோ தடுத்துள்ளார்.
இந்த தீ 1.2 மில்லியன் சதுர மைல் அகலம் கொண்ட புகை அடுக்கை உருவாக்கியுள்ளதுடன் புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான காடுகளின் இழப்பு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் காடுகளின் அழிவினால் இனி வரும் காலத்தில் ஐரோப்பிய, ஆபிரிக்க கண்டங்களுக்கு மறைமுகமான பாதிப்பை அடுத்தடுத்த வாரங்களில் உணர்த்தலாம் என்பதோடு , உலகம் முழுவதும் கால நிலை மாற்றங்களில் கடும் பாதிப்பை உருவாக்கலாம் என சூழலியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றார்கள்.

எமது சிந்தனைக்கு....
கடந்த வருடம் பிரான்சின் "நோட்டி டாமே" தேவாலய தீ விபத்தின் போது பதறித்துடித்து தீயை அணைக்க உதவிய உலகத்தின் அக்கறையும், சர்வதேச தொலைக் காட்சிகளின் கவனயீர்ப்பும், மக்களின் வாழ்வாதாரங்களும், வளங்களும் சுரண்டப்படும் போது மௌனமாகிப்போகின்றன.
இந்த பூமி கொடூரமானவர்களின் ஆளுகையில் தனது இயல்பை இழந்து கொண்டே இருக்கின்றது.
உலகம் அமைதியாகி வேடிக்கை பார்க்கின்றது.
இயற்கை தன்னை புதுப்பித்து கொண்டே இருக்க. மனிதனோ அதை புரிந்திடாமல் தான் மீண்டு வர முடியாதென தெரிந்தும், அழிவுக்கே வித்திட்டுக்கொண்டே செல்கின்றான்.
நாங்களும் யாருக்கோ தானே என அமைதியாக கடக்கின்றோம்.
 
உலக வரை படத்தில் அமேசான்  மழைக்காடுகள
விண் வெளியிலிருந்து   
பற்றிஎரிகின்றது அமேசான் 
  பசுமையாய் அமேசான்
எரிகின்றது.  
அகோரமாக எரியும் தீயை இப்படியும் அணைக்கலாம். 
சம்பலாகியது வனங்கள் மட்டும் அல்ல. மனங்களும் தான். 


13 ஆகஸ்ட் 2019

எம்.ஆர். ஐ ஸ்கானர் (MRI - Magnetic Resonance Imaging), சி.ரி ஸ்கானர் (CT – Computerized Tomography)

அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர். ஐ ஸ்கானர் (MRI - Magnetic Resonance Imaging), சி.ரி ஸ்கானர் (CT – Computerized Tomography) வாங்கப்படுவதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து பல குழப்பங்களும்,விவாதங்களும் தொடர்ந்தன.
அதை தொடர்ந்து யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் thangamuthu sathiyamoorthy) CT scan தனனர்வலர்களின் நிதிப்பங்களிப்பிலும் MRI அரசின் நிதி உதவியிலும் யாழ் போதனா வைத்திய சாலைக்கு வழங்கப்பட இருக்கின்றன எனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
(CT scan ) Computerized Tomography scan
(MRI) Magnetic Resonance Imaging
இரண்டுக்குமான வித்தியாசங்களை புரிந்து கொண்டால் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வோம். குழப்பங்களும் நேராது.

மருத்துவ இயந்திரங்கள். உபகரணங்கள் குறித்ததான விளக்கங்களை தமிழில் பதிவாக்கும் கடமைகளும் எமக்குண்டென உணர்வோம்.
😍😍 நீண்ட பதிவாயிருந்தாலும் அவசியமானது என்பதனால்; படியுங்கள்.
CT scan, (MRI) இரண்டுமே மனிதனின் உடல் உட்பாகங்களுக்குள் நுழைந்து உள் உறுப்புக்களின் செயல்பாட்டையும், அதன் உருவமைப்பையும் புகைப்படமாக்கி மருத்துவர்களின் ஆய்வுக்கு உதவி செய்கின்றன.இரண்டுமே ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்து என்றாலும், சூழ்நிலைகளைப் பொறுத்து ஒவ்வொன்றையும் ஒரு சிறந்த தேர்வாக மாற்றக்கூடிய வேறுபாடுகள் உள்ளன.
Magnetic resonance imaging (MRI) (காந்த அதிர்வு இமேஜிங்) ரேடியோ அலைகளையும்
Computerized Tomography (CT scan) சிடி (கம்ப்யூட்டட் டோமோகிராபி) ஸ்கேன்களும் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்துகின்றன.
(MRI) Magnetic Resonance Imaging

ரேடியோ அலைகள் மற்றும் காந்தங்களைப் பயன்படுத்தி, உடலுக்குள் இருப்பதை காண உதவுகின்றன. உடலுக்குள் இருக்கும் பிரச்சனைகளை வெளிப்பார்வைக்கு தெரியாத நுண்ணிய சிக்கல்களைக் கண்டறிய (MRI) பயன்படுத்தப்படுகின்றன:

மூட்டுகள்
மூளை
மணிக்கட்டுகள்
கணுக்கால்
மார்பகங்களை
இதயம்
இரத்த குழாய்கள்

ஒரு நிலையான காந்தப்புலம் மற்றும் ரேடியோ அதிர்வலைகள் மூலம் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நீர் மூலக்கூறுகள் இயந்திரத்தில் இருக்கும் ரிசீவருக்கு அனுப்பப்பட்டு புகைப்படம் எடுக்கபப்டுகின்றன். தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இந்த புகைப்படங்களின் மூலமாக உடலில் உள் பாகத்திலிருக்கும் சிக்கல்கள் கண்டறிந்து கொள்கின்றார்கள்.
(MRI) 
-இயந்திரத்தின் இயக்கம் பெரும் சத்தமாக இருப்பதனால் நோயாளியுடனான உரையாடலில் சிக்கல் ஏற்படுகின்றது. இயந்திரம் இயங்கும் போது போது ஹெட் போன்களை அணிய பரிந்துரைக்கின்றார்கள்.

-காந்தங்கள் காரணமாக உலோகங்களுக்கு எதிர்வினைகள் / உடலினுள் உலோகப்பொருட்கள் வைத்து ஆப்ரேசன் செய்திருந்தால், உலோகப்பொருட்களை அணிந்து சோதனைக்குட்படுவதும் தவிர்க்கப்படுகின்றன.
- MRI சோதனைகள் நீண்ட நேரம் எடுப்பதனால் உடல் வெப்பநிலை அதிகரிக்கின்றது.
- Claustrophobia எனும் நெரிசலான தெருக்கள், பூட்டப்பட்ட அறை, இருண்ட சூழல் ,குகைக்குள் செல்வது போன்றதொரு பயத்தை தருகின்றது.
நன்மைகள்
+ MRI உடலுக்குள் அசாதாரண திசுக்கள் இருக்கிறதா என்பதை நிதானமான கண்டறிந்து, துல்லியமான புகைப்படங்களாக்கி மருத்துவர்களின் சோதனைகளுக்கு உதவுகின்றது.MRI சோதனைகளின் மூலம் உடலிலுள் இருக்கும் நுண்ணிய சிக்கல்களையும் மருத்துவர்களால் கண்டறிய முடிகின்றது.

- பராமரிப்பு செலவு அதிகம் என்பதனால் சோதனைக்கான செலவும் அதிகம்.

Computerized Tomography (CT scan)

சி.டி ஸ்கேன் எக்ஸ்ரேயின் ஒரு வடிவமாகும், இது ஒரு பெரிய எக்ஸ்ரே இயந்திரத்தை உள்ளடக்கியது. சி.டி ஸ்கேன் சில நேரங்களில் கேட் ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது. சி.டி ஸ்கேன் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்துகிறது

எலும்பு முறிவுகள்
கட்டிகள்
புற்றுநோய் கண்காணிப்பு
உள் இரத்தப்போக்கை கண்டறிய CT ஸ்கேன் உதவுகின்றது.

CT ஸ்கேன் சோதனையின் போது மேசை போன்ற நீண்ட படுக்கை ஒன்றில் படுக்க வைக்கப்பட்டு குறிப்பிட்ட உடல்பாகங்களின் மேலால் உடலுக்குள் குறுக்கு வெட்டு படங்களை எடுக்க CT ஸ்கேன் மூலம் நகர்ந்து கணனியில் புகைப்படம் எடுத்து கொள்வார்கள்.
சோதனைச்செலவு குறைவானதாக இருப்பதனால் CT ஸ்கேன் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. 
இருப்பினும் (MRI) சோதனையின் மூலம் தெளிவான தரவுகளை பெற முடிவதனால் மருத்துவர்கள் உடலிலுள் மறைந்திருக்கும் நுண்ணிய சிக்கல்களையும் கண்டுகொள்ள (MRI) பரிந்துரைக்கின்றார்கள்.

CT ஸ்கேன் 
- கருவில் இருக்கும் குழந்தைகளை பாதிப்பதனால் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு CT ஸ்கேன் பரிந்துரைக்கபப்டுவதில்லை. 
-கதிர்வீச்சு சிறிய அளவிலான பாதிப்பை தரலாம்.

நன்மைகள்
+ CT ஸ்கேன் விரைவாக செயல் பட்டு உடலினுள் திசுக்கள், உறுப்புகள் மற்றும் எலும்பு அமைப்பு ஆகியவற்றின் படங்களை எடுக்க உதவுகின்றது.


CT scan மற்றும் MRI சோதனைகளில் ஆபத்துக்கள், பின் விளைவுகள் உண்டா? 
சில அபாயங்களை ஏற்படுத்துகின்றன. அபாயங்கள் இமேஜிங் வகை மற்றும் இமேஜிங் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது.

MRI and CT scan சோதனைகள் யாருக்கு பரிந்துரைக்கப்படும்? 
நோயின் தன்மையை கண்டறிய அதன்  அறிகுறிகளை அவதானித்து MRI சோதனையை மருத்துவர் பரிந்துரைப்பார்.

குடலிறக்க வட்டுகள்
கிழிந்த தசைநார்கள்
மென்மையான திசு சிக்கல்கள்
உங்கள் உள் உறுப்புகள் போன்ற பகுதிளில் இருக்கும் சிக்கல்களை அறியவும்,எலும்பு முறிவு,தலையில் ஏற்படும் தீடீர் அதிர்ச்சிகளுக்கும்  CT ஸ்கேன் பொதுவாக பரிந்துரைக்கப்படும்.

உங்கள் நோய்களுக்கான சோதனைகளை குறித்து மருத்துவர் பரிந்துரைத்தால் அதைக்குறித்த மேலதிக விபரங்களை கேட்டு தெளிவை பெற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி.
ஆங்கில மருத்துவப்பதிவாக்கங்களிலிருந்து தமிழ்மொழி பெயர்ப்பு ஆல்ப்ஸ் தென்றல் நிஷா எனும் Nishanthi Prabhakaran
புகைப்படங்கள் நன்றி ஆங்கில விக்கிமீடியா

21 ஜூலை 2019

கறுப்பு யூலை (Black July,) இனக்கலவரமா (Riot)?

 இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 12, 13 மற்றும் 14&ன்படி இலங்கையின் பிரஜைகளுக்கு அந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வசிப்பதற்கான உரிமையென்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வழங்கப்பட்டுள்ளது.
👩‍⚖️
கறுப்பு யூலை (Black July,) 
ஜூலை 23, 1983

இலங்கை சிங்கள இனவாதிகளால் தென்னிலங்கையில் தமிழன் என அடையாளம் காணப்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 
இரண்டு வாரங்களுக்கும் மேலாக தென்னிலங்கையிலும்,மலையகத்திலும் தொடர்ச்சியான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

தமிழர் கடைகள், இருப்பிடங்கள் என அடையாளம் காணப்பட்டவைகள் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் நடத்தப்பட்டன.
தமிழர்களுக்கு உதவிய சிங்கள்,முஸ்லிம் மக்களும் தாக்கப்பட்டார்கள்.அவர்கள் சொத்துக்கள் பறிக்கப்பட்டன.

பல முதலாளிகள் ஒரே இரவில் அனைத்தையும் இழந்தார்கள். திட்டமிட்ட படி தமிழர் வர்த்தகம் முடக்கப்பட்டது. பொருளாதாரம் சிதைவுற்றது. அதிகாரங்கள் பறிக்கப்பட்டது. உயிர்ப்பயம் உரித்தாக்கப்பட்டது. தமிழர்கள் தம் சொந்த நாட்டினுள் அகதிகளாக்கப்பட்டார்கள்.
சிறைச்சாலையின் திறவு கோல் வன்முனையாறர்கள் வசம் கை மாறியது. உரிமைக்குரல் கொடுத்தோரின் குரல்கள் நசுக்கப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகளக அடைக்கப்பட்டிருந்தவர்கள் உட்பட 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்டார்கள்.
கறுப்பு யூலை (Black July,)
இனச்சுத்திகரிப்பா (Ethnic cleansing) ?
இனப்படுகொலையா (Genocide) ? 
இனக்கலவரமா (Riot)?

 
புகைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்தேன். 

இனக்கலவரம்(Riot) என்றால் என்ன ?
கலவரம் அல்லது Riot என்றால் இரு இனங்கள் அல்லது குழுவினர் மோதிக்கொள்வது.சமூகத்தின் சீரழிவை , இழப்புக்களை உருவாக்குவது.

83 ல் நடந்தது இனக்கலவரமா? இரு இனம் அல்லது குழுக்கள் மோதிக்கொள்வது தான் இனக்கலவரம் எனும் வரையறைக்குள் வருமாயின் அன்றைய நாட்களில் இரு இனங்கள் மோதிக்கொண்டனவா?
எங்கள் மீதான நீதிகளும், நியாயங்களும் ஏன் தூரமாகின்றன?
சிந்திப்போம்.
வெலிக்கடை சிறைச்சாலையில் எமதுரிமைக்காக குரல் கொடுத்தோர் உட்பட கொடூரமாக கொல்லப்பட்ட 56 பேரின் உயிருக்கான நீதி விசாரனைகள் இன்று வரை கிடைக்கவும் இல்லை. எவரும் தண்டிக்க, கண்டிக்கப்படவும் இல்லை.
தமிழர்கள் மீதான அத்தூமீறல்களுக்கு அன்று துணை போன அரசையும் ஆட்சியாளர்களையும்,அதிகாரத்தையும் இன்று நல்லாட்சி என எமது அரசியல் வாதிகளே தாங்கிக்கொண்டுள்ளார்கள்.
.😭


மேலதிக விளக்கம் தேடி...
*********************************

இனச்சுத்திகரிப்பு என்றால் என்ன? 
Ethnic cleansing

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் தவிர வேறு எவரும் இருக்கக்கூடாது’ என்ற எண்ணத்தோடு மற்ற இனத்தவரைப் பலவந்தமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையே ‘இன சுத்திகரிப்பு’ என்று அழைப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விதிகளின்படி இது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகும். ஐ.நா. சபையும் இதை இன அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு இணையான குற்றமென்று
வகைப்படுத்தியிருக்கிறது.

Ethnic cleansing is the systematic forced removal of ethnic, racial and/or religious groups from a given territory by a more powerful ethnic group, often with the intent of making it ethnically homogeneous.[1][page needed] The forces applied may be various forms of forced migration (deportation, population transfer), intimidation, as well as genocide and genocidal rape.
Ethnic cleansing is usually accompanied with efforts to remove physical and cultural evidence of the targeted group in the territory through the destruction of homes, social centers, farms, and infrastructure, and by the desecration of monuments, cemeteries, and places of worship.

புகைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்தேன். 
இனப்படுகொலை (Genocide)
ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்.