அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர். ஐ ஸ்கானர் (MRI - Magnetic Resonance Imaging), சி.ரி ஸ்கானர் (CT – Computerized Tomography) வாங்கப்படுவதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து பல குழப்பங்களும்,விவாதங்களும் தொடர்ந்தன.
அதை தொடர்ந்து யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் thangamuthu sathiyamoorthy) CT scan தனனர்வலர்களின் நிதிப்பங்களிப்பிலும் MRI அரசின் நிதி உதவியிலும் யாழ் போதனா வைத்திய சாலைக்கு வழங்கப்பட இருக்கின்றன எனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
(CT scan ) Computerized Tomography scan
(MRI) Magnetic Resonance Imaging
இரண்டுக்குமான வித்தியாசங்களை புரிந்து கொண்டால் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வோம். குழப்பங்களும் நேராது.
மருத்துவ இயந்திரங்கள். உபகரணங்கள் குறித்ததான விளக்கங்களை தமிழில் பதிவாக்கும் கடமைகளும் எமக்குண்டென உணர்வோம்.
😍😍 நீண்ட பதிவாயிருந்தாலும் அவசியமானது என்பதனால்; படியுங்கள்.
CT scan, (MRI) இரண்டுமே மனிதனின் உடல் உட்பாகங்களுக்குள் நுழைந்து உள் உறுப்புக்களின் செயல்பாட்டையும், அதன் உருவமைப்பையும் புகைப்படமாக்கி மருத்துவர்களின் ஆய்வுக்கு உதவி செய்கின்றன.இரண்டுமே ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்து என்றாலும், சூழ்நிலைகளைப் பொறுத்து ஒவ்வொன்றையும் ஒரு சிறந்த தேர்வாக மாற்றக்கூடிய வேறுபாடுகள் உள்ளன.
Magnetic resonance imaging (MRI) (காந்த அதிர்வு இமேஜிங்) ரேடியோ அலைகளையும்
Computerized Tomography (CT scan) சிடி (கம்ப்யூட்டட் டோமோகிராபி) ஸ்கேன்களும் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்துகின்றன.
(MRI) Magnetic Resonance Imaging
ரேடியோ அலைகள் மற்றும் காந்தங்களைப் பயன்படுத்தி, உடலுக்குள் இருப்பதை காண உதவுகின்றன. உடலுக்குள் இருக்கும் பிரச்சனைகளை வெளிப்பார்வைக்கு தெரியாத நுண்ணிய சிக்கல்களைக் கண்டறிய (MRI) பயன்படுத்தப்படுகின்றன:
மூட்டுகள்
மூளை
மணிக்கட்டுகள்
கணுக்கால்
மார்பகங்களை
இதயம்
இரத்த குழாய்கள்
ஒரு நிலையான காந்தப்புலம் மற்றும் ரேடியோ அதிர்வலைகள் மூலம் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நீர் மூலக்கூறுகள் இயந்திரத்தில் இருக்கும் ரிசீவருக்கு அனுப்பப்பட்டு புகைப்படம் எடுக்கபப்டுகின்றன். தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இந்த புகைப்படங்களின் மூலமாக உடலில் உள் பாகத்திலிருக்கும் சிக்கல்கள் கண்டறிந்து கொள்கின்றார்கள்.
(MRI)
-இயந்திரத்தின் இயக்கம் பெரும் சத்தமாக இருப்பதனால் நோயாளியுடனான உரையாடலில் சிக்கல் ஏற்படுகின்றது. இயந்திரம் இயங்கும் போது போது ஹெட் போன்களை அணிய பரிந்துரைக்கின்றார்கள்.
-காந்தங்கள் காரணமாக உலோகங்களுக்கு எதிர்வினைகள் / உடலினுள் உலோகப்பொருட்கள் வைத்து ஆப்ரேசன் செய்திருந்தால், உலோகப்பொருட்களை அணிந்து சோதனைக்குட்படுவதும் தவிர்க்கப்படுகின்றன.
- MRI சோதனைகள் நீண்ட நேரம் எடுப்பதனால் உடல் வெப்பநிலை அதிகரிக்கின்றது.
- Claustrophobia எனும் நெரிசலான தெருக்கள், பூட்டப்பட்ட அறை, இருண்ட சூழல் ,குகைக்குள் செல்வது போன்றதொரு பயத்தை தருகின்றது.
நன்மைகள்
+ MRI உடலுக்குள் அசாதாரண திசுக்கள் இருக்கிறதா என்பதை நிதானமான கண்டறிந்து, துல்லியமான புகைப்படங்களாக்கி மருத்துவர்களின் சோதனைகளுக்கு உதவுகின்றது.MRI சோதனைகளின் மூலம் உடலிலுள் இருக்கும் நுண்ணிய சிக்கல்களையும் மருத்துவர்களால் கண்டறிய முடிகின்றது.
- பராமரிப்பு செலவு அதிகம் என்பதனால் சோதனைக்கான செலவும் அதிகம்.
Computerized Tomography (CT scan)
சி.டி ஸ்கேன் எக்ஸ்ரேயின் ஒரு வடிவமாகும், இது ஒரு பெரிய எக்ஸ்ரே இயந்திரத்தை உள்ளடக்கியது. சி.டி ஸ்கேன் சில நேரங்களில் கேட் ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது. சி.டி ஸ்கேன் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்துகிறது
எலும்பு முறிவுகள்
கட்டிகள்
புற்றுநோய் கண்காணிப்பு
உள் இரத்தப்போக்கை கண்டறிய CT ஸ்கேன் உதவுகின்றது.
CT ஸ்கேன் சோதனையின் போது மேசை போன்ற நீண்ட படுக்கை ஒன்றில் படுக்க வைக்கப்பட்டு குறிப்பிட்ட உடல்பாகங்களின் மேலால் உடலுக்குள் குறுக்கு வெட்டு படங்களை எடுக்க CT ஸ்கேன் மூலம் நகர்ந்து கணனியில் புகைப்படம் எடுத்து கொள்வார்கள்.
சோதனைச்செலவு குறைவானதாக இருப்பதனால் CT ஸ்கேன் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இருப்பினும் (MRI) சோதனையின் மூலம் தெளிவான தரவுகளை பெற முடிவதனால் மருத்துவர்கள் உடலிலுள் மறைந்திருக்கும் நுண்ணிய சிக்கல்களையும் கண்டுகொள்ள (MRI) பரிந்துரைக்கின்றார்கள்.
CT ஸ்கேன்
- கருவில் இருக்கும் குழந்தைகளை பாதிப்பதனால் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு CT ஸ்கேன் பரிந்துரைக்கபப்டுவதில்லை.
-கதிர்வீச்சு சிறிய அளவிலான பாதிப்பை தரலாம்.
நன்மைகள்
+ CT ஸ்கேன் விரைவாக செயல் பட்டு உடலினுள் திசுக்கள், உறுப்புகள் மற்றும் எலும்பு அமைப்பு ஆகியவற்றின் படங்களை எடுக்க உதவுகின்றது.
CT scan மற்றும் MRI சோதனைகளில் ஆபத்துக்கள், பின் விளைவுகள் உண்டா?
சில அபாயங்களை ஏற்படுத்துகின்றன. அபாயங்கள் இமேஜிங் வகை மற்றும் இமேஜிங் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது.
MRI and CT scan சோதனைகள் யாருக்கு பரிந்துரைக்கப்படும்?
நோயின் தன்மையை கண்டறிய அதன் அறிகுறிகளை அவதானித்து MRI சோதனையை மருத்துவர் பரிந்துரைப்பார்.
குடலிறக்க வட்டுகள்
கிழிந்த தசைநார்கள்
மென்மையான திசு சிக்கல்கள்
உங்கள் உள் உறுப்புகள் போன்ற பகுதிளில் இருக்கும் சிக்கல்களை அறியவும்,எலும்பு முறிவு,தலையில் ஏற்படும் தீடீர் அதிர்ச்சிகளுக்கும் CT ஸ்கேன் பொதுவாக பரிந்துரைக்கப்படும்.
உங்கள் நோய்களுக்கான சோதனைகளை குறித்து மருத்துவர் பரிந்துரைத்தால் அதைக்குறித்த மேலதிக விபரங்களை கேட்டு தெளிவை பெற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி.
ஆங்கில மருத்துவப்பதிவாக்கங்களிலிருந்து தமிழ்மொழி பெயர்ப்பு ஆல்ப்ஸ் தென்றல் நிஷா எனும் Nishanthi Prabhakaran
புகைப்படங்கள் நன்றி ஆங்கில விக்கிமீடியா
நல்ல பகிர்வு அக்கா...
பதிலளிநீக்குதெளிவான விளக்கம் , இத வச்சு மற்றவர்களுக்கு எளிதில் புரிய வைத்து விடலாம்.
பதிலளிநீக்குநன்றி
முனி.