29 ஆகஸ்ட் 2019

ஆப்பிள்: பழம் வேண்டுமா? அள்ளிக்கொண்டு போங்கோ 🤷‍♀️🤷‍♀️

ஆப்பிள்: பழம் வேண்டுமா?
அள்ளிக்கொண்டு போங்கோ 
🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

கனவுத்தோட்டம் 
காய்த்ததும் கனிந்ததும்
கற்பனையென்றெண்ணி
நிச்சலனமாயிருந்தேன்🙋‍♀️🙆‍♀️

நச்சென சத்தம் 🙆‍♀️🙆‍♀️
நடு உச்சி வீக்கம் 
அண்ணாந்து பார்த்தேன்
ஆங்காங்கே ஆப்பிள்

ஆ.. வென அதிர்ந்து 
சட்டென சறுக்கி 🙇‍♀️🙇‍♀️
பரதம் ஆடி - தாழ்
பணிந்து எழுந்தேன் 
குவியலாய் ஆப்பிள்.

பூத்துக்காய்த்து 
பறிப்பாரின்றி 
பழுத்து,விழுந்து 
குன்று மணி போல் 
செஞ்சிவப்பில் 
பளபளவெனவே
சிதறிக்கிடக்குது

ஈரிரண்டு வயதில் 
ஏ பார் அப்பிள் 
அழகாய் சிவப்பில் 
அரண்மனை பழமாய்
பறித்திட முடியா
பணக்கார பழமது

நாலிரண்டு வயதில் 
நாலிரொரு துண்டு 
நா ருசித்த அப்பிள்
நா உணர்ந்த வாசம் 
நானின்றுணர்ந்தேன்

ஈரேழு வயதில் 
திருடிச்சுவைத்து
திக்குத்திக்கென 
விக்கித்திரிந்த 
நினைவுச் சுழலில் 
நானின்று சுழன்றேன்

அன்றொரு பொழுதில் 
அரண்மனை பழமாய் 
அதிசயமானது
இன்றிங்கென் காலடியில் 
கொட்டிக்கிடக்குது.

நச்சில்லா அருங்கனி 
நான் கற்ற முதல் கனி
எட்டாக்கனி யன்று
கிட்டிக்கிடக்கு 
தின்றிங்கே
இயற்கையின் அதிசயம்
இதுவொரு அற்புதம்
ஏற்றமும் இறக்கமும் 
இறைவனின் கொடையல்லோ?

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏







4 கருத்துகள்:

  1. சமீபத்திய பயணத்தில் இப்படி ஆப்பிள் தோட்டங்கள் கண்டு வந்தேன் நிஷா.

    கவிதை நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட் அண்ணா. நீண்ட காலத்தின் பின் மீண்டும் கணனியில் அமர்ந்தேன்.

      நீக்கு
  2. ஆஹா...
    அருமை.
    ரசித்தேன் அக்கா உங்க கவித்தேனை.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!