ராஜாஜியின் அரை நாள் கல்வி இலங்கையில் வெற்றி பெற்றிருக்கின்றதா? எனும் தலைப்பில் நான் இட்ட பதிவில்Mythily Kasthuri Rengan சூழல் சார்ந்து தான் உணர்ந்ததை பதிவாக்கி இருந்தார். பல கேள்விகளையும் கேட்டிருந்தார். அப்பதிவில் முன் வைக்கப்பட்ட வைகளுக்கான பதில்களை தேடுமுன் தனி மனிதர்களின் சமூகக்கடமை எப்படியானது என பார்க்கலாம்.
இரு பதிவுகளில் லிங்கும் பின்னூட்டங்களில் இணைக்கின்றேன்.
என் சூழல் சார்ந்த அனுபவப்பதிவு என்பதனாலேயே எழுத்தில் திடமாக என்னால் கேள்விகளை கேட்க முடிந்தது.ஊகங்களின் அடிப்படையில் பல விடயங்களை அணுகுவதற்கும், அல்லது, யாரோ ஒருவர் சொன்னதை கண்ணை மூடி அப்படியே நம்புவதற்கும் முன்னால் அனுபவம் பெரும் ஆசான் அல்லவா?
நாம் பெற்றிருக்கும் வெற்றி என்பது தேடும் வெற்றிப்பாதையை விட மகத்தானது அல்லவா? .
எங்கள் கிராமங்க்ளில் மாற்றம் உருவாக்கியதில் எந்த தலைவரும் இருந்ததில்லை. அக்காலத்தில் தலைவன் என ஒருவனும் இல்லை. அதன் பின்பும் 2004 சுனாமியில் ஊரே தரை மட்டமாகி, அரசு உதவிகள் சரியாக கிடைக்காத நிலையில் மாடிவீடுகள், மாளிகைகள் பலவும், வங்கி, வைத்தியசாலை,1 தொடக்கம் 5 வரையான ஆரம்ப பாடசாலை நான்கு, உயர் தர பாடசாலை என அனைத்து சமூக சீர் உயர்வுக்கு பின்னும் தனி நபர்கள் தம் சமுதாய கடமை உணர்ந்த உதவிகள்,ஆதரவு இருக்கின்றது. எங்கள் கிராமங்கள் நகரங்களுக்கு இணையான / அதை விட மேம்பட்ட வளர்ச்சியை பெற்றிருக்கின்றது. எப்படி சாத்தியமானது?
எனது ஊர் என்பது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில், பெரிய கல்லாறு😍.
பின்னூட்டங்களில் தொடர்கின்றேன். ஊரின் இன்றைய வளம், நிறைவை கூகுள் மேப் 2010 எடுத்த புகைப்படங்களினூடாக இணைக்கின்றேன்.
1.சமூக மாற்றங்கள் என்பது அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு மாத்திரமல்ல, ஒவ்வொரு தனி மனிதனும் தன் கடமையை உணரும் போது தான் சாத்தியமாகின்றது. நம் முன்னோர் காலத்தில் அரசன் என ஒருவன் நாடாள இருந்தாலும் கிராமங்கள் தோறும் பஞ்சாயத்து என அமைப்பை ஏற்படுத்தி,கிராம முன்னேற்றம், குளங்களை தூர்வாரல், பொது நிலங்களை பாதுகாத்தல்,பயன் படுத்தல்,கோயில்களை பராமரித்தல்,பாதைகளை செப்பனிடுதல், என சுயாதினர்களாக இயங்க விட்டிருந்தார்கள். அதற்கான் பொருளாதார தேவைகளை அந்தந்த மகக்ளே பகிர்ந்தும் கொண்டார்கள்.
தும்மினால் அரசு, துவண்டாலும் அரசு, என எல்லாவற்றையும்ம் அரசு மட்டுமே செய்யட்டும் எனும் மேம்போக்கு அக்காலத்தில் இருக்கவில்லை. தலைவன் என ஒருவன் அவர்களுக்குள் இருக்கவில்லை. அந்தந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் கூடிப்பேசி, குழு அமைத்து முடிவெடுத்து தாம் சார்ந்த சூழலை,காலத்துக்கு தக்க படி மாற்றிக்கொண்டார்கள்.
இன்றைக்கும் பல கிராமங்களில் ஊடறுக்கும் குளங்கள், ஏரிகள், வானுயந்து நிற்கும் ம்ரங்கன், வாய்க்கால்களின் பின்னனியில் பல தனி மனிதர்களின் சமூகம் சார்ந்த நீண்ட கால பின்னோக்கிய திட்டமிடல் சிந்தனையே நிரம்பி இருந்திருப்பதை காணலாம்.
2. இலங்கை எனும் குட்டி தீவில் வாழும் மக்களே, யுத்தம், உரிமைப்பறிப்பு என நசுக்கப்பட்டும், முவின மக்கள், மதம் எனும் இன, மத பேதம் கடந்தும், தமக்கான சமூகம் சார்ந்த முன்னேற்றம்,தேவைகளை அரசினை எதிர்பார்க்காமல் அல்லது முழுமையாக தங்காமல தம் கடமை உணர்ந்து தம் சூழலை தற்பாதுகாக்க,முற்போக்கோடு உருவாக்க முடிந்திருக்கும் போது தமிழர்களின் தமிழ் நாட்டில் இருந்த வளங்களையும், ஆற்றல்களையும், ஒற்றுமையையும் இழந்து நிற்கும் இயலாமை, பிரிவினை எனும் நெருப்பில் எரிவது ஏன்?
3.உங்கள் கிராமங்கள், சக மக்கள், குறித்த மாற்றங்களை எங்கோ இருக்கும் ஒரு நபர் / தலைவர் எடுக்கும் முடிவுக்குட்பட்டதாக இருக்க வேண்டுமெனும் நிர்ப்பந்தம் ஏன்?
தமிழ நாட்டில் அந்த சூழலுக்கு சம்பந்தமில்லாத எவ்ரோ ஒருவர் தலைவர் எனும் பெயரில் சொல்வதை மட்டும் எப்படி நம்புகின்றீர்கள்? பின் தொடர்கின்றீர்கள்?
நான் மீண்டும் சொல்கின்றேன்மா,மாற்றம் என்பது ஒரே நாளில் வாரத்தில், வருடத்தில் சாத்தியம் இல்லை. குறைந்தது இரண்டு தலை முறை பின்னோக்கிய திட்டமிடல்கள் தேவை.
அதற்கு நாம் இதுவரை விட்டிருக்கும் தவறுகளை அலசி ஆராய்ந்து காயப்போட்டால் தான் ஓரள்வேனும் சரியான பாதை நோக்கிய இலக்கை நோக்கி இனியேனும் திரும்ப முடியும்.
ஔவையாரின் பாடலை பாருங்கள்.
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்...
இந்த பாடல் என்பள்ளிக்காலத்தில் மூன்றாம் வகுப்பு தமிழ் பாடதிட்டத்தில் இருந்தது. வரப்புயர எனில் கிராமங்களில் விவசாய நிலங்களில் நீர் நிறைந்திருந்தால் விவசாயம் செழிக்கும், விவசாயம் செழித்தால் அதனூடான் சமூகத்தின் வாழ்வாதாரம் நிறைவாகும், கிராமங்கள் உயரும் போது நகாங்களும் மேன்மை அடையும், பல நகரங்களின் முன்னேற்றம், நாட்டை முன்னோக்கிய பாதையில் செலுத்தும், இதன் பின்பே மன்னன் என்பவனின் உயர்வும் உண்டு. இது தான் அக்கால மன்னர்களின் வெற்றிக்கு பின்னிருந்த அடிப்படை.
ஆனால் இன்று நடப்பது என்ன?
எங்கோ ஒரு அரசன்,அல்லது தலைவன் சொல்வதை கேட்பதும் வழி நடத்துவதாக நினைப்பதும், அவன் அவன் இருப்பிடத்தில் இருந்து கொண்டே தனக்காக பவரை உபயோகிக்கும் போது அவனவன் சுய விருப்பு வெறுப்பும் நம் மேல் திணிக்கப்படுகின்றது என்பதை சிந்திப்பதில்லை.
நாம் வாழும் சூழலுக்காக முடிவை நாம் தான் கூடிப்பேசி எடுக்க வேண்டும். நமக்கான தீர்வை தலைவன் ஒருவன் தருவான் என்பது தன் கடமை உணரா மனிதனின் மெத்தனப்போக்கு என்பேன் நான்
அத்தனை காலம் ஏன்?
இன்றைய சூழலில் பொள்ளச்சி பெண்கள் என பெண்களை அரசியல் சதுரங்கத்தின் பகடைகளாக்கி கொண்டிருக்கும் தலைவர்கள் எப்படி மக்களின் வழிகாட்டிகளாக இருந்திருக்க முடியும் என் ஏன் சிந்திக்க மறுக்கின்றோம்? நம் தேவைகளை குறித்து அக்கறைப்படாமல் தன் தேவைக்கு பயன் படுத்தி அடிமைப்படுத்துவோரா நமக்கு விடுதலை பெற்று தர போகின்றார்கள்?
உனக்கும் என்னைப்போல் ஆறறிவு தன உண்டு. உன் தேவையை நீயே சிந்தித்து, உன் சூழலுக்கு தக்கபடி முடிவெடுத்து, உன் சமூகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல், அதற்காக அனைத்து உதவியும் நான் என் செல்வாக்கை கொண்டு செய்கின்றேன். மக்கள் நலனே எனக்கு முக்கியம் என எந்த தலைவனாவது சொல்கின்றானா? நானா நீயா என அவனவனுக்குள் தங்களை பிரமாண்டப்படுத்தும் எவனும் எமக்கு தலைவனாக இருக்க முடியாது. கூடாது.
ஆதரவோ.எதிர்ப்ப தலைவன் என முன் வரும் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒருவகை குறிக்கோள் இருக்கின்றது. தாம் எடுத்த முடிவுக்கு மக்களை ஆட்டலாம் என நினைப்பிருக்கின்றது. குரங்காட்டி கையில் இருக்கும் சாட்டைகளை கையில் வைத்து கொண்டு ஆடுரா ராமா ஆடு என்கின்றார்கள்.
நாங்கள் ஐந்தறிவு மிருகங்களாக் ஆடுகின்றோம். கல்வி, ஜாதி, பெண் விடுதலை என்பது என்ன என்பதெல்லாம் படிப்படியாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய மாற்றங்கள்.
🔴முதல் தலைமுறைக்கு கல்வியின் அடிப்படையை புரிய வைத்து, இரண்டாம் தலைமுறைக்கு கல்வியின் நோக்கம் பரவலாக்கப்பட்டு,உணர்த்தி, மூன்றாம் தலைமுறையில் அனைவருக்கும் கல்வி முழுமையாக கிடைக்க செய்திருந்தால், நான்காம் தலைமுறை தானாகவே ஜாதி என்றொன்றில்லை எனப்தை உணர்ந்திருக்கும்.
நான்கு தலைமுறைஎன்பது ஒரு தலைமுறைக்கு 15 வருடங்கள் எனும் ணக்கில் ஒரு பிள்ளைகான அடிப்படை கற்றலுக்குரிய காலம், கிரகித்தலின் அடிப்படையில் மட்டுமே சத்தியம்.
ஒரு மனிதர் தன் 15 வயதுக்குள் எவையெல்லாம் கற்கின்றானோ அதுவே அவனை வாழ் நாள் முழுமைக்கும் வழி நடத்தும், ஒரு குழந்தை தன் ஐந்து வயதுக்குள் காண்பதும்,கேட்பதும் அவன் சிந்தனைகளை தீர்மானிக்கும்.
உங்கள் சூழலில் விடுதலை மாற்றம் என சொல்லி சொல்லி எதையேனும் முழுமையாக மாற விட்டிருக்கின்றார்களா? எரிந்த நெருப்பில் எண்ணெய் உற்றி இன்னமும் பெரு நெருப்பாக்கி கொண்டிருக்கின்றார்களா?
இன்றைக்கு நீங்கள் காணும் சூழலுக்கான் விதை எங்கே என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் கேள்விகளுக்கான பதில்களுக்கு முன் இது நம் கடனையை நாம் உணர வைக்க பகிர்ந்தேன்.
மீதி பதில்களோடு தொடர்வோம்.
தொடர்புடைய இணைப்புக்க்ள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!