04 மார்ச் 2019

“நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்”

“நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்”
மன்னாரில் கிறிஸ்தவர்களால் நிகழ்த்தப்பட்ட, 
அத்துமீறல்கள்,மத அவமதிப்புக்கு, கிறிஸ்துவின் வார்த்தைகளை விசுவாசித்து பின்பற்றும் 
நிஷாவாகிய நான் கடும் கண்டனங்களைப் 
தெரிவிக்கின்றேன்.

மதத்தின் பெயரால் மதப்போரை துவக்குகின்றவனும், 
மாற்று மத நம்பிக்கைகளை தூற்றுபவனும் 
மற்ற மதத்தவர் மீது வன்மம் பாராட்டுகிறவனும் எந்த மதத்திலும் இருக்க தகுதியற்றவன் என்பது எனது கருத்து.

சம்பந்தப்பட்டவர்கள் தாம் செய்த தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பதுடன்,மீண்டும் அதே அலங்கார வளைவை அவ்விடத்தில் சீரமைத்து கொடுக்கும் படியும் அழுத்தம் கொடுப்பதே கிறிஸ்துவை பின்பற்றுவதாக் சொல்வோருக்கு முன் இருக்கும் ஒரே தேர்வு.
மேலும், இப்பிரச்சனையினூடான உரசல்களை , விரிசல்களாக்கி உரிமைக்கான போராட்டத்தில் உரிமை, உடமை, உயிர்ப்புக்களையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் எமது மக்களுக்குள் பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் அனைவரும் கண்டிப்புக்குரியவர்கள்.
எமது இளையோரின் உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளுக்கு ஆதரவு கொடுப்பதுடன், எதிர் வார்த்தைகளால் மத வெறியூட்டும் செயல்பாடுகளிலும் ஈடுபடும் எவராக இருந்தாலும் என் நட்பிலிருந்து நீக்கப்படுவார்கள்.
சமூகத்துக்கு தொண்டாட்டுவதாக சொல்லி இன,மத வெறிகளை பரவ விடுவோர் எவராக இருந்தாலும் அவர்கள் ஒதுக்கபப்ட வேண்டியவர்களே.
.#மதவாதம் / #மதவெறி எனும் தீவிரவாதம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
இந்த மாதிரியான சமூக விரோத செயல்பாடுகளின் போது சமூக வலைத்தளங்களின் மூலம் உடனடித்தீர்வுகளை தேடி எத்தகைய அழுத்தங்களை தரலாம் என அறிந்திருப்பீர்கள்.
நமக்கென்ன என நாம் விலகிச்செல்வதனால் தான் தீங்குகளை பரப்புவோர் அதிகாகி இருக்கின்றார்கள்.
எம் இளையோருக்காக சரியான வழிகாட்டல்கள் அரிதாகி போயிருக்கின்றது. தயவு செய்து இனியும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல் உங்கள் கருத்துக்களை அழுத்தமாக பதிவாக்குங்கள்.கிறிஸ்தவ சகோதரர்களே!!!
❤️❤️ஆகையால் உங்களுக்கு பிறர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்களோ அதை அவர்களுக்கு செய்யுங்கள்.
🔘 நீங்கள் நியாயத்தீர்ப்புக்குள்ளாக தீர்க்கப்படாதிருங்கள்.
🔘 எந்த தீர்ப்பை இடுவீர்களோ அந்த தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்
🔘எந்த அளவையால் அளக்கின்றீர்களோ, அதே அளவையால் நீங்களும் அளக்கப்படுவீர்கள்.
🔘உன் கண்ணில் இருக்கின்ற விட்டத்தை கவனியாது, உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துருப்பை பார்ப்பதேன்?
🔘உன் சகோதரனை நோக்கி உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடு என எப்படி சொல்வீர்கள்? உங்கள் கண்களில் துரும்பு இருக்கின்றதே?
🙏🙏இந்த நேரம் உங்களுக்கானது, மன்னிப்பை வேண்டுங்கள்.
🙏🙏🙏 மன்னிப்பு மகத்தான மாற்றங்களை விளைவிக்கும்.

1 கருத்து:

  1. நிஷா அங்குமா தலைமன்னாரிலுமா இப்படியான நிகழ்வுகள்?! ஆச்சரியமாக இருக்கிறது.

    உங்கள் கருத்துகள் அருமை...

    மன்னிப்பு!! நல்லதொரு வார்த்தை நிஷா. எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை நிஷா. ஒவ்வொரு கருத்தும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!