12 ஆகஸ்ட் 2017

நிஷாவின் அனுபவ மொழிகள்.

 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. (சங்கீதம் 118:22,23).
உண்மையான வார்த்தை.
நம்மால் வேண்டாம், தேவையில்லை என ஒதுக்கப்பட்டவர்களே நமக்கு முக்கியமானவர்களாக போகும் காலமும் வரும்.
நமக்கு தேவையில்லை என நம்மால் ஒதுக்கப்பட்டவர்கள் நம் மரணத்தின் இழப்பை எண்ணி துடிப்பவர்களாக இருப்பார்கள்.
நம்மால் உயர்த்தப்படுகின்றவர்களினாலேயே நாங்கள் தாழ்த்தப்படுவோம். அழிக்கவும் படுவோம்
நாம் வாழும் காலத்தில் நமக்கு முக்கியமானவர்கள் என மதித்து நடக்கும் எவரும் நாம் தாழும் காலத்தில் எம்முடன் துணை வருவதில்லை.
நாம் வளமாய் வாழ்ந்த காலத்தில் நாம் வேண்டாம் என ஒதுக்கி நடத்துபவர்களே நம் துயர நேரத்தில் துணை வருகின்றார்கள்.
நாம் யாரையெல்லாம் வேண்டாம் என ஒதுக்குகின்றோமோ அவர்கள் நமக்காக கண்ணீர் சிந்துகின்றவர்களாகவும், உதவி செய்பவர்களாகும் இருப்பார்கள்.
நாம் தாழ்த்துகின்றவர்கள் நம்மை உயர்த்துகின்றவர்களாக இருப்பார்கள்.
ஒருவரை திருப்திப்படுத்த இன்னொருவரை பகைப்பதும், வெறுப்பதும், ஒதுக்குவதும் நமக்கு நாமே வைக்கும் கொள்ளி.
மக்கள் கூடி இருக்கும் சபையில் ஒருவரை கனப்படுத்தும் போது அவர்கள் அதற்கு தகுதியானவரா என்பதை ஆராய்ந்து எவரையும் புகழாமலும் இகழாமலும் எல்லோருடனும் ஒரே சம மன நிலையில் நடப்பது எக்காலத்திலும் சிறந்தது.
 

4 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை!!!

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  3. இருபத்திமூன்றாவது வசனத்தை விட்டுவிட்டீர்களே!! அதுதானே முக்கியம். “அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.”

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!