தன்னை விட்டால் யாருமில்லை, தான் மட்டுமே அனைத்தும் அறிந்த அறிவாளி, இவ்வுலகில் தன்னைப்போல் புத்திஜீவிகள் இல்லை என இறுமாப்பாய் சக மனிதரை துச்சமாய் நினைப்பவர்களையும் புறம் பேசி அகம் குதறும் ஓநாய்களையும் இனம் காண முடியாதிருப்பதேன்?
தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் நம் மேல் அதிக அக்கறை கொண்டவனாயிருப்பான் என உணர முடியாதிருப்பதேன்?
துர்க்கிரியைகளுக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனிதரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய துணிகரங்கொண்டிருக்கிறது. ஆனாலும் எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு;
இன்னது சம்பவிக்கும் என்று மனிதன அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று மனிதனுக்கு சொல்லத்தக்கவர் யார்?
பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன?
உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். 2 கொரிந்தியர் 8:21
ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற -நீதிமொழிகள்.31:8
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. -நீதிமொழிகள்.22:22
ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற -நீதிமொழிகள்.31:8
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. -நீதிமொழிகள்.22:22
சமீபத்திய நிகழ்வுகளும் மனித மனங்களின் மாறாட்டங்களும் அதனால் ஏற்பட்ட இழப்பின் வலிகளினாலும் என் எழுத்துக்களிலும் அவை எதிரொலிக்கின்றதென்பேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். காலம் அனைத்துக்கும் மருந்தானால் அனைத்திலிருந்தும் மீண்டும் வருவேன்.
எனக்கு மனக்குழப்பம் வந்தால், எதிலும் பங்கெடுக்காமல் சில நாட்கள் அமைதியாக இருப்பேன். நீங்கள் வெளியே சொல்லிவிட்டீர்கள். இதுவும் ஒரு விதமான கவலையின் வெளிப்பாடுதான். மனம் சமாதானம் அடைந்தபின் வாருங்கள். உற்சாகமாக எழுதுங்கள்...
பதிலளிநீக்குமனம் அமைதி பெறுக...
பதிலளிநீக்குஎல்லாம் நலமாகும்.
வலிகளிலிருந்து மீண்டு உயிர்த்தெழுதுவருவீர்கள் சகோ/நிஷா! இதுவும் கடந்து போகும். காலம் அனைத்து வலிகளுக்கும் மருந்தாகவும் இருக்கும். நீங்களே சொல்லிவிட்டீர்கள் மீண்டு வருவேன் என்று. உங்களுக்கு அந்தத் தன்னம்பிக்கை இருக்கும் போது வருவீர்கள் என்பது உறுதி! நல்லது நடக்கட்டும்.
பதிலளிநீக்கு