24 நவம்பர் 2016

நீதிமொழிகளும் நிஷாவும்

  நீதிமொழிகளும் நிஷாவும்
****************************** 

1.மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும்  வெளிப்படையான 
கடிந்துகொள்ளுதல்  நல்லது.
தன்நாவினால்  முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்து
 கொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். 
💃💃💃உண்மையான அன்பு கொண்டவர்கள் தாம் நேசிக்கும் மனிதர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாது செல்ல மாட்டார்கள். நல்லது கண்டால் தட்டிக்கொடுத்து பாராட்டுவது போல் தவறு கண்டு கண்டிப்பதும், செய்யும் பிழை உணர்த்துவதுமே நல்ல நட்பூக்கு அடிப்படை. நண்பன் செய்யும் தவறுகளை முகதாட்சன்யம் பார்த்து கண்டும் காணாது செல்வது நட்புக்கு நாம் செய்யும் துரோகமே! 
நல்ல நட்புக்கு நிஷா தான் பெஸ்டாம்!💙💙💙💙

2.முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான்.💃💃💃எத்தனை உண்மை!
முகத்துக்கு நேரே பாராட்டி முதுகில் குத்தும் நண்பர்களை இனம் கண்டு விலக வேண்டும், நண்பன் செல்வது தவறான பாதை என தெரிந்தும் அவன் செய்யும் தவறை உணர்த்தாமல் கவலைப்படுவான், கலங்குவான், கோபிப்பான் என நினைத்து கண்டுக்காணாமல் செல்பவரை இனம் கண்டு நாமே ஒதுங்கிச்செல்ல வேண்டும், அவர்கள் நமக்கு எதிரிகளும்,துரோகிகளும் ஆவார்கள்.

3.வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். 
💃💃💃துஷ்டரைக்கண்டால் தூர விலகு என்பார்கள். சமுதாயத்தில் நல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆரோக்கியமான் விவாதங்களை விதாண்டாவாதங்களாக்கி சண்டைகள் வைராக்கியங்கள் கோபங்கள் வருமானால் அவ்விடம் விட்டு அகல்வது நமக்கு மேன்மையே!

4.ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.💃💃💃நல்லது நடக்குமானால் நல் ஆலோசனை செய்து விவாதம் செய்வதும், தீமையை விட்டு விலக்கி நன்மையை விதைப்பதும் நல்லதே! உண்மையை உள்ளபடி பேச என்றுமே தயங்கக்கூடாது.
மூன்றாவது வசனத்துக்கும் நான்காவதுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகவனித்து பாருங்கள்.

5.மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். 
💃💃💃கருத்தாடலின் போது அக்கருத்தினை திசை திருப்புவோருக்கும், முயலுக்கு மூன்றே கால் என தான் சொல்வதே சரியென சொல்லி தங்கள்வாதங்களையே  தாறுமாறாக்கி பதிலளித்து விதண்டாவாதம்செய்வோருக்கும்அகக்கண்களை 
குருடாக்கி அந்தகார இருளில் இருப்போருக்கும் விதண்டாவாதமாய் சம்பந்தமில்லாமல்கேள்விகள்கேட்போருக்கும்நாம்பதில்சொல்லத்தேவையில்லை.

6.மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
💃💃💃ஐந்தாவதில் சொல்லப்பட்ட வசனத்தினை வாசித்து விட்டு ஆறாவதுக்கு வந்தால்!!!!!!!!!!!!!!! 
விவாதங்களுக்கு பதில் சொல்லாது விலகி மௌனமாய் செல்வோரும், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தராமல் அசட்டை செய்வோரும் மௌனம் சம்மதம் என்பதன் மூலம் நம் கருத்தினைஏற்றுக்கொள்கின்றார்கள் 
என புரிந்து கொள்ளவும் வேண்டும்.
குறிப்பிட்ட விவாதம் அல்லது கலந்துரையாடலை திசை திருப்புவது போல் அதற்கு சம்பந்தமில்லாமல் வரும் கருத்துக்களை த்தான் நாம் அசட்டை செய்ய வேண்டுமே தவிர ஒரு விவாதத்தில் ஈடுபட்டால் முடிவு வரை நம் கருத்தில் உறுதியாய் இருக்க வேண்டும்.
மாறி மாறி பேசுவதும், விவாதத்தை திசை திருப்புவதும் அவர்கள் கருத்துக்கு நமக்கு பதில் தெரியாது எனும் இயலாமையில் மொத்த வெளிப்பாடே அன்றி ஞானமான காரியமல்ல !
வேண்டாத விவாதம் என தோன்றி நாம் மௌனமாய் செல்வது தாம் சொல்லும் கருத்து சரிஎன நாம் ஏற்றுக்கொண்டதாய் அவனுக்கு புரிய வைத்து தன்னை மேதை என எண்ணும் படியும் செய்கின்றதே!
முட்டாள்தனமாக விவாதம் செய்பவர்களின் முன் நான் என் கருத்தில் உறுதியாய் இருந்து ஞானியாக இருக்கவே விரும்புகின்றேன்!

7.தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்
💃💃💃ஆமாம், தனக்கு இலாபமும் நன்மையும் கிடைக்க தன்னை நம்புபவர்களுக்கு தவறான பாதை காட்டி உணர்வுகளை உசுப்பேற்றி காரியம் சாதிக்க நினைப்போரை நாம் இனம் காண வேண்டும்.
தன் காரியம் முடிந்தபின் நான் சும்மா பகடிக்கு செய்தேன் என சொல்லி கையை தட்டிக்கொண்டே செல்பவர்கள் தான் அனேகர்.

8. கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். 
💃💃💃இப்படியானவர்கள் ஈரைப்போனாக்கி பேனைப் பெருமாளாக்கி ஊரென்ன உலகத்தையே உருட்டி உரலுக்குள் போட்டு இடிப்பார்கள். வதந்தியை தந்தியாக்கி எரியும் நெருப்பை இன்னும் திகு திகு என எரியை வைப்பார்கள்.
தங்கள் ரேட்டிங்க எகிறி வியாபாரம் பெருக கடைப்பிடிக்கும் பத்திரிகை, மற்றும் செய்திச்சேனல்களை நடத்துவோருக்கு இதை விட வேறென்ன வேலை?

9.விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
💃💃💃கோள் மூட்டுகின்றவர்கள் நல்லதை சொல்ல மாட்டார்கள்! நல்லவர்கள் ஒருவர் சொன்னதை ஒன்பதாக்கி அடுத்தவரிடம் சொல்ல மாட்டார்கள். ஒன்றைப்பத்தாக்கி சின்ன விடயத்தையும் பெரிய சண்டை யாக்கும் திறமையை இந்த கோள் மூட்டுவோர் கொண்டிருப்பதனாலும் அவர்கள் வார்த்தைகள் சட்டென இதயத்தினுள் புகுந்து மனதை கலங்கடித்து காயப்படுத்துவதனால் உண்ர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுப்பதனாலும் விரோதங்கள் அதிகமாகும். அப்படியானவர்களிடம் நாம் நம் இரகசியங்களை பகிரவும் கூடாது. நம்மை நம்பி அடுத்தவர் சொல்லும் விடயங்களை நாம் இன்னொருவருக்கும் சொல்லவும் கூடாது.
நம்பிக்கை தான் எமது தும்பிக்கை!

10.நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்
பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
பகையை வஞ்சகமாய் மறைத்துவைக்கிறவனெவனோ அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். 
 💃💃💃அன்பாய், ஆதரவாய், பாசமாய், அக்கறையாய் இருப்பது போல் நடித்து பாசம் காட்டி காரியம் சாதிப்போரை இனம் காண்பது மிகக்கடினம் தான். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை மறைத்து கபட வேடம் போடுவதில் வல்லவர்கள்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போலவே 
தனக்குள் இருக்கும் பகை உணர்வை மறைத்து பாசமாய் நடிப்பவர்கள்வேசம் ஒரு நாள் வெளிப்படும்,

அடுத்தவனுக்கு தீங்கு செய்ய நினைத்து குழியை வெட்டி காத்திருப்பவன் கடைசியில் அவனே விழும் நிலையும் உருவாகும்,
********************************************************************************************************
மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?
💃💃💃எனக்குப்புரியவே இல்லை! உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்! 
ஊரைச்சுற்றிப்பார்த்தேன் .......மாயை
உலகைச்சுற்றிப்பார்த்தேன்.... மாயை
வானத்தை பார்த்தேன்...... மாயை
பூமியில் நான் காண்பதெல்லாமே மாயையாகத்தான்  இருக்கின்றது!

நீதிமொழிகள் என்பது பைபிளின் இருக்கும் வேதமொழிகளாகும்! அதனோடு என் மொழிகளையும் கலந்தேன்.

7 கருத்துகள்:

  1. அனுபவங்கள் கற்றுத் தரும் பாடங்களுக்கு அளவேது...? அருமையான பதில்கள்...

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே தத்துவ மொழிகள் அருமை வாழ்த்துகள் தொடரட்டும் இவ்வகைகளும்....

    பதிலளிநீக்கு
  3. wow கலக்சன் ..
    வாழ்த்துகள் ..

    பதிலளிநீக்கு
  4. அசத்தல் சேகரிப்புக்கள்!!

    பதிலளிநீக்கு
  5. புது மொழிகளும் கருத்துகளும் ஜோர்.

    //வேண்டாத விவாதம் என தோன்றி நாம் மௌனமாய் செல்வது தாம் சொல்லும் கருத்து சரிஎன நாம் ஏற்றுக்கொண்டதாய் அவனுக்கு புரிய வைத்து தன்னை மேதை என எண்ணும் படியும் செய்கின்றதே!
    முட்டாள்தனமாக விவாதம் செய்பவர்களின் முன் நான் என் கருத்தில் உறுதியாய் இருந்து ஞானியாக இருக்கவே விரும்புகின்றேன்!//

    அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று மௌனமாக சென்று விடுவேன்!

    பதிலளிநீக்கு
  6. தத்துவ மொழிகளுக்கு தங்கள் கருத்துக்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  7. நல்ல கருத்துக்கள் நிஷா சகோ! நீதிமொழிகளும்!

    கீதா: ஆம் நிஷா! நல்ல சுவிசேஷப் பாடங்கள்! நான் சமீபத்தில் ஒரு வேலை விடயமாக திருவிவிலியம் வாசிக்க நேர்ந்தது! அப்போது நிறைய அறிந்து கொண்டேன். படிக்கும் காலத்திலேயே சிறிய வடிவில் திருவிவிலியம் பள்ளியில் கொடுப்பார்கள். அப்போது வாசித்ததை விட இப்போது வாசித்த போது நிறைய புரிந்தது. அருமையான பகிர்வு உங்கள் கருத்துக்கள் உட்பட!!!

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!