25 நவம்பர் 2016

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2


ஈழப்போராட்டம் குறித்த வரலாற்று சம்பவங்கள்பலர் எழுதி இருக்கின்றார்கள்!

அவரவர் பார்வையில் அவர்களுக்கு சாதகமானபடி எழுதி  ஒருவரை உயர்த்தி இன்னொருவரை தாழ்த்தி...அவர்கள் செயதது சரி, மற்றவர்கள் தேசத்துரோகிகள் இப்படி பல குழுக்களை குறித்தும் அதன் வரலாறு குறித்தும்... அவர்களுக்குள்ளான போட்டுக்கொடுத்தல் காட்டிக்கொடுத்தல் குறித்தும் எழுதுவது தான் வரலாறென நினைத்து தாமும் குழம்பி வாசிப்போரையும் குழப்பிகொண்டிருக்கின்றார்கள்..
அனைத்திலும் அடிப்படையாக தமிழின அழிப்பெனும் பெயரில்விதைக்கப்பட்ட அறிவை மழுங்கடிக்கும் பணிக்கு இந்த கருத்து வேற்றுமைகள் தான் அடித்தளம், நம் கை கொண்டே நம் கண் குத்தப்படும் அழகியல் யுத்த தர்மம், எது புரிய வைக்க ப்பட வேண்டும் என்பது தான் இப்போதைய முக்கியம். நம் இலக்கு எதுவாயிருக்க வேண்டும் என்பது தான் நம் கவனம் செல்ல வேண்டும், நடந்தவை கடந்தே போகட்டும், நல்லதை நினைப்போம்.


ஈழ மக்களுக்கான் விடுதலை யுத்தத்தில் விடுதலைப்புலிகளுக்கான பங்கும் மேதகு பிரபாகரன் அவர்களின் வழி நடத்தலும் மகத்துவமானது.
பிரபாகரன் அவர்களை போல் ஒருவர் இனி எமக்குள் பிறக்க போவதும் இல்லை, பிறந்ததும் இல்லை, ஆரம்ப காலத்தில் அவரால் சில பல தவறுகள் நடத்தப்பட்டிருக்கலாம். அப்படியான தவறுகளை நடத்த அவர் வழி நடத்தப்பட்டிருக்கலாம்.
எம்மை அடிமைப்படுத்த நினைத்தவர்களை அலற வைத்து தன்னை மட்டுமல்ல தன் முழு குடும்பத்தினையும் எமக்காக அர்ப்பணித்தவர் அவர்!
நம்மால் இன விரோதிகள் என சொல்லப்படும் சிங்கள் மக்களின் ரியல் ஹீரோ அவர், அவர்களாலும் நேசிக்கப்பட்டவர், என்னுடைய பல சிங்கள் நட்பூக்கள் அவரை நேசிப்பவர்கள். பகைவனையும் அந்தரங்கத்தில் நண்பனாக்கிடும் மாண்பு அவரிடம் இருந்தது.
ஈழத்தமிழன் எனும் இன உணர்வில் எம்மை முழு உலகுக்குள் அடையாளம் காட்டி தலை நிமிரச்செய்து பலருக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் அவர். விடுதலைப்போருக்காக தன்னை மட்டுமலல் தன் குடும்பத்தையே அர்ப்பணித்த அவரின் தனிப்பட்ட குணாதியங்களை, ஆரம்ப கால தவறுகளை பேசுவது நம் கை கொண்டு நமது கண்ணையே குத்துவதற்கு நிகரானது!
விடுதலை போராட்டத்தில் ஆரம்ப கால தவறுகளை சுட்டிக்காட்டி நமக்குள் நாமே நம்மை தாழ்த்தி கொள்வதை நிறுத்தினாலே விடுதலை அடைந்து விடுவோம்.
நாளை நாம் விடுதலையை அறுவடை செய்வோம் என நம்பிக்கையோடு தம் உயிரை விதைத்தோரை நாம் போற்றும் அதே நேரம் நம் சின்னத்தனமான செய்கைகள், பேச்சுக்களினால் அவர்கள் நமக்கென உருவாக்கிச்சென்ற வரலாற்றின் மகத்துவத்தினை திசை திருப்பி நம் வரலாற்றை கேலிக்கூத்தாகாதிருந்தாலே விடுதலை தான்.
நாம் விடுதலை பெற வேண்டியது சிங்கள அரசிடமிருந்தல்ல நம்மிலிருக்கும் பெருமை, பொறாமை, ஈகோ போன்றவற்றிலிருந்தும் ஜாதி, மதம்,பிரதேசவாதம் யார் பெரியவன் , அனைத்திலும் நானே இப்படியான பல சிந்தனைகளிலிருந்து விடுபட்டு நம் சமுதாயத்தை கட்டு எழுப்ப வேண்டும் எனும் ஒரே பொது நோக்கம் வந்தாலே நமக்குள் விடுதலை சாத்தியமாகும்.
இஸ்லாமிய மக்கள் தமக்குள் பலவாறு அடி படுவார்கள். பொது விடயம் என வரும் போது மார்க்கம் எனும் விடயத்தில் கட்டுப்பட்டு ஒன்றாகுவார்கள்.
அவர்களை பார்த்தேனும் நாம் நமக்குள் ஒன்று பட்டு விடுதலை வேண்டி எம் மக்கள் செய்த தியாகத்தினை போற்றுவோம், கடந்து போன காலத்தில் அவர்கள் செய்த தவறுகளை பேசி பேசி நம்மை நாம் தாழ்த்திக்கொள்ளாது, ஈழ மக்கள் எனும் ஒரே சிந்தையில் மட்டும் சிந்திக்கும் போது தான் நமக்கு விடுதலை சாத்தியம் !
சிந்திப்போம்.. !

இன்னும் வரும்!


2 கருத்துகள்:

  1. அவர்கள் நமக்கென உருவாக்கிச்சென்ற வரலாற்றின் மகத்துவத்தினை திசை திருப்பி நம் வரலாற்றை கேலிக்கூத்தாகாதிருந்தாலே விடுதலை தான்.

    பிரபாகரன் அவர்கள் தம் மக்களுக்காக செய்த தியாகம் மகத்தானது. உண்மையான விடுதலையை எம் இனம் பெரும் நாளே அவரின் ஆத்மா சாந்தியடையும் நாள்.

    சிந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். பொது நோக்கம் என்ற அருமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள் தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!