19 ஜனவரி 2020

முதுமை கொடுமை எனும் Suya பச்சாதாபம் தேவை இல்லை!

எப்போதும் எங்கள் கலாசாரம் வேற, பண்பாடு வேற.  நாடு வேற. சூழல் வேற என சொல்லி  எமக்கு வேண்டாதவர்களை மேலை நாட்டினரிடமிருந்து பழகிக்கொள்ளும் நாங்கள் அவர்களிடம் காணப்படும் தனி மனிதசுதந்திரம், உரிமைகளை தக்க வைத்து கொள்ள திடடமிடும் வாழ்வியல் நெறியையும் கவனத்தில் கொள்வோமானால்
இந்த மாதிரி காதில் விழும்
வார்த்தைகளை உருவாக்கும் சுழலை நாம் தவிர்க்க முடியும்.

முதியோர் பேணல் எனும் வறட்டு கௌரவம், ஊர் உலகத்துக்கு பயந்து பெற்றோரை
வீட்டுவேலைக்கும், குழந்தை பராமரிப்புக்கும் பயன் படுத்தும் பாசவலைகள், வயதான காலத்தில் அப்பா உன்னிடம், அம்மா என்னிடம் என அவர்கள் அனுமதி இல்லாமல் அங்கும் இங்கும் அல்லாட விடாமல் ஓரிடத்தில் நிம்மதியாக வாழும் வாழ்க்கையை திடடமிடும் படி விழிப்புணர்வு அவசியம்.

மாறி வரும் காலம்,வேகம், உறவுகளுக்கு தக்க நாமும் மாறனும்.

பழங்கால வாழ்க்கை நியதிகளை   பேசி எஞ்சி கிடக்கும் அன்பும் வற்றி போக வைக்க கூடாது.

சுயமாக தம் தேவையை  பூர்த்தி செய்ய முடியாதோருக்கு
முதியோர்இல்லங்கள்  தரும் அன்பும் ஆதரவும் பாதுகாப்பும் சிறந்தது .

பிள்ளை பாசத்தில்   அடங்கி பயந்து இடி சோறு தின்பதை விட முதியோர் இல்லங்களில் தங்கள் சம வயதுடையோருடன் பேசி சிரித்து இஷடம் போல் வாழ்ந்து கொள்ள திடடமிட்டு  சுயத்தை தக்க வைத்து  கொள்வோருக்கு அவர்கள் பிள்ளைகள் அன்பும் நிரந்தரமாக தொடரும் .

முதுமை காலத்தில் பிள்ளைகள் தன்னை தாங்கும் சுமை தாங்கிகள் எனும் எதிர்பார்ப்பை பெற்றோராக நாம் வளர்த்து கொள்ளாமல் எங்கள் கடமை முடித்து எங்கள் முதுமைக்காலத்துக்கு திடடமிடுவதே சிறந்த வழி

முதுமை கொடுமை எனும் Suya பச்சாதாபம் தேவை இல்லை

குழந்தைகள் பெற்றுக்கொள்வது நமது கடைசி காலபாதுகாப்புக்கு  இல்லை, வயது போனால் படுக்கையில் வைத்து பராமரிக்கணும் எனும் எதிர்பார்ப்பில்  பிள்ளை பெற்று கொள்ள கூடாது.

• எங்கள் பிள்ளைகள் எங்கள் சுமை தாங்கிகள் அல்ல.
• பிள்ளைகளை எங்கள் சந்தோஷத்துக்காக பெற்று கொள்கின்றோம்.
• எந்த பிள்ளையும் என்னை நீ பெற்று எடு என கேட்பதில்லை .
• குழந்தை  பிறப்பு எங்கள் பெருமை .
• மனித சந்ததி வளருக்கிறது.
• குழந்தைகளை பெற்று எங்கள் பரம்பரை பெயரை தக்க வைக்கின்றோம்.

இப்படி எங்கள் சுய நலத்துக்கு பெற்று விட்டு அவர்கள் மேல் பாரம் சுமத்தும் உரிமையும் எமக்க்கல்லை என உணரணும்.

தென்னை வைத்தால் இளநி கிடைக்கும்
பிள்ளை பெத்தால்........?
எனும் எதிர்பார்ப்பே அடிப்படை
தவறு.

இந்த பரந்து விரிந்த உலகில் அன்பை பெற கொடுக்க பெற்ற பிள்ளைகளால் மட்டுமே முடியும் என்பது எங்கள் மக்களின் குறுகிய மன நிலை பாடு.

அன்பை பெறவும் கொடுக்கவும் தயாராக வாழ்க்கையை திடடமிடுவோருக்கு முதுமை சொர்க்கம்.

வாயில்லா மிருகங்களிடம் அன்பை பெற அதில் நிறைவு பெற முடிவது சாதாரண விடயம் அல்ல .

உலகின் விலை மதிப்பில்லாதது தாய் அன்பெனில் அதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாது.

நான் பெற்று  வளர்த்தேன்
எனக்கு நீ கடைசி காலத்தில் அன்பை கொடு எனும் எதிர்பார்ப்பு   சுய நலமானது.

பெற்று வளர்ந்து நல் மனிதனாக
உருவாக்கி பிழைக்கும் வழி
காட்டி  அவன் வளர்வில் வாழ்வில்  நிறைந்து தமக்கும் தன் முதிய காலத்துக்கும் போதிய சேமிப்பை, வருமானத்தை திடடமிடுவோருக்கு அவர்கள் பிள்ளைகள் அன்பும் நிரந்தரமாக கிடைக்கும்.

உழைக்கும் காலத்தில் கண்முடித்தனமான பிள்ளை பாசத்தில் அதீத நம்பிக்கை வைத்து சேமிப்பில்லாமல் நிர்க்கதியாக பிள்ளைகளை சார்ந்து வாழும் வாழ்க்கை முறை தவறு எனும் விழிப்புணர்வு முக்கியமே தவிர  அன்பை சடடம் போட்டு பெற முடியாது.

அன்பு நிலைக்க வேண்டும் எனில் எவரும் எவருக்கும் சுமையாக வாழ கூடாது.
எதிர்பார்ப்பும் இருக்க கூடாது

ஆணும் பெண்ணும் உழைக்கும் காலத்தில் தம் எதிர்காலம் குறித்து திடடமிடும் விழிப்புணர்வை உருவாகாமல் முதுமை சுமையானது
தனிமை துயரானது எனும்
சுய பச்சாதாபம், தன்னிரக்கம்
போன்ற எதிர்மறை சிந்தனையை தவிர்த்து,

முதுமையில் தனிமையை இனிமையாக ்கும் வழிகளை உருவாக்க முடியும்.

ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து மனங்கள் விரிச்சலடைந்து வெறுப்பை வளர்ப்பதை விட அவரவர் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து தேவைப்படும்
போது அன்பையும், ஆதரவையும் , மதிப்பையும்  தக்க  வைக்கும்  சூழலை  குறித்து திடடமிட வேண்டும்

நான் வாழும் சுவிஸ் நாட்டில் தங்கள் முதுமை காலம் குறித்து. 30 - 40  வயதுகளில் திடடமிடும் பலரை காண்கின்றேன்

தம் வயோதிக காலத்தில் எங்கே வாசிக்க வேண்டும், எப்படி வள வேண்டும் என திட்டமிட்டு  தம் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்காமல். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அன்பை முழுமையாக பெற்று   அவர்களின் விசேச நாள், திருமண நாள். களில்  தமது பெற்றோர், தாத்தா பாட்டி விருப்பம் கேட்டு அதை நிறைவேற்றும் இளையோரை  இங்கே காணலாம்

முதியோர் இல்ல பராமரிப்பில் உடல்கள்  பிரிந்து உள்ளங்கள்  நெருங்கி வாழ்வார்கள்

உடலால் நெருங்கி உள்ளங்களை கொல்லும்
எம்மவர் கடைப்பிடிக்கும் நம்பிக்கைகளும் கடடாயம் மாற்றம் பெற வேண்டும்.

3 கருத்துகள்:

 1. வாசித்ததில் மனது கலங்கியது...

  பொதுவாக பெற்றோர்களின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது...

  குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர், பெற்றோரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும்... மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் நடத்தி வருகின்றனர்...

  வயதான பெற்றோர்கள் தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாதவராக இருந்தவர்கள், கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர்கள்... எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்கமாட்டார்கள்... குடும்பத்தினர் தான் பெற்றோர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்...

  வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்...

  சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்....

  மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்...
  .
  பேரன் பேத்திகளை பெற்றோர்களிடம் இருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் பெற்றோர்களால் கொண்டாடப்படும் செல்வங்கள்...

  குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவர்களுக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு...

  பெற்றோர்கள் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட, பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்....

  வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது... ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள்... முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்...

  பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள்... பெண் சூழலுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து வாழ்பவள். ஆனால்... குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்... இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்...

  இவற்றை உணர்ந்து த பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்,அவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்...

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு சிந்தனை. பல பெரியவர்கள், தம் குழந்தைகள் தங்களை முதுமை காலத்தில் கவனித்துக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதால் அதிக ஏமாற்றம் அடைகிறார்கள் எனச் சொல்லலாம்.

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!