08 ஜனவரி 2020

நாடு பற்றி எரியும் போது பிடில் வாசித்தது நீரோ மட்டுமல்ல.!

நாடு பற்றி எரியும் போது பிடில் வாசித்தது நீரோ மன்னன் மட்டுமல்ல.
அவுஸ்ரேலிய நாட்டு பிரதமரும் பிடில் வாசிக்கின்றார்.
  

அவுஸ்ரேலியா காடுகள்  ஆண்டு தோறும் எரிவதும், எரிந்து பட்டுப்போன மரங்கள் துளிர்ப்பதும், எரியும் மரங்களின் வித்துக்கள் வெடித்து சிதறி விதையாக்குவதும், தன்னைத்தானே தற்காத்து கொள்ளும் இயற்கையின் மறு சுழற்சியாக இருக்க, இக்காலத்தில் மட்டும் பேரிடராய், பேரிழப்புகளோடு 5  மாதங்கள் கடந்தும் காடுகள் எரிவதற்கு காரணம் என்ன?

அவுஸ்ரேலியா காட்டுத்தீக்கு காரணம் தேடி காட்டின் வளத்தையும்  மரத்தையும் செடியையும் உயிரையும் தன உயிர் போல்  நேசித்து  பாதுகாக்கும்  ஆதிவாசி பழங்குடி மக்கள் மீதும், மின்னல் மீதும், வெப்பத்தின் மீதும், கழுகு போன்றஉயிரினங்கள் காலம் காலமாக தொடரும் வாழ்க்கை சுழற்சிகள் மீதும் பழி சொல்லி  ஊடகம் தன்னை தற்காத்து கொள்(ல்) கின்றது. சமூகம் கண்ணை முடி ஆமோதிக்கின்றது .
I
ஆனால் இது இயற்கையின் அழிவு அல்ல என்பதை தொடர்ந்த செயல்பாடுகள் நிரூபிக்கின்றன


பொதுவாகவே கோடை காலத்தில் பூமியின் வெப்பம் அதிகரிக்கும் போது காற்றில் ஈரப்பதம் குறைந்து, நிலமும் வறண்டு போய் விடும். இக்காலத்தில் நெருக்கமாக வளர்ந்து ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள்  ஒன்றோடொன்று உராய்ந்தோ,மின்னல் தாக்கியோ, வெடித்தோ, மனிதர்களின் தவறுகளினாலோ எரிய ஆரம்பிக்கும்.

எளிதில் எரியும் எண்ணெய் தன்மை கொண்ட
யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த அவுஸ்திரேலியக் காடுகளில் பூமியின் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி  வெடித்து, சிதறுவதும்  காடு தீப்பற்றி  எரிவதும்  ஆண்டு தோறும் நடந்து கொண்டிருக்கும் சம்பவம்.

காட்டுத்தீ என்பது அவுஸ்ரேலியாவுக்கு புதிதல்ல!

காடுகள் பற்றி எரிவதும், சாம்பலிலிருந்தும்  முளைப்பதும் காலம் காலமாக இயற்கையாக நடைப்பெறும் சுத்திகரிப்பு
சுழற்சியாகியாகும்!

மரங்கள் எரியும் போது வெடித்து சிதறும் விதைகள் பல பக்கமும் பரவி புது மரங்கள் முளைப்பதும்,எரிந்து பட்டுப்போன மரங்கள் துளிர்ப்பதும். பெரும் வனாந்தரங்களில் நடைப்பெறும்  இயற்கையின் அற்புதங்கள்!

காடுகள் தம்மை தாமே புதுப்பித்து கொண்டே இருக்கும்!

ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் வருடா வருடம்  டிசம்பர்இறுதியில் அங்கங்கே   ஆரம்பிக்கும் காட்டுத்தீ  ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் தீவிரமடைந்து ஏப்ரல் மாதங்களில் நிதானமாகும்.

ஒரே நேரத்தில்  ஐந்தாறு  இடங்களில் எரிந்தாலும்  பழங்குடி மக்களின் Back Burning  பழைமையும், நவீனத்துவ  தீயணைப்பு நுட்பங்களையும்  இணைத்து  போதுமான பணியாளர்களும் தொடர்ந்து முன்னேற்பாடடோடு செயல்பட்டு  காட்டுத்தீ எனும் இயற்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள்.

பழங்குடி மக்கள்  அங்கங்கே குறிப்பிடட எல்லைகளுக்குள் திட்டமிட்டு தீயை வளர்த்து காட்டுத்தீயின் திசையையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவார்கள். காட்டை வசப்படுத்தி வாழும் அவர்கள் பகுதி, பகுதியாக  காடு வாழ் உயிரினங்களையும், பிராணிகளையும் தம்மையும்  காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றி இடம்பெயரச்செய்வார்கள்.

காலம் காலமாக தொடர்ந்து நடக்கும் சம்பவம் ஒன்று
பரபரப்பாகியதும், கட்டுப்படுத்த முடியாத படி பல மாதங்கள் தொடர்ந்து எரிவதும், பல நுறு இடங்களில் பற்றிபரவிக்கொண்டிருப்பதும்
முன்னெப்போதும் இல்லாத படி அதிக இழப்புக்களோடு  தொடர்வதும்
ஏன் எனும் கேள்வி எமக்குள்  தோன்றுகின்றதல்லவா?

காட்டுகின்றது.



 •
இக்கால சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி  இதனால் பரபரப்புக்கு காரணமாக இருந்தாலும்.......?

முன்னெச்சரிக்கை செய்தும் அதை அசடடை செய்த, தகுந்த தற்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய அரசின் மெத்தனம்  இத்தனை இழப்புக்களின் பின்னனியில் இருக்கின்றதா?
எனும் ஐயம் எழும் காரணங்களை பார்க்கலாம்.

* 2019 / 2020  காட்டுத்தீயால மனித உயிரிழப்பு 200க்கும் அதிகமாகி  இருக்கின்றன.

 * காட்டு உயிரினங்கள், பறவைகள் ,கங்காரு இனங்கள் கோடிக்கணக்கில் அழிந்து போயிருக்கின்றது.

* இன்னமும் பல இடங்கள்ள மக்கள் வெளியேற்றம்  தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

* பல ஆயிரம் மில்லியன் டொலர் பொருளிழப பும்

* இனி எப்பேதும் சீர் செய்ய முடியாத இயற்கை அழிப்பும்

* காற்றின் மாசும் அதிகரித்திருக்கின்றன

இப்படியான ஆபத்துக்கள் நாடடை சூழ்ந்து கொண்டிருப்பதையும்,கடந்த காலங்களை விட இவ்வருடம் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதையும் ஆளும் மத்திய அரசுக்கு அதிகாரிகள் சில மாதங்கள் முன்பே அறிவித்திருக்கின்றார்கள்

அனைவரும்  கூடி பேசி பாதுகாக்கும் தீர்வுகளை குறித்து ஆராயலாம் எனும் தீயணைப்புப் படையினரும், விஞ்ஞானிகளும்  வைத்த கோரிக்கைகள், வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

முன்னெச்சரிக்கை செய்தும்
அவைகளை அசடடை செய்த
ஆஸ்திரேலியா அரசாங்கம் இத்தனை அழிவுக்கு பின்னும் தொடர்ந்து
பற்றி எரியும் நெருப்பை கட்டுப்படுத்த எந்த வழியும் இல்லாத கையறு நிலையில் தாமதமாகவே  விழித்து கொண்டு  நிற்பதாக போக்கு

❓காட்டுத்தீக்கு உலகத்தின் வெப்பமயமாக்குதலும் காரணம் என்றால் உலகம் வெப்பமயமாதலுக்கு முழு மூலக்காரணம் யார்?

பூமி வெப்ப மயமாக்குவதன் விளைவுகளாக கால நிலைகள் மாறி இயற்கை சீறிச்சினந்து
நாட்டின் வளங்களும், பொருளாதாரமும்,உயிர்களும் அழிகின்றது எனபதை  இக்கால ஆஸ்திரேலியா அரசாங்கம் ஒப்புக்கொள்ள  தயார் இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயம்.

பூமி வெப்பம் அடைவதை தடுக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக செயல் பட்ட காலங்களும் இருந்தது.

இன்றைய அரசாங்கம் பூமியை தோண்டி நிலக்கரிகளை எடுக்க அனுமதிப்பதன் மூலம் தாமும் சேர்ந்து  பூமியை வெப்பமாக்குகின்றது.

இவ்விடத்தில் தான்  இந்த காட்டுதீ இயற்கையை மீறிய செயற்கையாக திடடமிட்டு தீ வைக்கப்பட்டிடுக்குமோ எனும் ஐயம் எழுகின்றது

இந்த முறை கோடைக்கு முன்பே செபடம்பரில் நியூ சவுத் வேல் வடக்கில் ஆரம்பித்த  காட்டுத்தீயும் தென்கிழக்கில் தொடர்ந்து விக்ரோரியாவில் நடுக்காடு என  வழக்கமில்லாத புது முறையில் தீ பரவி  ஒன்றை கட்டுப்படுத்து முன் இன்னொரு இடம்  என்று நுறு இடங்களுக்கும் மேல் தொடர்ந்து எரிவதன் மர்மம்  என்ன?

பூமி பாதிக்கப்படுகின்றது, பூமியை தோண்டி ஆயில்கள் எடுக்கின்றோம் என பூமிக்குள் கிடக்கும்னு CO2  வெளிக்கிளப்புவது நல்லதல்ல, காற்றோடு  கலந்து வளி மண்டலத்தில் காபனீர் ஓட்ஸைட் அதிகரிப்பும் பூமி வெப்பமாக்குவதன் பிரதான வகிபாகம் பெறுகின்றது  என பூமி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தும். நிலக்கரி  தோண்ட அரசு கொடுக்கும் அனுமதிக்கும்,
எண்ணெய் வளம் கொண்ட யூகலிப்டஸ் காடுகளின் அழிவுக்கும்.........?

காடுகளும் அதன் உயிரினங்களும், மனித உயிர்களும் பாதுகாக்கப்படுவதை
விட அந்த நிலங்களிலிருந்து கிடைக்க போகும்  இலாபம் பேராசைக்கு பலியாகி போதுமான  தீயணைப்பு பணியாளர்கள், தீயணைப்பு கருவிகளைமுன் ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் தற்காப்பு உதவிகளும் செய்யாமல் வேடிக்கை பார்த்திருக்கின்றது

ஒரு பக்கம் காடெரிந்து உயிர்கள் அழிய  இன்னொரு பக்கம் புதுவருட கொண்டாடடங்களும்
காளியடடங்களும், ஹவாய் தீவில் உல்லாசமுமாக இந்த காட்டுத்தீயின் பின்னால் மறைந்திருக்கும்  அக்கிரமங்களை குறித்து மக்கள் முன் வெளிப்படுத்தாமல் பழங்குடி மக்கள் மீதும், இயற்கை மீதும் பழிகளை  தேடி அலைந்து காரணமாக்கி தன்னை சமாதானப்படுத்தி கொள்கின்றது  சமூகம்.

ஆண்டுகள் தோறும்  அதிகரித்து வரும் வெப்பம், அதனால் வரும் பின் விளைவுகள் குறித்து முன்னெச்சரிககை இல்லாமல்
Liberal Party of Australia 🇦🇺
ஆளும் அரசு ஆடசிக்கு வந்தவுடன் தீயணைப்பு பணியாளர்களை
எவ்வித தொலை நோக்கமும் இல்லாமல்
பணிநீக்கம் செய்திருக்கின்றது.

குறைந்த  இடங்களில் தீ எரிந்த கடந்த காலங்களில் நிறைந்த தீயணைப்பு பணியாளர்கள் விழிப்போடு செயல்படடார்கள். இன்று அதிக இடங்களில் பரவி எரியும் தீயை அணைக்க  போதுமான பணியாளர்களும் உபகாரணங்களும் தம்மிடம் இல்லை என பிரதமரை நோக்கி குற்றம் சாட்டுகின்றார் தீயணைப்பு துறை அதிகாரி.

அரசின் மெத்தனம் கடந்தும் நாடடையும் காடடையும் பாதுகாக்க தாமாக முன் வந்துஎவ்வித பொருளாதார எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணித்து  இணைத்து  காட்டுத்தீயோட போராடி 6 Fire fighters  உயிரிழந்து இருக்கின்றார்கள்.

தன்னார்வலர்களாக இணைந்த
பொதுமக்களின் ஆதரவு இல்லை எனில் இழப்பின் வீரியம் இன்னும் அதிகமாகி இருக்கும்.

மனிதர்கள்  தெரிந்தே செய்யும் தவறுகளால்  பூமி வெப்பமடைவதும் ‚, காடுகள் எரிவதும்,உயிர்கள் அழிவதும் தொடராமல் தடுக்கப்படவேண்டும்.

இயற்கையை வெல்ல மனிதனால் முடியாது போகட்டும்.இயற்கை தன்னை தானாகவே தற்காத்து கொள்ளும் வழிகளையும் அடைக்காது பாதுகாப்போம் 🙏

#Bush_Fires_in_Australia
#Donate_for_Australia

2 கருத்துகள்:

  1. அங்கும் அப்படித்தானா...?

    நிலைமை விரைவில் சீராக பிராத்தனை...

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

    அங்கே நடப்பவை பார்த்து அதிர்ச்சி தான் நமக்கும். விரைவில் பிரச்சனைகள் முடிவுக்கு வரட்டும்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!