12 ஜூன் 2020

பறவைகளின்_சரணாலயம் வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட வேண்டும்.- 1

#save_vedanthangal_bird_sanctuary

#பறவைகளின்_சரணாலயம் 
#வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட வேண்டும்.

உலகின் பழமையான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை 40 சதவீதத்திற்கு மேல் சுருக்கிவிடும்  திட்டத்தை தமிழ்நாடு வனத்துறை முன்மொழிந்து இந்தியாவின்
தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.


பறவைகள் சரணாலயத்தை 40 சதவீதத்திற்கு மேல் சுருக்கிவிடும் மாநிலத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் ...!  மேலுள்ள link Click செய்து வரும்  தளத்தில் வாக்கிடுவதன் மூலம் உங்கள் எதிர்ப்பை தெரிவித்து இயற்கையை பாதுகாக்கும்  உலகத்தாரின் ஆதரவை பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பை உறுதி படுத்துகின்றிர்கள்

⬇️⬇️




வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 30 ஹெக்டேர் (74 ஏக்கர்) பாதுகாக்கப்பட்ட பகுதியாகும், இது இந்தியாவின் செங்கல்பட்டு மாவட்டத்திலும், தமிழ்நாட்டின் மதுரந்தகம் தாலுகாவிலும் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் சென்னையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 45 ([NH45]) இல் 75 கிலோமீட்டர் (47 மைல்) தொலைவில் உள்ளது. மதுரந்தகம் மற்றும் செங்கல்பட்டு ஆகியவற்றிலிருந்து எளிதாக சென்று அடையலாம். ஒவ்வொரு ஆண்டும் புலம் பெயர்ந்த பருவத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40,000 க்கும் மேற்பட்ட பறவைகள் (26 அரிய இனங்கள் உட்பட) சரணாலயத்திற்கு வருகை தருகின்றன. 

வேடந்தாங்கல்லில் புலம் பெயர்ந்த பறவைகளான ( migratory birds) pintail garganey, grey wagtail, blue-winged teal, common sandpiper போன்றவை உள்ளன. வேடந்தாங்கல் நாட்டின் மிகப் பழமையான நீர் பறவைகள் சரணாலயம் ஆகும். தமிழ் மொழியில் வேடந்தாங்கல் என்றால் 'வேட்டைக்காரனின் குக்கிராமம்' என்று பொருள். இந்த பகுதி 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் நில உரிமையாளர்களின் விருப்பமான வேட்டை இடமாக இருந்தது. இப்பகுதி பலவிதமான பறவைகளை ஈர்த்தது, இது சிறிய ஏரிகளால் ஆனது, அவை பறவைகளுக்கு உணவளிக்கும் களமாக செயல்பட்டன. அதன் பறவையியல் முக்கியத்துவத்தை உணர்ந்து, பிரிட்டிஷ் அரசாங்கம் 1798 ஆம் ஆண்டிலேயே வேடந்தாங்கல்லை பறவைகள் சரணாலயமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது 1858 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு கலெக்டரின் உத்தரவின் பேரில் பறவைகள் சரணாலயமாக  நிறுவப்பட்டது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான 
பறவைகள் தாங்கள் பிறந்த அதே இடத்திற்கு - அவற்றின் தாய்நாட்டிற்கு திரும்பி வருகின்றன. இறகுகள் கொண்ட எங்கள் நண்பர்களின் நர்சரியைப் பாதுகாப்பது நமது கடமையாகும். 
அவர்களின்  இடம்பெயர்வுகளைத் தொடர அவர்களுக்கு உதவ ஒன்றிணைவோம் . 

வேடந்தாங்கல் காப்பாற்றப்பட வேண்டும்..! 

சரணாலயத்தின் வணிகமயமாக்கல் 
முன்மொழிவை நீக்கிவிட்டு,  தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் தாவரங்கள், விலங்கினங்களை முழுவதுமாகப் பாதுகாப்பதற்காக உழைக்க வேண்டும், அதை அழிக்கக்கூடாது! 

உலகம் சரணாலயங்களின் விரிவாக்கத்தை நோக்கி நகர்கிறது, அதைக் குறைப்பதை நோக்கி அல்ல.

தொடரும் அநியாயங்களை தடுக்கவும், அநீதிகளுக்கு தடை செய்யவும், இயற்கை வளங்கள்  வரலாறுகள் பாதுகாக்கப்படவும், 
உலகத்துக்கு மக்களின் ஆதரவை பெற இங்கே உங்கள் வாக்கை இடுவதன் மூலம் நீங்களும்  இணைந்து கொள்ளுங்கள்

Facebook : 

10 ஜூன் 2020

கொரோனா வைரஸ் - இது தான் யதார்த்தம்..!

தயவு செய்து 

நம்பிக்கை தருகின்றோம் என ஆதாரம் இல்லாத. நிரூபிக்கப்படாத  பார்வேட் செய்திகளை  சும்மா தகவலுக்கு என்றாலும் பகிர்ந்து மக்களை careless ஆக்காதீர்கள். 

கொரோனா வைரஸ் நோய் பரவல், பாதிப்புகள், மருத்துவ வசதிகள், உதவிகள் குறித்த  உங்கள் நாட்டில். மாநிலத்தில், மாவடடம், ஊரில் இன்னும் உண்மை நிலை என்னவோ அதை மட்டும் எழுதுங்கள் 

எந்த அதீத நம்பிக்கையும் வேண்டாம்..! 

உண்மை கசப்பாக இருந்தாலும் அது தான் உண்மை. யதார்த்தம் என மக்கள் உணர வேண்டும். 

அழும் குழந்தைக்கு கிலுகிலுப்பை, பூச்சாண்டி காட்டி ஏமாற்றுவது போல் தமிழ் மட்டுமே பேசவும் வாசிக்கவும் ( பலருக்கு அதுவும் தெரியாது ) தெரிந்த அப்பாவிகளை ஏமாற்றாதீர்கள். 

தேசத்தின் மீதான பக்தி எல்லோருக்கும் வேண்டும். அதற்காக  உலகின் சனத்தொகையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் நாட்டில் அன்றாடம் உழைத்து பிழைக்கும் ஏழை மக்களை பெருமளவில் கொண்ட தேசத்தில்  சமயோசிதம், வருமுன் காக்கும் திட்டமிடல் என்று எதுவும் இல்லாமல் பொறுப்பில்லாத  அரசாங்கத்தின் செயல் பாடுகளில் தொடரும் தவறுகளை  சுட்டி காடடாமல் தங்க கூண்டுக்குள் பத்திரமாக வாழ்ந்து கொண்டு கண் மூடித்தனமான ஆதரவு தருவது தவறானது.  உங்களின் அதீத நம்பிக்கை பல அப்பாவிகளின் உயிருக்கு விலை வைக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள் 

அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம், தன் கடமை தவறும் போது சுட்டிக்காட்டிடவும் தட்டி கேட்கவும் தேசத்து மக்களுக்கு உரிமை உண்டு. 

மக்கள் தமது நியாயமான  உரிமைக்காக போராடிக்கொண்டே இருக்கணும், மக்களை எப்போதும். பதட்டமாக  அலைய விடணும் என்று சின்ன சின்ன விடயங்களில் கூட கூரிய நோக்கம் இல்லாத அரச நிர்வாகத்தின் செயல் பாடுகளையும், புள்ளி விபரங்களின் ( 60 %அரசு சிறப்பாக செயல்படுவதாக ஆதரவு கருத்து )  அடிப்படையில் அரசு எல்லாம் சரியாக செயல் படுகின்றது என்னும் பிடிவாதத்துடன் தவறு உணர்த்தாமல்  கண்ணை மூடி கொண்டு கடப்பீர்கள் என்றால்   கொரோனா virus பரவலால் வரும்  விளைவுகளுக்கு நீங்களும் பலியாகுவீர்கள். 

இதுவரையான உங்கள் அரசியல், மத, இன பாதுகாப்புகள் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்த் எவரையும் தனித்து பிரித்து காப்பாற்ற போவதிலகை. உங்களால் எங்கும் ஓடி ஒளிய முடியாது, எந்த நீதி மன்றமும் உங்களை விடுவிக்காது. 

ஊர் கூடி சமூகமாக உணர்ந்து இணைந்து செயல் பட்டால் தான் நீங்களும் நீங்கள் நேசிப்போரும் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

கொரோனா வைரஸ்  நோய் குறித்து எடுத்து கொண்டால் ....! 

Positive  thinking, பயம் பரபரப்பு,வதந்தி தவிர்ப்பதாக கூறி உண்மையை மறைத்து போலியான தகவல்களை வெளியிட்டு  நோய் கட்டுப்பாட்டில் இருக்கின்றது, போதுமான வசதிகள் உண்டு , கொரோனா வைரஸ் எல்லோரும் பயப்படுத்தும்படி  நோய் இல்லை என்றும், முகமூடி அணியுங்கள்  நோய் தொற்றாது  எனும் தீவிர பிரச்சாரமும் அப்பாவி மக்களுக்குள் ஒரு வித அசட்டு தனத்தை உருவாக்கி இருக்கின்றது.

அரசு lockdown  அறிவிக்க  காட்டிய வேகம் விவேகத்தை அதன் பின்னரான மக்கள் பாதுகாப்பு, அவர்கள் வாழ்வாதார பிரச்சனைக்கான தீர்வு, திடீர் ஊரடங்கில் தம் தொழில் மற்றும் பல காரணங்களால் இடம் பெயர்ந்தோருக்கு சொந்த இடங்களுக்கு திரும்பி செல்லும் போக்குவரத்து வசதிகள் குறித்து எந்த நம்பிக்கை, உத்தரவாதமும் தரவே இல்லை. 

ஐரோப்பாவில் Lock  down  காலத்தில் 
• கொரோனா வைரஸ் என்றால் என்ன? 
• அதன் பாதகங்கள் என்ன? 
• கொரோனா வைரஸ் தொற்றினால் எப்படிஅதிலிருந்து மீண்டு வர முடியும்? 

• நோய் மேலும் பரவாமல்  நாம் கடைப்பிடிக்க வேண்டியது என்ன ? 

• நோய்ப்பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு தனி நபரும் உணர வேண்டியது என்ன? 

சமுகப்பரவல் நோய் பரவலாக்கம் குறித்து பல விழிப்புணர்வு கருத்துகளுடன் பொருளாதார இழப்பினால்  நாடும் நாட்டு மக்களும் எதிர்கொள்ள போகும் சிரமங்கள், அரசின் கடமை, பொறுப்பு , மக்கள் உணர வேண்டிய உண்மை நிலை என அனைத்துமே பொது வெளியில் பிரச்சாரம் செய்யப்பட்ட்து .

இத்தாலி, ஜேர்மன், பிரான்ஸ், போன்ற பெரிய தேசங்களும் சுவிஸ் போன்ற சின்ன நாடுகளுடன். இலங்கை கூட பல விவசாய மானியம், மக்கள் தற்சார்பு என பல 
திட்டங்களினுடாக மக்களை நெறிப்படுத்தியது 

இது தான் யதார்த்தம்..! 
அரசின் நிர்வாகத்தால் இவ்வளவு தான் முடியும்..! 

மக்களே புரிந்து ஒத்துழைப்பு கொடுங்கள் என்று நாட்டின் பிரதமர் அமைச்சர்கள் அறிவித்து கொண்டே இருந்தார்கள்.

🔺முகமூடி அணிந்தால் நோய் தொற்றாது என்பது இல்லை, நோய் பரவல் கொஞ்சமே கொஞ்சம் மட்டுப்படும் என்பதோடு 

🔺இது வரை மருந்து கண்டுபிடிக்கல்ல என்றாலும் கண்டு பிடித்தாலும் அது அனைத்துலக மக்களுக்கும் பாவனைக்குவர  குறைந்தது ஒரு இரு வருடம் தேவை 

🔺 நாட்டின் பொருளாதார இழப்பினுடே உயிர் பாதுகாப்புக்கென lockdown தொடர முடியாது

🔺 ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் சமூக இடைவெளிகளையும் தற்பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் தொடர்ந்தும் கடைப்பிடிக்கணும் என்று இன்று வரை  நாட்டு மக்கள் பேசும் மொழிகளில் அறிவித்து கொண்டே இருக்கின்றார்கள். 

அரசும், தனி மனிதர்களும்  தங்கள் சமூகக்கடமை உணர்ந்து செயல் படுகின்றார்கள். நம்பிக்கை தருகின்றோம் என்று இல்லாததை இருக்கின்றதெனும் மாயவலை பிம்பம் உருவாக்கி மக்களை ஏய்க்கவில்லை, ஏமாற்றவும் இல்லை 

உலக அதிகாரங்களும், வல்லுநர்கள் ஆய்வாளர்களும்  இந்த ஒரு ( 2 ) 
வருடத்தினுள் கொரோனா வைரஸ் எவ்வகை உயிர்இழப்பை உருவாக்கும் என்று அறிந்தே இருக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் நோய்க்கு தொற்றாமல் தடுக்க தனி நபர் சுய கட்டுப்பாடு பாதுகாப்பு இருந்தாலும் நம்மை சார்ந்தோரும் சமூகமும் அதே கட்டுப்பாடு ஒழுங்கு முறை கடைப்பிடிக்க வில்லை என்றால் மொத்த சமூகமும் பாதிப்படையும். 

⚫️ நோய் தடுக்கும் மருந்தோ, வந்த பின் காக்கும் மருந்தோ மாத்திரையோ மருத்துவமனைகளில் இல்லை. சாதாரண காய்ச்சல் வலி  மாத்திரை கூட எல்லோருக்கும் ரேஷன் செய்து பார்மசிகளில் கட்டுப்படுத்தி விற்றார்கள். ஆரம்பத்தில் ஃப்ளு க்குரிய அண்டிபயாடிக் கொடுத்து  நோயாளிகளுக்கு வேறு பல புதிய பிரச்சனைகள் உருவானதால் எந்த ஆண்டிபயாடிக் மருந்தும் எடுக்க வேண்டாம் என்று அறிவித்தார்கள். 

⚫️ முடிவுகள் மாறி கொண்டே இருந்தன. Who  வழி காட்டல்  என்பது ஆரம்ப நிலையில் தான் இங்கே இருந்தது. ஓவ்வொரு நாடும் தங்கள் நாடு எதிர்கொண்ட  வைரஸ் பிறழ்வுக்கேற்ற வகையில் பாதிக்கபடும் நோயாளிகளுக்கு தோன்றும் அறிகுறிகளை அவதானித்து ஆராய்ந்து தமக்கு என தனி  வழி முறையை பின் பற்றி கொண்டது 

⚫️ போதுமான மருத்துவ உபகரணம் இல்லை. Corona virus தீவிரமாகி நுரையீரல் அழற்சி , மூச்சு திணறும்  சுவாசம் தடை படும் போது செயற்கை முறையில் சுவாசிக்க உதவும் கருவி வென்றிலேற்றார் என்பார்கள், இந்த இயந்திரம் ஒன்றின் விலை இந்திய மதிப்பில்   ஐந்து இலட்சம் என்கின்றார்கள். மே மாத கணக்கெடுப்பின் படி முழு இந்தியாவுக்கும் 60000  ( அறுபது ஆயிரம் மட்டுமே ) இந்த இயந்திரம் இருந்தது. ( தமிழ் நாட்டில் எத்தனை வென்றிலேற்றார் உண்டு என்பதை குறித்த விபரம் என்னிடம் இல்லை ) 

⚫️ ICU வில் தீவிர சிகிச்சை என்றால் அந்த இயந்திரத்தின் குழாயை  சுவாசிக்க சிரமப்படும் நோயாளியின் வாய்க்குள் விட்டு தொண்டை குழிக்குள்ளால் ஊடறுத்து நுரையீரலை செயற்கையாக இயங்கும் படி பொருத்தி விட்டால்  அந்த நோயாளி உயிர் பிழைக்கும் அல்லது உயிர் இழக்கும்  நாள் வரை 24  மணி நேர கண்காணிப்பு சிறப்பு பணியாளர் ( கடினமான பணி) மெஷினின் இயங்கு நிலை மற்றும் நோயாளிக்குரிய ஏனைய கவனிப்பு படுக்கை பராமரிப்பு ( லிங்க் பாருங்கள் )  என்று ஒவ்வொருவருக்கும்  தனி கவனிப்பு தேவை. 

🖤 ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு  நோய் தீவிரமாகுமானால்  ஒரே வென்றிலேட்டர்  மூலம் எல்லோருக்கும் சுவாசத்தை கொடுக்க முடியாது. ஏழு தொடக்கம் பத்து நாளும் ஒருவருக்கு ஒரு வென்றிலேற்றார் இயங்கும். அவ்வாறாயின் போதுமான வென்றிலேற்றார் அதை இயக்கும் பணியாளர்கள் தேவை. ஆனால் இல்லை . வளர்ந்த செல்வந்த நாடுகளிடம்  போதுமான வென்றிலேற்றார் இல்லை. வென்றிலேற்றார் இயக்கும் பணியாளர்களும் போதுமாக இல்லை. 

அவ்வாறான நேரத்தில் யாருக்கு உயிர் வாழும் உரிமையை கொடுக்கணும் எனும் தீர்மானத்துக்கு மருத்துவமனை மருத்துவர் குழு முடிவெடுக்கும் இக்கடடான நிலை இங்கே உருவானது. இத்தாலி, சுவிஸ், பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் முதியோருக்கு சிகிச்சை கைவிடப்பட்டு, இளையோருக்கு முதன்மை எனும் முடிவை மருத்துவமனை ( சுகாதார துறை அனுமதியுடன் ) எடுத்திருந்தது.

அடுத்து முக்கிய கவனிப்பு 

🔴 சீனாவில் உருவான Covid 19  எனும் கொரோனா வைரஸ் தான் பரவி செல்லும் இடத்தின் சூழலுக்கு ஏற்றபடிபிறழ்வடைகின்றது. 

இயற்கை, கால நிலை, வெயில் குளிர் உணவு எனும் நம்பிக்கைகளை எல்லாம் தகர்த்து கொண்டு மாறிக்கொண்டே இருக்கின்றது. இந்த மாற்றத்தால் இதற்கான தடுப்பு மருந்து ( வாக்சின்) கண்டு பிடித்தாலும் அது அந்த நேரத்து பிறழ்வடைந்த வைரஸை தடை செய்யுமா?  கட்டுப்படுத்துமா?  என்பதே இன்றைய ஆய்வாளர்களின் பெறும் குழப்பமாக இருக்கின்றது.  

இந்தியாவில் வெப்ப நிலை, பாரம்பரிய உணவு, இயற்கையாக  தூசிகளினுடான புழக்கத்தில் உருவாக்கி இருக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கு ஏற்ற மாதிரி வைரஸ் பிறழ்வடைந்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்ய சொல்லவில்லை. 

எங்களுக்கு ஒன்றும் நடக்காது .வைரஸ் ஒன்றுமே இல்லை என்று அசட்டை தனம் வேண்டாம்.சமூக விலகல் , மாஸ்க் , கைகளை சோப்பு போட்டு கழுவுதல், அதிகம் வெளியில் அலையாமல் பொது போக்குவரத்தை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை  முக்கியமாக விடடமின் சி & டி சேமித்து கொள்ளுங்கள். 

உங்கள் தைரியம் தலை காக்கும்💚

Facebook link 

தமிழர்களே தமிழருக்கு புரியவேண்டும் என்றால் தமிழில் எழுதுங்கள்.



முக்கியமாக மருத்துவ அரசியல் வரலாற்று உண்மைகளை தமிழில் கலந்து பேசுங்கள், எழுதுங்கள்

ஆங்கிலேயருக்கு புரிய வைக்க வேண்டும் என நினைக்கும்  விடயங்களை  ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் வேண்டும். தமிழருக்கு புரியனும் என்றால் தமிழில் எழுத வேண்டும்.

• கொரோனா வைரஸ்
• விவசாயம்
• தற்சார்பு
• வீட்டு தோட்டம்
• வெட்டுக்கிளி வேட்டை
• தேனீக்கள், குளவிகள் குறித்த ஆபத்து
• கல்வி மீட்சி திட்ட்ங்கள்
• அரசியல் வரலாற்று சம்பவங்கள் என  பல  ஆலோசனைகள்  போதுமான அளவு ஆங்கிலத்தில் search  செய்தால் கிடைக்கின்றது

தமிழிலும் தகவல்கள் ஆவணப்படுத்த பட தயவு செய்து தமிழில் எழுதுங்கள்.

விவசாயம் சார்ந்த ஆங்கில வார்த்தைகள்
அரசியல் சார்ந்த ஆங்கில வார்த்தைகள்
மருத்துவம் சார்ந்த ஆங்கில வார்த்தைகள்

தான் சாராத துறை குறித்த ஆங்கில அறிவுடன் நம் நாட்டில் படித்த எத்தனை பேருக்கு அனைத்தும்  முழுமையாக புரியும்?

விவசாயி, தோட்டம் செய்பவன், மலையக தோட்ட  தொழிலாளிகள் என்று எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரியும்?

இங்கே பலர் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் தீர்வுகளை பேசும் போது அதை ஆங்கிலத்தில்
தொடர்கின்றார்கள். அவர்கள் தரும் கருத்துகள் பயனுடையது என்றாலும் அது குறிப்பிடட  கற்றறிந்தோர் சிலருக்கும் மட்டும் புரிந்து கொள்ள முடிகின்றது.

உண்மையில் இந்த விபரங்கள் யாருக்காக விவாதிக்க படுதோ அவர்களுக்கு புரியாத மொழியில் எழுதி  என்ன பிரயோசனம் என்று சிந்தித்து பாருங்கள்.

ரோமுக்கு போனால் ரோமானியனாக மாறனும் என்றால் அவன் அணியும் உடுப்பில் இல்லை பேசும் மொழியிலும் மாறனும். தமிழனாய் தமிழனுக்குள் தன் தமிழ்ச் சமூகம்  மீட்சி பெற வேண்டும் என்றால் அது தமிழருக்கு புரிய வேண்டும் தானே?

தயவு செய்து  தமிழில் எழுதுங்கள்.  இது ஆலோசனை இல்லை  வேண்டுதல் 🙏

Nisha
10.06.2020

03 ஜூன் 2020

Face book வீடியோக்கள் தானாக இயங்குகின்றதா?

Face  book  பகிரும் வீடியோக்கள்  சமீப காலமாக  Auto play setting ல் தானாக இயங்க தொடக்கி இருக்கின்றது 

நாங்கள் விரும்பாவிடடாலும் ஸ்க்ரோலிங் செய்யும் போது வீடியோ தானே இயங்குவது. சங்கடமாகவே இருந்தது. சிலவேளைகளில் மென்பொருள் புதுப்பிக்கப்படுகையில், நம் அமைப்புக்கள் இயல்புநிலைக்குச் சென்றால், இப்படி நிகழ்வதுண்டு.. எங்களுக்கு விரும்பினால் play செய்து பார்க்க செட்டிங் செய்யணும்.

சிலருக்கு இந்த பிரச்சனை இருக்கலாம். எனக்கு இருந்தது  அதுக்கு A Jegaan Dharmenra எனக்கு கொடுத்த விளக்கம் இது❣️

Facebook  செட்டிங்  போய் வீடியோ போட்டோ Click செய்து drop menu போய் Auto play setting இருப்பதை Never autoplay videos’ select பண்ணணும். 

தேவையானோர் பயன் படுத்தவும்

சிலருக்கு இந்த பிரச்சனை இருக்கலாம். எனக்கு இருந்தது  அதுக்கு A Jegaan Dharmenra எனக்கு கொடுத்த விளக்கம் இது❣️




1. Facebook  செட்டிங்  போய்



2. வீடியோ போட்டோ Click செய்து drop menu போய்



3. Auto play setting இருப்பதை Never autoplay videos’ select பண்ணணும்.


4. Never autoplay videos’