12 மார்ச் 2016

எங்கெங்கே நோக்கினும்!


துயில் கலையும் வேளையிலே கண் முன்  நிற்கிறாய் 
காணும் காட்சிகளி லுன் நினைவை தந்து மறைகிறாய் 
ஓசையெல்லா முன் அழைப்பாய் தோன்றிமறையுதே
என் நெஞ்சமதில் தாலாட்டாய் உன் மொழிகளே!

கொஞ்சிக்கெஞ்சி பேசி நீயுமெ ன்னுள் உறைகிறாய் 
வஞ்சி மனம் மஞ்சிடாமல் காத்து  நிற்கிறாய் 
தஞ்சமா யுன் நெஞ்சமதில் ஊஞ்சலாடிடும் 
நங்கையவள் தனை நம்பும்  நம்பியாகின்றாய்!

எண்ண மெல்லாம் வண்ணம் கொண்ட கண்ணனாகியே 
மன்னவனாய் உள்ளுணர்வில்  கலந்து நிலைக்கிறாய்
உன்னவளை கண்மணி போல் காத்திடுவதில் 
யுனக்கு நிகர் நீயோவென மலைக்க வைக்கிறாய்!

நித்தம் எந்தன் நினைவினிலே பித்தனாகிறாய்
சத்தமின்றி சொப்பனத்தில் சொக்கி நிற்கிறாய்
சித்திரம் போல் பத்திரமாய் உந்தன் அணைப்பிலே
பள்ளி கொள்ளும்  பாவையென்னை  பாதுகாக்கிறாய்!


16 கருத்துகள்:

 1. அத்தான் விடுமுறையிலை போயிட்டாரோ? பீல் பண்ணுற மாதிரியே இருக்கு.ட

  பதிலளிநீக்கு
 2. கவிதை அருமை நேசிப்பும் ஒரு கொடுமைதான்)))

  பதிலளிநீக்கு
 3. அருமையான கவிதை வரிகள் தோழர்!

  பதிலளிநீக்கு
 4. ஏதோ ஒரு ஏக்கம்!கவிதையாய் வந்ததோ ஆக்கம்!உள்ளூரும் தாக்கம் அதனை
  உணர்துவதே நோக்கம்

  பதிலளிநீக்கு
 5. ஆஹா மரபுக்கவிதை அருமைமா

  பதிலளிநீக்கு
 6. அட..அட..கவித ..கவித :) நல்லாயிருக்கு நிஷா!

  பதிலளிநீக்கு
 7. அருமை...வரிகள் வாசம் காட்டுகின்றன..
  மொழிகளின் வசீகரம் ..
  விழிகளில் விரியும் கனவுகள் வரிகளின் பரவும் பரவசம்..
  கோடை வெயிலில் கொஞ்சும் தமிழ் பழரசம்.
  வார்த்தைகளா,
  எழுதும் விரல்களா,
  மாயம் செய்வது எது?
  தமிழோடு விளையாடும் ஆரணங்கே..வணங்குகிறேன்...

  பதிலளிநீக்கு
 8. கவிதை அருமை என்ன இன்று செல்லும் இடமெல்லாம் பித்தன் தெரிகின்றார்...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  ஹா..ஹா.. என்ன வரிகள் அற்புதம் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. காட்சிகள் கண் முன் விரியச் செய்யும் கவி வரிகள்..அருமை நிஷா சகோ/நிஷா

  பதிலளிநீக்கு
 11. வரிகளில் வசீகரம்....
  வார்த்தையில் வசந்தம்...
  அருமை அக்கா...
  ஆமா மாமா ஊருக்கு எதுவும் போயாச்சா///

  பதிலளிநீக்கு
 12. பாசம் சொல்லும் கவிதை. நேசம் சொல்லும் கவிதை.

  பதிலளிநீக்கு
 13. பாசம் பாக்களாய்....அருமை..

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!