28 செப்டம்பர் 2020

சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க ...💕💞💖


பச்சரிசி சோறு ... உப்பு கருவாடு…

சின்னமனூரு வாய்க்கா சேறு  கெண்ட மீனு

குருத்தான மொள கீர, வாடாத சிறு கீர 

நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊருது... 

அள்ளி தின்ன ஆச வந்து என்ன மீறுது..!


பாவக்கா கூட்டு பருப்போட சேத்து

பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு

சிறுகால வருத்தாச்சு 

பதம் பாத்து எடுத்தாச்சி ...

கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா

தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெருக்குதய்யா..

நித்தம் நித்தம் நெல்லு சோறு

நெய் மணக்கும் கத்திரிக்கா

நேத்து வெச்ச மீன் கொழம்பு

என்ன இழுக்குதையா

நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு

வந்து மயக்குதையா...


பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோரு

பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு

சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்

அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல

அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல..❤️


குரக்கன் மா ( கேழ்வரகு) தேங்காய்ப்பூ சேர்த்து புட்டு சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க ...💕💞💖

பாடலை ரசிக்க இங்கே click செய்யுங்கோ 

https://youtu.be/P-spsz3PaSU1 கருத்து:

  1. மிகவும் நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!