17 ஜூலை 2019

மதமெனும் மதம் பிடித்தாட்கொள்வோர்க்கு.....?அறிவுடை மாந்தர், அறிவினை தொலைத்தார்
அழிவினை நாடும், அகமதை கொண்டார்.

சைவமென்றும் வேதமென்றும் 
சாகாச சாணக்கியர்களின் 
சூழ்ச்சிகள் ஜெயித்து
அரங்கேற்றமாவதும்..........?

சாவது வந்தும்,சாதியை சுமந்து 
மனிதம் தொலைந்து, 
மனங்களை கொன்று,
மதங்கொண்ட மனிதர்களாவதும்............?

பட்டகாலில் பட்டதும்
தொட்ட குடியெல்லாம் கெட்டதும் 
பகுத்தறிந்திடும் பட்டறிவென 
சலசலப்பதும்.......?

இலக்கினை தொலைத்த 
இனமொன்றாய் ..............?

வீதியில் நிற்பதே எம் விதி என ஆனதோ?
🌚🌚🌚
மனிதம் தொலைத்து மதம் பேசுவோர் சற்று எட்ட நில்லுங்கள்.
மனிதர் வாழட்டும்.
நீங்கள் விதைப்பதையே அறுவடை செய்வீர்கள் என்பதையும் மறவாமல் விதையுங்கள்.😭

புகைப்படம்  சொல்லும் சேதி???/ 😭😭😭😭😭😭

ராஜஸ்தானில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு நபர் உயர் ஜாதி சமூகத்தை கைநீட்டி பேசியதன் காரணத்தால் கைகள் வெட்டப்பட்டு நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்....
இது தான் நீதி.....இந்தியாவின் இந்துக்களுக்கான நீதி... இந்த நீதி இன்னும் இலங்கைத்தமிழர்களுக்குள் பரவலாகவில்லை.
இனி அதுவும் நுழைந்து விடலாம்.


1 கருத்து:

 1. வணக்கம்
  சகோதரி
  உண்மையில் சொல்லிய விதம் சிறப்பு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!