23 அக்டோபர் 2017

இந்த சீதைகள் நிருபித்தது


விம்மித்துடிக்காமல் ஓடி ஒளியாமல்
கண் முன் எரிகின்றாள் - அவள்
நீதியை எரிக்கின்றாள்.
அநீதிக்கு துணை போகும்
அக்கிரமக்காருக்கே
அகிலத்தில் இடமுண்டாம்
அவள் சொல்லிச்செல்கின்றாள்.
பச்சிளம் குழந்தை அது.
கத்திக்கதறவில்லை
பற்றும் தேடவில்லை
தென்றலாய் வருடுவதாய்
எரி தணலை எதிர்வு கொண்டே
நிமிர்ந்தே நிற்கும் அவள்
திட மனதை என்ன சொல்வேன்!!!!!
சட்டி பானையெல்லாம் விற்றும்
வட்டி குட்டி போட
இரத்தப்பசியில் பலிவாங்க
பிணம் தின்னும் கழுகுகளாய்
கொத்திக்குதறத் துரத்த
பசுவும் கன்றுமாக கதறித்துடித்து
நிதம் பதறும் நிலை காண மறுத்து
நெருப்பில் பொசுங்கிடுமுன்
தட்டிய கதவுகளை மூடியே வைத்திருங்கள்.
பாவி அவனென்று சாபம் கொடுத்திடுங்கள்
எத்துணை திடமிருந்தால்
நிமிர்ந்தே நின்றிருப்பாள்?
அத்துணை யாருமின்றி
எதிலியாய் பொசுங்கி
எரிந்து கரிந்து சரிந்தது
அவளுடல் மட்டுமா?
தன்னை நிருபிக்க இராமனின் சீதை தீக்குளித்தாள்
இந்த சீதைகள் நிருபித்தது தேசத்தின் அவமானம்.

படம் இணையத்தில் இருந்து 

5 கருத்துகள்:

 1. கொடுமை. பதிவின் வரிகள் அருமை.

  பதிலளிநீக்கு
 2. மனம் கனக்கிறது வரிகளும், படமும் கண்டு...

  பதிலளிநீக்கு
 3. கண்ணால் காண இயலா காட்சிகள்...

  மனம் பதைக்கிறது..

  பதிலளிநீக்கு
 4. கொடுமை அக்கா...
  வலிக்கிறது மனசு...
  எழுத வேண்டும் என்ற மனதில் எப்படி என்ற கேள்வி முன்னிற்க எழுத இயலவில்லை.
  கவிதையில் வலி...
  ஒன்னும் சொல்ல முடியவில்லை...

  பதிலளிநீக்கு
 5. மனம் மிகவும் வருந்துகிறது. வேதனையிலும் வேதனை. நல்ல காலம் நாங்கள் அந்தக் காட்சிகளைக் காணவில்லை.உங்கள் வரிகளும் அருமை

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!