என் வசிப்பிடத்தில் இருந்து Swiss , Bern மாநகர பெரிய Insel Hospital, 68 Km தூரம் ( இது சுவிஸ் நாட்டின் அனைத்து New அறிவியல் மருத்துவ தொழில் நுட்ப வசதிகளையும் கொண்ட பிரதான பெரிய மருத்துவ மனை)
பொதுப்போக்குவரத்தில் ( Bus - Train - Walk - Tram ) பயணத்துக்கு ஒரு மணி நேரம் தேவை ( After OP வேகமாக இயங்க முடியாது என்பதால் எனக்கு மேலும் 30 நிமிடங்களும் தேவை.) எனக்கு இங்கே தான் கடந்த ஐந்து வருடம் தொடர் check up . மாதம் ஒரு தடவை எனும் check up இருக்கும். ஜூன் மாதத்துக்கு பின் வாரம் ஒருதடவை என்றானதும் பொதுப்போக்குவரத்தில் தான் பெரும்பாலும் பயணம்.
🔹
எங்கள் நகர Hospital 6 km தூரம்.
இரண்டு பஸ் மாறி செல்ல 30 நிமிடங்கள்
கார் பயணம் என்றால் 10 நிமிடங்கள்.
வாரத்துக்கு இரண்டு தடவை ( சில நேரம் மூன்று ) இங்கே பிசியோ தெரபி இரண்டு வருடமாக செல்கின்றேன்.( ட்யூமர் தலை சுத்துக்கு தெரபி) மார்ச் ஆகஸ்ட் ( Corona virus Lock down ) தெரபிக்கு போகவில்லை . செப்டம்பர் 20 தொடக்கம் மீண்டும் பிசியோ தெரபி ஆரம்பம்.
போன கிழமை வரை பொதுப்போக்குவரத்து
பயணங்களில் மக்கள் நெருக்கடி இல்லை. சானிடைசர் தடவி, மாஸ்க் அணிந்து இரண்டு மீட்டர் டிஸ்ட்னஸ் தூரத்தில் நின்று ( நான் மட்டும் அமரும் இருக்கை😍) என்று கடைப்பிடித்தேன். ஒன்றும் பயமில்லை.
🔹
ஆனால் இன்று.... !?
07.10.2020. 7.45 க்கு Bern - Insel Hospital நோக்கி பயணம்... நான்கு நபர் அமரும் இருக்கையில் முதல் முப்பது நிமிடம் நான் மட்டுமே..! அதற்கு பின் திபு.. திபு என்று கூட்டம். ரயிலுள் அமரும் இருக்கைகள் நிரம்பி நிற்போரும்நெருங்கி... முன் இருக்கையில் ஒருவர் அமர என் வலது பக்கத்து இருக்கையில் கைப்பை வைத்திருந்தேன். அதை எடுத்து ஒருவர அமர .. நெஞ்சுக்குள் ஒரு வெப்பம் பரவ ஆரம்பித்தது உண்மை... இதில் எங்கே டிஸ்டன்ஸ் கடைப்பிடிப்பது...? அப்படியே திருப்பி ஜன்னல் பக்கமே பார்த்து கொண்டு...வேற வழி இல்லையே..🥵
கொரோனா வைரஸ் முதல் அலை மார்ச் - யூலை வரை என் உடல் நிலை கருதி வெளியே எங்கும் செல்லாமல் அளவாக வாங்கி, குறைவாக உண்டு வீட்டுக்குள் பத்திரமாய் இருந்தேன்.
இனி....🖤🖤🖤🖤
பள்ளிகளுக்கு Holi day என்பதால் குழந்தை குட்டிகளுடன் பயணம் செல்கின்றார்கள். ரயில்வே ஸ்டேஷனில் மீண்டும் திருவிழா கூட்டம்...! கொரோனா வைரஸ் இரண்டாம் அலை என்கின்றார்களே ...? Mask அணிந்தால் பாதுகாப்பு என்று ஏனைய நாடுகள் போல் அசால்ட்டாக திரிகின்றார்களோ..?
இப்படி பயணித்தால் நிச்சயம் கொரோனா வைரஸ் நோய் சீக்கிரம் வேகமாக பரவும். அது தான் அரசின் திட்டமும் என்று தெரிகின்றது.
பள்ளிகள், கல்லூரிகளுக்கும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கும் மாஸ்க் அணிவது கடடயாம் இல்லை என்று அறிவித்திருப்பதன் மூலம் இளையோருக்குள் கொரோனா வைரஸ் பரவ விட்டு மீண்டு வர
போகின்றார்களோ..?
அது அத்தனை இலகுவானதாக இருக்குமோ.,?
இங்கே நாங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம். மந்தை எதிர்ப்பு சக்தி சரியாக செயல் பட குறைந்தது 70 % மக்களுக்குள் கொரோனா வைரஸ் பரவ வேண்டும். நோய் தொற்றில் எதிர்த்து தாக்கு பிடித்து மீண்டும் வருவோர் இந்த பூமியில் வாழும் தகுதி பெறுவார்..!
எனில் ..,,,? உங்கள், எங்களதும் பிள்ளைகளதும் பாதுகாப்பு எங்கள் முயற்சிகளால் மட்டுமே சாத்தியம்.
குளிர் காலம் வேறு ஆரம்பித்து விட்டது. குளிர்காலத்தில பரவும் Grippe ( வைரஸ் ) இருமல்,தடிமன்,தொண்டை வறட்சி என்று ஆரம்பிக்கும். அதுவா ...இதுவா என்று புரியாமல் பிள்ளைகளுடன் நெருங்கவும், விலகவும் முடியாமல் தவிக்கும் நிலை உருவாகும்.
வர போகும் ஆபத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கோ..அவ்வளவு தான்
நன்றி
நிஷா
ஆபத்து இன்னும் விலகவில்லை - இங்கேயும். இந்தியாவின் தலைநகரில் மெட்ரோ, பேருந்துகள், சாலைகள் என எங்கே பார்த்தாலும் கூட்டம். வேதனை தான்.
பதிலளிநீக்குகவனமாகவே இருங்கள் நிஷா. நானும் தினமும் அலுவலகம் சென்று வருவதால் முடிந்த அளவு கவனமாகவே இருக்கிறேன். மற்றவை ஆண்டவன் கையில்!