27 மே 2019

ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய்.........?

அப்போது நீ செய்தாய் தானே? 
இப்போது நான் செய்தால் தப்பா?

ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய்.........?
நாட்டின் பாதுகாபபை கேள்விக்குறியாக்கி, அன்னியர் எம் நாட்டை அடிமைப்படுத்த இடம் கொடுப்பதை உணராதோராய்...?
கடந்த காலம் நடந்ததென ஆளுக்காள் குற்றம் குறைகள் சொல்லி விமர்சிப்போருக்கும், எங்கள் உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதம், தீவிரவாதிகள் எனும் பதிவுகளும், அதை ஆதரிக்கும் எம்மவர் ரியாக்சன்களும், இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்கனவே இருக்கும் சிக்கல்களை இடியாப்ப சிக்கலகளாக்கி கொண்டே செல்கின்றன.
கடந்த கதை பேசி குற்றம் சாட்டி எமது முன்னேற்றம், தீர்வுகளை தூரமாக்குவதை விட புற்றாய் வளர்ந்து சீள் பிடித்த காயத்தை வெட்டி சீளை வெளியேற்றி விட்டு கட்டுப்போடுவது நல்லதென நான் நினைக்கின்றேன்.
நாடென்ன செய்தது எனக்கு என வினாவுவதை விட என் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என சிந்திப்பதே இன்றைய நிலையில் சிறப்பு.
கடந்ததெல்லாம் மறந்து புதியதோர் உலகம் காண நினைப்பது நல்லது தான். அதற்கு முன் அவரவர் மனட்சாட்சியின் நிமித்தம் தாமும் விட்ட தவறுகளை உணர்ந்து கொள்ள வேண்டும். எம்மை நீதிமானாக்கி, எதிராளியை குற்றப்படுத்திக் கொள்வோமானால் எம்மால் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியாது. 
இனியேனும் எம்மிரு சமூகத்துக்குமான நல்லெண்ணம்,சமுதாய நலன் சார்ந்து நீண்டகால மீட்சித்திட்டங்களை நோக்கிப்பயணிக்க வேண்டுமானால் அவரவர் தவறுகள் உணர்த்தப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக்க நீட்டப்படும் விரல்கள் தம்மை பரிசுத்தமானவர்களாக நியாயப்படுத்த எடுக்கும் முயற்சிகளால் எந்த பயனும் இலை.
விடுதலைப்புலிகள் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் திகதி காத்தான் குடி பள்ளிவாசலுக்குள் நுழைந்து தாக்கியதாக சொல்லி சஹரான் குழுவினரின் ஈஸ்டர் கால குண்டு வெடிப்புக்களை நியாயப்படுத்துவோருக்கு விடுதலைப்புலிகள் 
காத்தான் குடி பள்ளிவாசலில் ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என தெரியாமல் இருக்கலாம்.

தெரிந்தவர்கள் உள்ளதை உள்ளபடி வெளியே சொல்லாத வரை தமிழ்ச்சமூகம் வீழ்ச்சியை நோக்கியே பயணிக்கும்.
இங்கே நான் பகிர்ந்திருக்கும் தகவல்கள். திகதிகளின் அடிப்படையில் அவரவர் சொந்த புத்தியை சரியாக கூர் தீட்டி தம்மை தாம் ஆராய்ந்தறிந்த பினஅவரவர் செயல்பாடுகளை நியாயப்படுத்தவும்.
நான் இங்கே தமிழ் பேசும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கின்றேன்.
விடுதலைப்புலிகள் + ராஜிவ் காந்தி கொலையுடன் நிகழ் கால சம்பவங்களை ஒப்பிடுவோருக்கு,அறிந்தோ அறியாமலோ அன்னிய,அண்டை நாட்டு அரசியல் சதிக்குள் சிக்கியதனால் எங்கள் உரிமைகளை நாங்கள் இழந்ததுடன், இருப்புக்களையும், இழந்து, உயிர்களையும்,உடமைகளையும் பறிகொடுத்து நாடற்றவர்களாக அகதி வாழ்க்கையின் வலிகள் என்றேனும் புரியுமோ என்னமோ?
காலம் அவர்களுக்கும் பலதை உணர்த்தும்.
 30.10.1990.முஸ்லிம்களை யாழிலிருந்து வெளியேற்றியதில் ஒட்டு மொத்த இலங்கை தமிழ் பேசும் இனத்தினரிடமிருந்தும் பறிக்கப்பட்ட உரிமைகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றிடவென போராளிகளான விடுதலைப்புலிகள் தவறு செய்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆயிரம் நியாயங்கள் கூறினாலும், தமிழ் பேசும் சக சகோதர இனம் எனும் புரிதலை கடந்து ஓரிருவர் அல்லது குழுவின் செயல்பாட்டிற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் தண்டித்தது தவறு தான். அவர்கள் அதை செய்திருக்க கூடாது. மன்னிப்பு எனும் வார்த்தையினால் ஈடு கட்டி விட முடியாத தவறு தான்.
அவர்கள் விட்ட ஆரம்ப தவறுகளின் பலனை அவர்களே அறுவடை செய்தும் கொண்டார்கள்😭.
அதற்காக.........?
அவர்கள் தவறு செய்தார்கள் என விரல் நீட்டி குற்றம் சாட்ட நீங்கள் குற்றமற்றவர்களாக இருந்தீர்களோ? 
நீங்கள் உங்கள் சார்பில் எந்த தவறும் செய்யவே இல்லையா? எனும் ஆழ் மன ஆராய்தல் அவசியம்.

காத்தான் குடி படுகொலை
***********************************

⁉️1990.ஆகஸ்ட் 3ம் திகதி காத்தான் குடி பள்ளிவாசலில் ஆயுதம் தாங்கிய குழுவினர் தாக்கினார்கள். அத்தாக்குதலில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

👩‍⚖️காத்தான் குடி பள்ளி வாசல் சம்பவத்தின் பின்னனிகள் என்ன? 

👩‍⚖️இந்த சம்பவத்துக்கு முன்னும் பின்னும் நடந்தவை என்ன? 
👩‍⚖️அவ்வாறான முடிவுக்கு நிர்பந்தித்தது எது அல்லது யார்?

காத்தான் குடி படுகொலையை மட்டுமே இங்கே பெரும் குற்றமாக்கி எனைய குற்றங்களை மறைத்து, முக்கியமாக முஸ்லிம் சமூகம் செய்த, செய்து கொண்டிருக்கின்ற தவறுகளை உணராமல் சாக்குப்போக்கு சொல்லி இடி சோறு தின்றாலும் சிங்கள அரசுக்கே சேவகர்களாக வாழ்வதை ஆதரிப்பதும், நியாயப்படுத்துவதும் தம் தவறுகளை அவர்கள் உண்ரும் தருணத்தை 
தரப்போவதே இல்லை.

தவறுகள் கண்டிப்பாக இடிந்துரைக்கப்பட வேண்டும். ஆதரவு செய்கின்றோம் எனும் பெயரில் பூசி மெழுகல்கள் தவிர்க்கப்பட வேண்டும். 
நட்பு வேறு. சமூகம் சார்ந்த எதிர்காலம் வேறு எனும் அறிவு பூர்வ சிந்தனை எமக்குள் வேண்டும். நட்பையும், சமூகத்தையும் ஒன்று சேர்த்து குழப்பி எமது சமூகத்துக்கு தீங்கு செய்வோர் பட்டியலில் இடம் பெற வேண்டாம். .

ஆம்....?
எங்கள் உரிமைப்போராட்டம் நசுக்கப்படடபோதும் வேடிக்கை பார்த்தீர்கள். போதாக்குறைக்கு உங்கள் அரசியல் ஆளுமைகள் எங்கள் மக்களையும் நிலங்களையும் அபகரிக்கும் செயல்பாடுகளில் ஈடு படும் போது ஆதரவும் தந்தீர்கள். அதற்கு யாழிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதையும், காத்தான் குடி சம்பவத்தையும் காரணம் காட்டினீர்கள்.
நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி யாகும் போதும் உங்கள் சமூகம் விடும் தவறுகளை உணராமல, நியாயப்படுத்துகின்றீர்கள்?
கிழக்கில் என்ன தான் நடந்தது? நடக்கின்றது? அங்கே தமிழர்களுக்கு பாதுகாப்பிலலத சூழல் ஏன்? கிழக்கு தமிழர்கள் பேசாமடந்தைகளாக, எவன் ஆண்டால் எமக்கென்னெ நான் என் குடும்பம் எனும் சுய நலவாதிகளாக முதுகெலும்பில்லாத கோழைகளாக மாறிப்போனது ஏன்?
கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது.
1990 ஆகஸ்ட் 3 காத்தான் குடி பள்ளி வாசலில்
தொழுகை நேரம் 103 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடுக்களை சுமப்போர்,வன்மம் வளர்ப்போர் அக்காலத்தில் தங்கள் சமூகம் விட்ட பிழைகளை உணர மறுப்பது எமக்குள் பல கேள்விகளை தந்திருக்க வேண்டுமல்லவா.....?

ஒன்றுக்கு நூறாய் இச்சம்பவம் நடந்த அடுத்த வாரமே பழிக்கு பழி வாங்கி உங்கள் இரத்த வெறியை தீத்து கொண்ட பின்னும் இலங்கை தேசத்தில் தமிழ் பேசும் இனத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை கூட பெறத்தகுதி அற்றவர்களாக்கி ,பால் சோறும் பொங்கி தின்ற பின்னும் எதை தான் எதிர்பார்க்கின்றீர்கள்?
காத்தான்குடியில் ஆக்ஸ்ட் 3 ல் 103 பேர் படுகொலையானதன் எதிரொலியாக நாங்கள் இழந்தவைகளுக்கு எங்கே நியாயம் கேட்க வேண்டும்?
திராய்க்கேணி படுகொலைகள் 
****************************************
1990 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 6 ம் திகதி இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.
வீரமுனைப்படுகொலை
*******************************

⁉️1990 ஆம் ஆண்டில் யூன்,யூலை மாதம் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் அப்பகுதி கிராம தமிழ்பேசும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் வீரமுனை பிள்ளையார் கோயில் வளவிலும், இராம கிருஷ்ன மிஷன் பள்ளியிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தார்கள்.

அவ்விடத்தில் ஆகஸ்ட் எட்டில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் உள் நுழைந்து 400 க்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டும் வெட்டியும் தாக்கினார்கள். வீரமுனை பிள்ளையார் கோயில் தாக்குதல் சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.
1990 யூன் மாதமிருந்து காணாமல் போனோர், கைது செய்யப்பட்டோர் குறித்து இது வரை எந்த தகவலும் இல்லை என்பதை விட கைது எனும் பெயரில் கொண்டு செல்லப்பட்டவர்களை உயிரோடு அடுக்கி, டயர் போட்டு எரித்து எரிந்தும், எரியாமாலும், மட்டக்களப்பு வாவியில் எறிந்த உண்மைகள் பிணங்கள் எழுந்து வந்து சொல்லவா போகின்றன?
சத்துருக்கொண்டான் படுகொலை
********************************************

⁉️1990ம் ஆண்டு ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சோதனை எனும் பெயரில் நடத்திய கைதுகள் செயல்பாடுகளுக்கு அஞ்சி தமது இருப்பிடங்களை விட்டு சிதறியோடி பாதுகாப்புத்தேடி, பாடசாலைகள், ஆலயங்கள், பொதுக்கட்டடங்கள் என்பனவற்றில் கூட்டமாக தஞ்சமடைந்தவர்களை 

ஒரே இடத்தில் கொன்ற படுகொலைதான் சத்துருக்கொண்டான் படுகொலையாகும்.

செப்டம்பர் 9. இராணுவத்தினருடன்,தமிழ் ஒட்டுக்குழுக்களும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் சேர்ந்து மட்டக்களப்பு சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் 186 பேரை ஒன்றாகக் குவித்து அடையாளம் தெரியாமல் கொன்றழித்தார்கள்.குற்றுயிரும், குறைஉயிருமாக ஒன்றாக குவித்து டயர்களை போட்டு எரித்தார்கள்.
இதற்கெல்லாம் சாட்சி யார் என்கின்றீர்களா? 
பிணங்கள் வந்து சொல்லாது தான். 
எங்கள் மனங்கள் என்றேனும் ஒரு நாள் பேசும்.

ஆகஸ்ட் 3 காத்தான் குடி தாக்குதலுக்கு முன்னர் நடந்தது என்ன?
கிழக்கில்.அதிலும் மட்டக்களப்பு, அம்மாறையில் பூவும் நாரும், புட்டும் பூவும் ஏன் உதிர்ந்து போனது?
1990 களில் மட்டக்களப்பு, அம்பாறையில் யூன் மாதம் தொடக்கம் இராணுவத்துடன் இணைந்து, துணைப்படை எனும் பெயரில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் தமிழ்க்கிராமங்களுக்குள் நுழைந்து நடத்திய கொடுமைகளுக்கு யார் நியாயம் தீர்க்க முடியும்?
கல்முனைப்படுகொலை
********************************

⁉️1990 யூன் கல்முனையில் 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதும். உயிரோடு எரிக்கப்பட்டதும் அதற்கு முஸ்லிம் ஊர்காவல் படையினர் துணை போனதும், மசூதிகளில் ஆயுதங்கள் சேகரிக்கும் இட்ங்களானதும்......அன்று வரை தாயாக பிள்ளையா பழகி வந்த இரு சமூகமும் எதிரெதிராக,ஒருவரிலொருவர் நம்பிக்கைஅற்று, அச்சமும், அவ நம்பிக்கையும் நுழைத்தவர்கள் யார்?

விடுதலை போராட்ட செயல் பாடுகளை காட்டிக்கொடுத்ததும், விலை போனதும்.. பெரும்பான்மை சமூகத்தினை சார்ந்தே வெளிப்படுவதும் தான் உங்கள் நீதியா?
உங்களுக்கு வந்தால் இரத்தம்? அடுத்தவர் உயிர் என்ன தக்காளி சட்னியா?
நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. எமது பக்கம் குற்றம் சாட்டப்பட்டோர் தமது தவறுகளுக்கான பலனை அடைந்த பின்னும் அதையே பேசி தப்பிக்க முனைவோர் சிந்தியுங்கள்.
எமது விடுதலைப்போராட்டத்தையும், எமக்காக போராடிய விடுதலைப்புலிகளையும், அவர்களின் உயிர்த்தியாகத்தையும் விமர்சிக்கும் தகுதி உடையோராக இங்கே எவரும் இல்லை.
இலங்கை தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற தமிழ் பேசும் இந்துக்கள்,முஸ்லிம்கள்,கிறிஸ்தவர், பறங்கியர் என அனைத்து இனங்களின் ஒற்றுமையும் அவசியம் என்பதை போலவே எமது விடுதலைப்போராட்ட தியாகங்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.
அவர்கள் கடந்து வந்த போராட்ட பாதைகளில் கறைகள் இருக்கலாம், வடுக்கள் இருக்கலாம். அதற்காக அவர்கள் போராட்டமும், தியாகமும் கறைப்படுத்தப்படுமானால், அவர்கள் அர்ப்பணிப்பை புறம் தள்ளி சமூகம் சார்ந்த மீட்சிகளை முன்னெடுத்து செல்வது என்பது சாத்தியமே இல்லை.
அன்று நடந்தவைகளை பேச மறுப்பதும், மறப்பதும், மறைப்பதும் நியாயமாகவே படவில்லை.
குற்றம் சாட்டி ஒருவரிலொருவர் பழி போட்டு எமது தவறுகளை மறைப்பதை விட,வெளிப்படையாக பேசி தெளிவை பெறுவதே எமது சமூகத்துக்கு இன்றைய நிலையில் செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும்.
அனைவரும் இணைந்தே தீர்வுகளை தேடுவோம்.
இலங்கை எங்கள் தேசம். அதை பாதுகாப்பது எம் ஒவ்வொருவர் கடமையுமாகும்.
ஈஸ்டர் கால சர்ச் தாக்குதல்களை நியாயப்படுத்துவோராய்.........?
🔘


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!