02 மார்ச் 2016

எல்லாமே நீயானாய்!


கரைதெரியாத என் வாழ்வில்
படகோடு நீ வந்தாய்...

இருளான என் வாழ்வில்
ஒளியாக நீ வந்தாய்...

என்னை அமிழ்த்தும் பாரத்தை
தாங்கும் சுமையாக நீ வந்தாய்...

பசியாக நான் இருந்தேன்
பசி போக்கும் தாயானாய்

நோயாலே தவித்திருந்தேன்
நோய் போக்கும் மருந்தானாய்..

தூற்றும் மாந்தர் நடுவினிலே
துயர் துடைக்கும் துணையானாய்

என் சிந்தை சொல் அனைத்தும்
நித்தம் நித்தம் நீயானாய்...

இன்பம் தரும் இறையானாய்
தாங்கிடும் தாயானாய் ,

சுமந்திடும் தந்தையானாய்
தேற்றிடும் உறவானாய்

என் எண்ணமே நீயானாய்
எனக்கெல்லாமே நீயானாய்


2009 ல் எழுதப்பட்டு முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலா போன்ற தளங்களில் பகிரப்பட்டது! 

13 கருத்துகள்:

  1. கவிதை காண இயலா
    களிப்பைத் தருகிறது.

    இதயத்துக்கு
    இளஞ்சூட்டினை அளித்து
    இன்பம் தருகிறது.

    ஹம்சத்வனி ராகத்தில்
    பாடிப்பார்த்தேன்.
    ஹம்சமே கண்முன்னே
    நீந்தக் கண்டேன்.

    சுப்பு தாத்தா.

    ஹம்சம் = அன்னப் பறவை
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை. ரசித்"தேன்".

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  4. அருமையான வரிகள்
    அற்புதமாய் படைத்துள்ளீர்கள்....

    பதிலளிநீக்கு
  5. ரசித்தோம் சகோ...அருமை

    பதிலளிநீக்கு
  6. //பசியாக நான் இருந்தேன்
    பசி போக்கும் தாயானாய்//
    அருமையான வரிகள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. நன்று நன்று!! உயிர்ப்பு மிக்க மென்மைக் கவிதை...

    பதிலளிநீக்கு
  8. கவித்துவமான வரிகள் சூப்பர்மா.

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை! இன்னும் தூசு தட்டி வலையில் ஏற்றுங்கள் சேமிக்கும் களஞ்சியமாக!

    பதிலளிநீக்கு
  10. ஒரு கவிதையின் வரிகள் மட்டும் சரியாயிருந்தால் மட்டும் போதாது..சொல்லும் உணர்வுகள் நெஞ்சை உரசுவதை இருக்க வேண்டும்..
    உங்கள் கவிதை எல்லாம் செய்கிறது.
    வெறும் வாழ்த்துகளில் முடிக்க முடியவில்லை..
    வேறுவார்த்தைகள் தேடுகிறேன்.. அதுவரை இந்த வாழ்த்துகளை வைத்திருங்கள்...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!