24 மார்ச் 2020

Covud19 முடியும் என்றால் முடியும்

1987 இந்தியன் ஆர்மி வந்த பின் தான் ஊருக்குள் சாமம் எமமில்லாமல் ஆர்மி நுழைய ஆரம்பித்தது

அவர்கள் மூலம் கிடைச்ச அனுபவத்தால் ஆர்மி இரவில்
ஊருக்குள் வருவான் எனில் களுவாஞ்சிக்குடி யிலிருந்து ஆர்மி அணிவகுப்பு தொடங்குமுன் அந்த யூரிலிடுந்து கோயில் மணி ஒலிக்கும்
களுவாஞ்சிக்குடிக்கும் எங்கள் ஊருக்கும் இடையில்  ஏழு எட்டு கிராமம்
சில நேரம் கடற்கரை பக்கம் பெடியள் மாரத்தான் முறையில் செய்தி சமிஞ்சை தருவாங்க

பெடியள் முன்பே சொல்லி  ippadi கோயில் மணி அடித்தால் வீட்டில் தனியா யாரும் இருக்க கூடாது

எல்லோரும் அங்கிருக்கும் பள்ளியில் கூடணும்

என் அம்மா இதுக்கு என
பால் மா, சீனி, தேயிலை , ரஸ்க்
வாங்கி வைத்து மூடடை கட்டி தலை நாட்டில் வைச்சிருப்பா

குட்டிஸ் நாங்க எங்கள் பள்ளி பையில் எங்களுக்கு ஒரு மது உடுப்பு பள்ளி பாடம் நோட்டு எடுத்து இரவில் வாசலில் வைச்சிட்டு படுப்போம்

இப்படி கிழமைக்கு நான்கு இரவு நடக்கும்

ஊருக்குள் வரும் ஆர்மி  வீட்டில் யாரும் இல்லாமல் சனம் ஆயிரக்கணக்கில் ஒரே இடமா கூடி இருப்பதை பார்த்து ரோந்து போவது போல் போவான்
( ஒவ்வொரு தடவையும் அரை மணி நேரத்துக்கு மேல் )
அவன் போனதும் வீட்டுக்கு போவம்

முதல் தடவை தெரியாமல் தனித்திருந்து இழப்பை சந்தித்தோம்
அதன் பின் எங்களுக்கு  நாங்கள்காவல்

தகவல் தொடர்பு அதிகம் இல்லாத காலத்தில்  இதனை முடியும் எனில் இக்காலத்தில் பத்து மடங்கு முடியும்

அப்போது ஒன்று கூடினோம்
இப்போது கூடவேண்டாம்
வீட்டில் இருங்கோ என சொல்லணும்
விழிப்புணர்வு கொடுங்கனும்

30  வருடம் முன் முடிந்தது
இப்போதும் முடியும் தானே?


_NishaBc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!