14 மார்ச் 2020

COVID -19 எச்சரிக்கை எனும் பெயரில் தேவையில்லாமல் பதடடம், பயம் தருகின்றோம்....?

கொரோனா வைரஸ் பற்றியும் 
அதன் பாதிப்புகள் குறித்து  
எழுதும் போதும் பகிரும் போதும் ,



🔥 எச்சரிக்கை எனும் பெயரில் தேவையில்லாமல் பதடடம், பயம் தருகின்றோம். 

🔥 கொரோனா வைரஸ் ஒன்றுமே இல்லை. தேவையில்லாமல் பெரிசு படுத்துகின்றார்கள் .

🔥 சீனாவும் அமெரிக்காவும் இணைந்த வர்த்தக வியாபாரத்தில்  ஊடகங்கள் பரப்பிவிடும் கட்டுக்கதை.

🔥 எயிட்ஸ், சார்ஸ், எபோலா, பன்றிக்காய்ச்சல் வந்த போதும் இப்படித்தான் பயம் காட்டினார்கள்.

அப்புறம் என்னாச்சு? 

🔥 உலகத்தில் தினமும் விபத்தில்,  நீரழிவு, இதய நோயால் இத்தனை பேர் இறக்கின்றார்கள் என கணக்கு போட்டு 
அவைகளோடு ஒப்பிடடால் கொரோனா வைரஸ் மரணவிகிதம் ஒன்றுமே இல்லை,
பத்தோடு பதினொன்றாக இதுவும் கடந்து போகும் என்கின்றார்கள்.

அவர்கள் நம்பிக்கையின் படி  இந்த புதிய corena வைரஸ் கடந்து போனால்  நல்லது தான். 

ஆனால்.......? 

புதிய Corena வைரஸ் உடன்  முன்னிருந்த நோய்களை ஒப்பிட்டு அரசின் விழிப்புணர்வு எச்சரிக்கைகளை மீறி, ஆலோசனைகளை அசடடை செய்து அரசு மற்றும் ஆய்வாளர்களின் கட்டுப்பாடு கணிப்பையும் மீறி வேகமாக பரவி செல்ல காரணமும் ஆகின்றார்கள்.

🔻 எப்போதும் ஒன்றோடு ஒன்று ஒப்பீடு செய்வது செய்யப்படும் நபர், பொருள், சம்பவத்தின் தனித்தன்மையை சாதக பாதகத்தை மழுங்கி போக வைத்து அதன். சிறப்பை உணர முடியாமல் செய்கின்றது.

🔻 ஆற்றுகை படுத்துகின்றோம், பயத்தை போக்குகின்றோம் என இயலாத ஒன்றை. சொல்லி அந்த நேர சமாளிப்பில் குறித்த விடயம் சார்ந்த கனத்தை நீர்த்து போக வைத்து அஜாக்கிரதை உணர்வையும் உருவாக்கி விடுகின்றோம்.

🔻 அப்ப அப்படி  ஆனதெனில் இப்பவும் அப்படியே ஆகும் எனும் நீக்குப்போக்கு சிந்தனை உருவாக்க நாம் காரணம் ஆகின்றோம்.

Corena வைரஸ் எடுத்து கொண்டால் இது ஒரு வகை தொற்று நோய்
 ( நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும்  இருக்கலாம் ) 

தொற்றும் நோய் என்பது ஒரு மனிதனிடம் இருந்து மற்றவருக்கு தொற்றும் 

எத்தனை பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் சமூகத்தில் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் இருந்தால் தான் தொற்று நோய் கொள்ளை நோயாக மாறாமல் தடுக்க முடியும். 

நாம்  சுத்தமாக இருந்தாலும்  நம் அருகில்  ஒருவர் தும்மிவிட்டாலோ இருமி விட்டாலோ. காற்றில் பரவும்  Corena  வைரஸ் எனும் கொள்ளை நோயிலிருந்து தப்ப   முழு சமூகத்தின் ஆதரவும்  பொறுப்புணர்வும் தேவைப்படுகிறது 

இன்றைய நிலையில் தொற்று நோயானது உலகில் கொள்ளை நோயாக மாறி இருக்கின்றது 

இதுவரை மனித இனம் காணாத புதிய வைரஸ் இதுவென ஆய்வுகள் கூறுகின்றன 

மனிதர்களுக்குள் இருக்கும்  சாதாரண கொரோனா வைரஸ்களுக்கும் இந்த புதிய கொரோனா வைரஸ்க்கும் ஒற்றுமை 10 -20 % மட்டுமே. 

COVID 19  வவ்வால்களிடம் காணப்படும் கொரோனா வைரஸ்களுடன் 80 முதல் 90 % ஒத்துப்போகிறது என்கின்றார்கள்

மூன்று மாதம் முன் சீனாவில் உருவான  புதிய கொள்ளை நோய்க்கு இது வரை மாற்று மருந்து இல்லை என ஆய்வுகள் சொல்கின்றன.  
 • உடலின் எதிர்க்கும் சக்தி என்பது இந்த நோய் தொற்றி மீண்டு வந்தவர்களுக்கு மீண்டும் தொற்றுகின்றதா என்பதை பொறுத்தும்அவர்களை கண்காணிப்பதன் மூலமே முடிவுக்கு வர முடியும். 

• 

கொள்ளைநோய் (epidemic), உலகம்பரவுநோய் (pandemic) 

உலகம் முழுவதும் சம காலத்தில் , மக்கள் தொகை அடர்த்தியை விட , வேகமாக, மனித னிடம் இருந்து மனிதனுக்கு பாவும் நோய் கொள்ளை நோய்களே!

உலக சுகாதார அமைப்பு ( WHO) கொள்ளைநோய் (epidemic) உலகம் முழுவதும் பரவும் நோயாக ( உலகம்பரவுநோய் pandemic ) அறிவிக்கின்றது எனில் அதன் நோக்கம் என்ன? 
✅ உலக நாடுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுத்து மக்களை எச்சரித்து பாதுகாக்க வேண்டும் என்பதனால் தான் COVID 19  உலக கொள்ளை நோயாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
( எயிட்ஸ், சார்ஸ், எபோலா, நீரழிவு. இதய நோய் அப்படி அறிவிக்கப்பட்டதா ?)

கடந்த மூன்று மாதங்களில் இந்த 
கொள்ளை நோயினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார ரீதியான இழப்புகளை ஈடு கடடவும் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கவும் ஆகும் காலங்கள் குறித்து சிந்திக்காமல் மக்கள் உயிர் முக்கியம் என உலக நாடுகள் தம் மக்களை காக்க அவசரகால 
சட்டம் போட்டு அனைத்தையும் முடி நிர்வாகத்தை நிறுத்தி நோய் தொற்றுள்ள நாடுகளிடமிருந்து தம்மை விலக்கி , உலகத்திடமிருந்து தனிமைப்படுத்தி புதிய கோரினாவிலிருந்து  காப்பாற்ற போராடுகின்றது.

சீனா வின்  ஹுகங்  மாநிலத்தில் பரவிய தொற்று அந்த நாட்டினுள் இருக்கும் வரை வெளிப்படாத பல உண்மைகளை ஐரோப்பாவினுள்  இத்தாலியை பற்றி பிடித்து கொண்ட பின் உணர முடியும் போது தினமும் நடக்கும் நாட்டு, உலக நடப்புக்களை  கவனிக்காது யாரோ பரப்பும் வாட்ஸாப் மெசேஜ்களை நம்பி பகிர்கின்றோம். 

உங்கள் சிந்தனையின் படி 
சீன அமெரிக்க வர்த்தகம்.......? 
திடடமிடட சதி..? 
இருக்கட்டும்.

„ 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு „

புத்தியை கூர் தீட்டுவோம்! 

கடந்து வரலாறும் எமது அனுபவமும், கூரியகவனிப்பும், ஆழ்ந்து ஆராய்தலும்  சில தெளிவுகளை தந்திருக்கின்றது.

✅ ஒப்பிடப்படும் அத்தனை நோய்களாலும் . எந்த நாடும்  ஸ்தம்பிக்கவில்லை ,
உலகளவில் இயக்கம் நிற்கவில்லை.

🚫 ஆனால் இந்த நூற்றாண்டில் மனித இனம் இதுவரை சந்தித்திராத பலம் பொருந்திய எதிரியாக புதிய கொரோனா வைரஸ் தொற்று  உலகத்தைஅசைத்திருக்கின்றது 
அதன் இயக்கத்தை நிறுத்தி இருக்கின்றது 

✅ சீன அமெரிக்க நாடுகள் தன் வர்த்தக ஆதாயத்துக்காக உலக ஊடகங்களை விலைக்கு வாங்கலாம் , எல்லா நாடுகளையும் விலை பேச முடியாது .
( இனி சீனா அனைத்தையும் நம்பிக்கைகளையும்  இழந்து மீண்டும் 0 இலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது வேறு கதை ) 


Switzerland அவசர கால சட்டதின் கீழ் நாட்டை இராணுவத்தின் மூலம் நோய் பரவுவதை தடுக்கும் படியான நிர்ப்பந்தம் 
வந்திருக்கின்றது.

👉🏼 இரண்டு உலகப்போர் காலத்திலேயே எந்தப்பக்கமும் சாராமல் தான் போக்கில் தனித்து நின்ற சுவிஸுல்க்கு இவர்கள் வர்த்தக விளையாட்டில் உடன் பட என்ன காரணம் இருக்கும் என நினைக்கின்றிர்கள்? 

✅ யுரோப்பாவில் Euro வை மதிப்பு சரியாமல் காக்கும் நாடு, பங்கு சந்தை சரியாமல் ஸ்திரம் கடும் நிபுணத்துவம் கொண்ட நாடு. 

👉🏼 சுற்றுலாத்துறையை முழுதும் நம்பி இருக்கும் நாட்டில்  நாளுக்கு எத்தனை மில்லியன் நஷ்டம் ஏற்படுகின்றது? 

✅ சுவிஸ் யாரையும் நம்பாமல் இந்த பிரச்சனைக்கு மருந்து கண்டு பிடிக்க தானே முயற்சிக்கின்றது.

✅சுவிஸில் 1000  பேருக்கு தொற்றி அதில் ஏழு பேர் மட்டும் மரணம், அவர்களும் முன்னிருந்த நோய் தேகத்துடன் corena  வைரஸ் சேர்ந்து எதிர்த்து  போராட எதிர்ப்பு சக்தி இல்லாமல் இறந்தார்கள் 

✅ மீதி பேரின் உயிரைக்காக்க இந்த அரசு அவசரகால சடடம் வரை செல்கின்றது எனில் இதன் மூலமான பொருளாதார இழப்புகளை ஈடுசெய்ய எத்தனை வருடம் எடுக்கும் என நினைக்கின்றிர்கள்?

▪️ இத்தாலியில் தொற்றின் வேகத்தில் பத்து வீதம் மரணம் அடைகின்றார்கள் 

▪️ உலகின் இரண்டாவதும்  மிகப்பெரிய பொருளாதார, மனித வளம் நிறைந்த நாடு சீனா சரிந்து கிடக்கிறது .

▪️பல மத்திய கிழக்கு நாடுகளில் என்ன நடக்கின்றது?

▪️உறுதிப்படுத்த படாமல் எத்தனை நோயாளர்கள் மறைந்து இருக்கின்றார்கள் எனும் முழு விபரமும் தெரியாது 

▪️உலக நாடுகள் விமான போக்குவரத்து முதல் அனைத்து போக்குவரத்துகளையும் நிறுத்தி தன்னை தனிமைப்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கின்றது. பள்ளிகள் அனைத்தும் மூடப்படுகின்றன 

ஐரோப்பா மற்றும் உலகளவில் நோய் தொற்று  ப்ளூ காய்சசாலை விட இரண்டு மடங்கு அதிகமான வேகத்துடன் Jump செய்யும் கிருமியாக புதிய கொரோனா வைரஸ் இருக்கிறது. 

ஒரு  COVID 19 நோய் தொற்றாளர்
இன்னும் மூன்று முதல் ஐந்து நோயாளர்களை 
உருவாக்குகின்றார்.

🖤இறப்பு வீதம் : 
( கிருமித் தொற்று, காய்சசல் , இருமல்  மூச்சுத்திணறல், நியூமோனியா, மரணம் ) 

நோய் தொற்று உறுதிசெய்யப்படுபவர்களில் எத்தனை மரணங்கள் நிகழ்கின்றன? 

ப்ளூ  காய்ச்சலில்  0.1% மரணங்கள்  எனில் புதிய கொரோனா தொற்றின் மரண வீதம் இத்தாலியில்  10 % ஆகவும் 
ஏனைய உலக நாடுகளில் 3.5- 5 %  ஆகவும் இருக்கின்றன.
✅ ஆயிரம் பேருக்கு வரும் ப்ளூ காய்ச்சலில் ஒருவர் இறக்கின்றார் , 
✅ உலக அளவில் COVID 19  தொற்றாளர்கள் 1000 க்கு 35- 50 பேர் இறக்கின்றனர். 
🔴 கடந்த சில நாடகளில் Italy   தினசரி 2000 புதிய தொற்றாளர்களையும் 200  பேர் மரணத்தையும் பதிவாக்கி Jump செய்கின்றது )

🙏 

உலகின் வளர்ச்சியடைந்த தேசம், மக்கள் கடடமைப்பு மிக்கதென கொண்டாடப்படட தேசத்தில்  இராணுவத்தை நிறுத்தி  நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் படியான  சூழலை உறவாக்கி  இருக்கின்றது எனில் .....? 

பேரிடர் காலத்தில் .......? 

அரசின் எச்சரிக்கைகள்,  விழிப்புணர்வுகள் யாருக்கானது? 

சமூகத்தில் அக்கறை உள்ள மனிதர்களாக நாம் என்ன செய்ய போகின்றோம்? 
எங்கள் கடமை என்ன?

சிந்தியுங்கள் 🙏

- Nisha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!