09 அக்டோபர் 2024

அரிவரி ( பாலபோதினி ) பாலர் புத்தகம்

1980 களில் நர்சரி இல்லை ஆனால் அரிவரி என பாலர் வகுப்பு ஆரம்ப பள்ளியில் இருந்ததாக நினைவு. ( சரியா என சொல்லுங்கள் )

காக்கா காக்கா பறந்து வா
காலையில் எழுந்து ப்றந்து வா
கோழி கோழி ஓடி வா
குஞ்சை கூட்டி ஓடி வா
வெள்ளைப்பசுவே விரைந்து வா
பிள்ளைக்கு பால் கொண்டு வா
பப்பி பப்பி பாய்ந்து வா
பந்தை வாயில் கௌவி வா
**
அம்மா, அப்பா ஆடு, இலை, ஈ , உரல், ஊக்கு, எட்டு, ஏணி, ஐந்து, ஐவர், ஒன்பது ....... நினைவு இருக்குதுங்களா?
அம்மா அப்பா ஆனவரே
ஆடை அணிகள் அணிபவரே
இனிய உணவும் தருவீரே
ஈசன் பாதம் பணிவோமே
உண்போம் உடுப்போம் உவந்திடுவோம்
ஊஞ்சல் ஆடிப்பாடிடுவோம்
எண்ணும் எழுத்தும் படித்திடுவோம்
ஏவாமற்பணி செய்திடுவோம்.
ஐந்தும் இரண்டும் கற்றிடுவோம்
அன்பாய் கூடி வாழ்ந்திடுவோம்
ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம்
ஓடிப்பாடி நடித்திடுவோம்
ஔவைப்பாடல் படித்திடுவோம்.
அம்மை அப்பரை வணங்கிடுவோம்.
***
தம்பி இங்கே வா
பல் துலக்கு
முகம் கழுவு
கடவுளை வணங்கு
உணவு உண்
பால் குடி
புத்தகம் எடு
பாடம் படி
உண்மை பேசு
பாடசாலைக்கு போ
ஆசிரியர் சொல் கேள்
****
கந்தன் நல்ல கமக்காரன்,
காய்கறி தோட்டம் செய்திடுவான்
கனி மரங்கள் நட்டிடுவான்
காதலாக வளர்த்திடுவான்
காவல் நன்றாய் காத்திடுவான்
காசு பணமும் சேர்த்திடுவான்
வீடு கட்டி வாழ்ந்திடுவான்
வித்தை மிகவும் கற்றிடுவார்
***
ஓடி விளையாடு பாப்பா
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு குழந்தையை வையாதே பாப்பா
சின்னஞ்சிறு குருவி போலே - நீ
பறந்து திரிந்து வா பாப்பா
வண்ணப்பறவைகளை கண்டு - உன்
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
1980 களில் முதலாம் வகுப்புக்கு முன் அரிவரி இருந்தது. முதலாம் வகுப்புக்கு முன்னைய ஒருவருடங்கள் பாடசாலைகளிலேயே பாலர் வகுப்பு எனும் பிரிவும் இருந்தது. ( நர்சரி என தனித்து இயங்கவில்லை ) பாலர் வகுப்பை நிறுத்தி ஆண்டு ஒன்று என ஆரம்பித்த பின்பே நர்சரி எனும் முன் பள்ளி திட்டம் வந்ததா எனக்கு நினைவு இருக்கு. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது இந்த அரிவரி நிறுத்தப்பட்டு ஆண்டு 1 எனும் பாடத்திட்டம் அறிமுகமானதாக நினைவு.
அம்மா, ஆடு, இலை, ஈ என அரிவரியில் படித்ததை விரிவாக்கி முத்லாம் பாடத்தில் உறவுகளை கற்று தந்திருப்பார்கள். மூன்றாம் வகுப்பில் ஆங்கில பாடமும் இருக்கும் அக்காலங்களில் பள்ளி வகுப்புக்களில் செயல்முறை பயிற்சிகளும் இருந்தன. மூன்றாம் வகுப்பிலேயே நாங்கள் ஆங்கிலப்பாடத்தில் இருந்த கோகோனொட் ரொபி செய்தோம்






அனைத்து பக்கங்களையும் இந்த இணைப்பில் காணலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!