#விவசாயம் #பண்ணை என்றால் முந்தின காலம் போல் மண்ணுக்குள், சேத்துக்குள் கால் புதைந்து வேலை செய்யணும் என பலர் நினைக்கின்றார்கள்..
சிறு வீட்டுத்தோட்டங்களுக்கே இப்போதெல்லாம் மண் தோண்டி விதையோ மரமோ நடுவது இல்லை. உடல் வலிக்க நீர் பாய்ச்சுவது இல்லை. நகத்தினுள் அழுக்கு படாமல் விவசாயம்..?
மண்ணை கிளறி உரம் போட,விதை நட,
மரம் நட, நீர் பாய்ச்சி, களை புடுங்கி உரமிட்டு, அறுவடை செய்து தரம் பிரித்து தரும் வரை இயந்தரங்கள் வந்து விட்டன.
பல ஏக்கர்கணக்கில் சோளன் விதைக்க மண் பதப்படுத்துவதில் இருந்து தரம் பிரிக்கும் வரை ஓரிருவர் மட்டுமே இயந்தரங்கள் மேலிருந்து இயக்குகின்றார்கள்.
யப்பான் நாட்டின் அனுசரணையுடன் முன்னெடுக்கும் இந்த திட்டம் குறித்து காடுகளில் விவசாயம் செய்வது குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் சிந்திக்காமல் அரசு முடிவெடுத்து இருக்கும் என்று நினைக்கின்றிர்களா..?
சிங்கள குடியேற்றங்களை உருவாக்க நினைத்து திட்டமிட்டால் விண்ணப்பம் , தேர்வு, பயிற்சி என்று அரசு பணி அதிகாரிகள் நேரத்தையும் விவசாய அபிவிருத்தி எனும் பெயரில் புதிய பணியாளர்களையும் நியமித்து பயிற்சி காலத்திலேஸே மாதம் 25 ஆயிரம் கொடுக்கும் அரசு முட்டாள் என்று நினைக்கின்றிர்களா..?
மனித வலு மற்றும் பொருள் இயந்திர வலுக்களை கொண்டு இறக்கி காலத்தை வீணடிக்க அரசாங்கத்திடம் கஜானாவில் காசு நிரம்பி வழிகின்றது என்று நினைத்து பேசிக்கொண்டிருப்பார் பேச்சுக்கு காது கொடுத்து கொண்டிருக்காமல் காரியத்தை பாருங்கோ..!
சொல் அல்ல செயல் முக்கியம்..! தூரம் , துயரம்சொ
ல்லிக்கொண்டிருப்போர் இருக்கட்டும்.
இராணுவத்தின் கீழ் இந்த காடுகள் வந்த பின் அவர்களுக்கு தூரம் துயரம் எல்லாம் புரியட்டும்.
விவசாய புரட்சியும், தொழில் நுட்பமும்
எப்படின்னு இணைத்திருக்கும் படங்கள் உட்பட வீடியோ இரண்டும் பாருங்கோ ..!
இதெல்லாம் நம்ம பிச்சகார நாட்டுக்குள் வருமோ என்று யாராச்சும் குத்தம் சொல்லி கொண்டு வருவாங்க..,!
வரும்....!
நாம் எல்லோரும் இணைந்து செயல் பட்டால் வர வைக்க முடியும்..!
பாகிஸ்தானிகேயே இதெல்லாம் வந்து இருக்கு. நம்ம தேசத்துக்கும் வருவதுக்கு என்ன..? இந்த இயந்தரங்கள் எல்லாம் ஒவ்வொருவரும் தனியே வாங்குவது இல்லை. அரசு அதற்கு என்று ஒரு ஆபீஸ் அல்லது தனியார் வாங்கி வாடகைக்கு விடலாம். அப்டித்தான் சுவிஸில் நடக்குது. எல்லாமே தெரியாது என்று இருக்கும் வரைதான்.
நீங்கள் களத்திலாடுங்கோ மக்கா..!
விவசாய புரட்சியும், தொழில் நுட்பமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!