வடக்கில் என்னென்னமோ கதைகள் அடிபடுதாம்..... காணி கிடைக்கும் வாய்ப்பு இல்ல... சிங்களவரை குடியேற்ற திட்டம் இடுகின்றார்கள்... விண்ணப்பம் கூடினால் திட்டமே கேன்சலாகும் அப்படி சொல்லி உங்கள் நம்பிக்கையை தளர்த்தி அயற்சி உருவாக்கி மக்களை எல்லா நேரமும்.. எல்லாவற்றையும் எதிர் மறையாக அணுகுதலுக்குள் வைத்திருப்பதும் ஒரு வித உளவியல் செயல்பாடு... பேசுவோர் பேசட்டும்..... !
எனக்கு இப்படியும் யோசிக்க தோணுது...!
🟠 இந்த #காணி விடயத்தில் விண்ணப்பங்கள் போதவில்லை என்று திகதி நீட்டிப்பு குறித்து ... ! இது தான் சாக்கு என்று சிங்களவருக்கு நிலங்களை கொடுத்து நீங்க விண்ணப்பிக்கல்ல .. very SORRY என்று சொல்லி இருக்கலாம் தானே..? சிங்களவருக்கு கொடுக்கணும் என திட்டமிருந்தால் திரும்ப திகதி நீட்டிக்க தேவையே இல்லையே ..?
“ தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன”என்று சொல்வார்கள்.நமக்கு நல்லது கெட்டது நமக்குள்ள தான் இருக்கு..!
🔵 கொரோனாவுக்கு பின்னரான தற்சார்பு நோக்கிய வாழ்க்கைக்கு தயாராகுங்கள் எனும் அழைப்போடு வீட்டுத்தோட்டம், விவசாயம் விதைகள், நிதி உதவிகள் என்று அறிவித்தார்கள். அதன் பின் கிராமங்களை தற்சார்பு நோக்கிய முன்னேற்றம், துடிப்பான இளையோர் சமூகத்தை உருவாக்குதல், சுய தொழில் ஊக்குவிப்பு என்று நாடு முழுவதும் ரீதியில் அபிவிருத்தி சார்ந்த பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கின்றாரகள்.
🟢 இத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான இளையோர் Development Officer பணிக்கு உள் வாங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டுள்ளது. சிங்கள அமைசசர்கள், அதிகாரிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்கின்றார்கள். அறிவிப்புகளும்,அழைப்புகளும் தனி பேஜ் மூலம் மூன்று மொழிகளிலும் பகிரப்படுகின்றன.
இலங்கை தமிழ் மக்களுக்கு என்ன தோணுது..?
தமிழ் மக்கள் பெரும்பான்மை யோருக்கு சிங்களம் தெரியாது. இதனால் அரசின் நோக்கம் குறித்த நேரடி புரிதல் இல்லாமல் இருக்கின்றது. பல பிரச்சனைகளின் ஆணி வேர் இது தான்...!
🟢 தொழில் வாய்ப்பு மற்றும் தற்சார்பு பொருளாதார நிறைவு மட்டுமல்ல கொரோனாவுக்கு பின் உலகம் எதிர் கொள்ள போகும் உணவுத்தட்டுப்பாட்டை எதிர்வுகொள்ளும் வணிக நோக்கம், பொருளாதார ரீதியில் வலுப்படுத்தலின் மூலம் அந்நியர் ஆக்ரமிப்பிலிருந்து
பாதுகாத்து கொள்ளும் ஆரம்ப முயற்சியாக இருக்கலாமே....?
( அமெரிக்கருடன் ( 20) நாட்டை குறுக்கால கூறு போடும் ஒப்பந்தம் இன்னமும் கையெழுத்திடாமல் இருக்கு ..! காடுகளை மக்களிடம் தந்து விட்டு இடமில்லையே என்று அவனிடம் கைவிரிக்கவும் முடியுமே ..? )
🔴 அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட உலகின் வல்லரசு நாடுகளின் கிடுக்கி பிடிக்குள் நாடு சிக்கி கடந்த ஆட்சியாளர்களின் தவறுகள் நாட்டை அடிமைப்படுத்தும் நிலையில் மக்கள் தான் இனி நாட்டை பாதுகாக்கணும் எனும் முடிவுக்கு Our President கோத்தபாய ராஜபக்ச @ Co வந்திருக்கலாம்.
🟣 பங்களாதேஷ், பூட்டான், சோமாலிய நாடுகளில் அபிவிருத்தி எனும் பெயரில் நுழைந்த மேற்குலக நாடுகள் பத்தே ஆண்டுகளில் எப்படி சின்னாபின்னமாக்கினார்கள் என்ற உண்மை சிங்களவருக்கும் தெரிந்து தானே இருக்கும்..? அரசியல் வாதி என்றாலும் சிங்களவன் தேசபக்தியும், தெய்வ பயமும் நிறைந்தவன் எனும் உண்மையும் மறக்க கூடாது..!
அனைத்துக்கும் எதிர் சிந்தனை, பயம்,
எதிர்ப்புணர்வு,போராட்டம் ஆர்ப்பாட்டம் கருத்துவாதங்கள் எவர் பசியையும் தீர்க்கப்போவதில்லை. ஆதி,அந்தம் தேடி இன்றைய இருப்புக்களை இழக்காமல் முன் யோசனைதோடு எதிர்காலத்துக்கான நிம்மதியான வாழ்க்கைக்கு இன்றைய நாட்டு நடப்புகளை கூர்ந்து கவனியுங்கள்.
🟡 புலம்பெயர் தமிழரின் கல்வி,பொருளாதாரம் சார்ந்த உதவிகளை கண்டும் காணாமல் சிங்கள அரசு தரும் ஒத்துழைப்பு குறித்தும்... உண்மையில் தமிழரை அழிக்கணும் என்று நினைத்தால் இதை அனுமதிக்காமல் தடுக்க இலங்கை அரசால் முடியாது எண்டு நினைக்கீங்களோ..?
🟤 நான், என் குடும்பம், என் சமூகம் நல்லாருக்கணும் என்றால் நாடு நமக்கு இருக்கணும் என்று இனி என்றாலும் எதிர்வர போகும் ஆபத்துகளை எப்படி தடுக்கலாம் என யோசிங்கோ..! நாங்க நல்ல இருக்கணும் என்றால் நாடு
முன்னேறணும், பாதுகாப்பாக இருக்கணும்.. அது உங்கள் கைகளில் என்று நினைத்து பாருங்கோ..
“ யார்.. யாரால் என்று மீண்டும் மீண்டும் கடந்த கால குற்றம் குறை பேசி மண்ணோடு மண் அழிவதை விட. நிகழ்காலத்தை சரியாக கட்டமைத்து எதிர்காலத்தை எங்கள் வசமாக்குவது விவேகம்“
சில விடயங்கள் கற்பனை போலிருக்கும்... ! உண்மையை சொல்வோரை .. வேலையற்றவன் புலம்பல் 🤣 கிண்டலோடு கடந்து விடுவோம். அதன் உண்மை உணரும் போது காலம் கடந்து இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!