08 நவம்பர் 2020

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோம்- ரசமும் ரகசியமும் 1

தமிழர்களின் பாரம்பரிய உணவான அரிசிமாவும், தேங்காய் பாலும் சேர்த்து செய்யும் அப்பம் குறித்த தகவல் திரட்டி 



ஒரு தகவலை தமிழிலும், ஆங்கிலத்திலும், ஜேர்மன் மொழியிலும் தேடும் போது எப்படி தொகுத்திருக்கின்றார்கள் எனும் உண்மையை இந்த லிங்க் போய் பார்த்து புரிந்து கொள்ள முடியும். 

German 

Englis

Tamil

ஆதித்தமிழ், ஆண்ட தமிழ், வீரத்தமிழர் பெருமை பேசி  கொண்டே இருக்கோம் தவிர உலகத்தின் தொழில்நுட்பம் வளரும் வேகத்துக்கு எங்களால் எங்கட அத்தியாவசிய தகவல்களையே திரட்டி முழுமைப்படுத்த முடியல்ல.  

இணையத்தில் தேடும் போது geogle  search தேடலில் முன் வருவது விக்கிமீடியா தளம்.பல்லாயிரம் செலவு செய்து நேரம் மெனக்கெட்டு தொகுப்பது விளையாட்டு விடயம் இல்லை. விக்கிமீடியாவில் எல்லாம் பொய்யி என்று யாரும் என்னிடம் வர வேண்டாம். அது பொய் யானது தமிழர்கள் இடும் பதிவுகளினால் தானே?

உதாரணத்துக்கு நான் இங்கே பதியும் தமிழர் சார்ந்த பதிவுகள் குறித்த தேடலில் தமிழில்

கிடைக்குமா என்று Geogle Search. ல்  தேடுவேன்ஒ ரு போதுமே நான் தேடும் தகவல்களுக்கு  முழுமையான விபரம்  தமிழில் கிடைத்தது இல்லை. ஆனால் ஜேர்மன் மொழியில் முழு வரலாறும் கிடைக்கும். சங்க காலம் தொடக்கம் இன்று வரை பல  அந்நிய மொழியில் இணையத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. 

தமிழில்..? 

தகவலை ஆதார பூர்வமாக உறுதிப்படுத்த தமிழ்ல் என்ன எழுதி இருக்குதோ என்று தேடி பின்  ஆங்கிலத்தில் சொல் மாற்றி தேடி அறிந்து அதிலும் திருப்தி படாமல் ஜேர்மன் மொழியில் தேடி அங்கே என்ன எழுதி இருக்கின்றார்கள் என்று பல மணி நேரம் செலவு செய்து பல தளங்கள்ங்   பதிவு செய்ய்ப்பட்ட  அதிகார பூர்வ தளங்களின் தகவல்களோடு உறுதிப்படுத்திய பின் அதிலிருந்து முக்கியமானவைகளை அதன் சாரம் மாறாமல் தமிழ் படுத்தி ( மருத்துவ, அறிவியல் சொற்களை தமிழ் படுத்துவது இலகு அல்ல ) எழுதுகின்றேன். 

யாரேனும் கேள்வி கேட்டால் அதுக்கு பதில் சொல்ல முழுமையான விபரம் பதிவு செய்யும் எனக்கு தெரிந்து இருக்கணும் என்பது என் தேடல்களுக்கு பின் இருக்கும் காரணம். 

அப்படித்தான் இன்று பதியும் பதிவுக்காக புளி குறித்து தேடினேன். சமீபத்தில் யாரோ ஒருவர் உணவில்  புளி அதிகம் சேர்க்க கூடாது என்று கூறிய நினைவில்  நம்ம ஊரில் இருக்கும் போது  ஆச்சி ( அம்மம்மாவின் அம்மா ) அம்மம்மா, அம்மா சமைக்கும் போது புளி தானே சேர்ப்பார்கள் என்ற யோசனை வந்தது. 

ரசத்துக்கு மட்டும் இல்லை, மரக்கறி சமைக்கும் போது மரக்கறி குழம்புக்கெல்லாமே புளி தான் விடுவார்கள்.  மாங்காய்,  கொரக்கா எனும் புளி மீன் சமைக்கும் போது சேர்ப்பார்கள். இறைச்சி சமையலுக்கு எலுமிச்சம் புளி விடுவார்களே .. அதுக்கு காரணம் என்ன என்று தேடினேன். 

ஜேர்மன் மொழியில் மருத்துவ தளம்  நம்ம புளி புற்று நோய் வராமல் தடுக்கும் என்பதிலிருந்து , நோய் எதிர்ப்பு சக்தி, ஆன்டி வைரஸ் எதிர்ப்பு திறன் கொண்டது, இரத்த ஓட்டத்தை சீராக்கும் என்றெல்லாம் தொகுத்து இருந்தது. 

https://www.facebook.com/100000786292216/posts/3384451434924366/?d=n (( மேலும் விரிவாக லிங்க் இறுதி பகுதி பார்க்க) 

நான் எழுதும் பெரும்பாலான விடயங்கள் எங்கள் சமூகம்  இன்றைய நிலையில் உண்மை என்று நம்பி கொண்டிருக்கும் பல காரணிகளுக்கு எதிரானதாக இருப்பதனால்  பலரால் ஏற்று கொள்ள முடியாமல்  இருக்கின்றது. 

தமிழ் மொழி,பாரம்பரியம்,கலாசாரம், பண்பாடு இயற்கையோடு வாழ்க்கை என்று கும்பலோடு கூவி நானும் இருக்கேன் என்று காட்டிக்கொள்ளத்தான் பலருக்கு பிடிக்குது.  அதுக்கு மேல  ஒரு கருத்து வரும் போது அதன் உண்மை ஆராய்ந்து கொள்ள அதன் உண்மை பொய்  அறிந்து கொள்ளும் நிதானம் நம்மிடம் இல்லை. 

நோகாமல். நொங்கு திங்க தான் பலர் ஆசைப்படுகின்றோம். 

புலம்பெயர் தமிழர் தாம்  வாழும் நாடுகளின்  தாய்லாந்து, ஜப்பான், சைனீஸ் கடைகளுக்கு சென்று பாருங்கள். புளியங்காய், புளியம்பழம் ஓடுகளோடு அழகாக அடுக்கி விற்பனைக்கு இருக்கும். இங்கே பல சூப்பர் மார்க்கெட்களிலும் புளி விற்பனைக்கு உண்டு. புளியை பல  விதங்களில் மாற்றி மருந்தகங்களில்  விற்கின்றார்கள்.

அதாவது எங்கள் நாட்டை தாயகமாக கொண்ட  புளியின்  மதிப்பு எங்களுக்கு தெரிய இல்லை, இப்படித்தான் பல நேரம்   எங்களுடன் இருக்கும் பொருளின் மதிப்பு   புரியாமல் இருப்பதை விட்டு பறப்பதுக்கு ஆசைப்படுகின்றோம். 

எங்கட பாரம்பரியமும், எங்கட இயற்கையோடான வாழ்வும் இப்போ வரை எங்களுடன் தான் இருக்கு கண்டியளோ..? 

தமிழன் எனும் பெருமையையம், தமிழர் பாரம்பரிய உணவுகளையும் போற்றி பாதுகாக்கும் விஷயத்தில் ஈழத்தமிழரர்கள்  தாயகம் புலம்பெயர்ந்து  மூன்று தலைமுறை கடந்து கொண்டிருக்கின்றோம். அதை மேலும் வலுப்படுத்த இந்த மாதிரி பாரம்பரிய உணவுகள், வாழ்க்கை குறித்த நினைவு மீட்டல்கள் தேவைப்படுகின்றது என்ற உண்மையை இனி எண்டாலும் புரிந்து கொள்ளுங்கோ..! 

என்னை கிண்டல், சுண்டல் செய்வது எல்லாம் போதும்..


இன்றைய எங்கள் சமையலுக்கு 

ரசம், கத்தரிக்காய் சட்னி க்கு நான் எடுத்டுக்கொண்ட புளி


 இன்றைய தேவை போக நாளைக்கு மீன் குழம்புக்கும் மீதி இருக்கு. இது தான் உங்களுக்குரிய தெளிவு..! அளவுக்கு மீறிய புளிப்பும் உடலுக்கு கூடாது. தக்காளி குறித்து நிபிகளே யோசிச்சு கொள்ளுங்க 

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோம்- ரசமும் ரகசியமும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!