'Mental health for all'
' அனைவருக்கும் மன ஆரோக்கியம்'.
Part -2
1992 ம் ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும் October 10 வெவ்வேறு கருüபொருளில் உலக மனநல நாளாக அனுசரிக்கபடுவதன் மூலம் மனிதர்களின் மனஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வும் உலகளவில் கவனயீர்ப்புக்குரியதாகின்றது.
2020 கருப்பொருள்
'Mental health for all'
' அனைவருக்கும் மன ஆரோக்கியம்'.
இன்றைய உலகில் மன அழுத்தத்தினால் பாதிக்கபடாதவர்கள் யாருமே இல்லை. விழிப்புணர்வு தரும் உளவியல் ஆய்வாளர்கள், மருத்துவர்கள்,ஆலோசகர்கள், ஜனாதிபதி, பிரதமர், அதிகாரி, வீட்டில் வேலை செய்யும் ஆயா உள்பட அனைவரும் எதோ ஒரு சூழலில் மன அழுத்தத்தில்
பாதிக்கபடுகின்றார்கள். ஏனைய உடல் சார்ந்த நோய்கள் போல் இது மனம் சார்ந்த நோய். இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. அதனால் யாருக்கும் வராத நோய் ( Depressive) உங்களுக்குள் இருப்பதான குழப்பம் வேண்டாம்.
உளவியல் அழுத்தம் உருவாக்கும் மாற்றங்கள் குறித்த அறியாமையும், கவலையீனமும் தான் பலரை தற்கொலை, கொலை போன்ற முடிவுகளுக்கு தூண்டுகின்றது..!
🌻❣️🪂 இதை எழுதும் எனக்குள்ளும் உளவியல் சோர்வுகள் உண்டு. அவைகளை எனக்கான Positive ஆக மாற்றி கொள்கின்றேன். எனக்கு பிடிக்காத, பிரச்சனை தரும் விஷயங்களை விட்டு விலகி என் சிந்தனையை புதிதாக்கி கொள்வேன்.
யார் மேலும் குற்றம் குறை சொல்லாமல், யாரும் புரிந்து கொள்ளவில்லை., அவர்கள் எனக்காக மாற வேண்டும் என்று கவலைப்படாமல் அவரவர்க்கு தெரிந்தது அவ்வளவு தான் என்றளவில் என்னை தேற்றி கொள்வேன். 🪂🌻❣️
உங்களுக்கு மனம் குழப்பமாக இருக்கின்றதா..?
❎ குழப்பமான மன நிலையில் புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
உளவியல் அழுத்தத்திலிருந்து எங்களை நாங்கள் பாதுகாத்து கொள்ள சில வழிமுறைகளை இங்கே காணலாம்.
சுய பாதுகாப்பு பயிற்சி:
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யக்கூடிய பல மாற்றங்கள் உள்ளன.
🔹 சிறு ஓய்வு எடுத்து, உங்களை நீங்களே சுய ஆய்வு செய்து ஏன்..? எதனால்..?
யாரால் ..? எனும் காரணங்களை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் புரிந்துகொள்வதே சுய பாதுகாப்புக்கான அம்சமாகும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்களே கேட்டுக்கொள்ள நேரத்தைக் கண்டுபிடித்து அதற்காக செல்லுங்கள்.
🔹 அவசியம் என்றால் உங்களுக்கு நம்பிக்கையான, புரிந்து கொண்டு உதவ கூடிய குடும்பத்தினர், நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் மனதிலிருந்து பேசுங்கள். உங்களுக்கு வேதனை தரும் விடயங்களை ஒதுக்கி விடுங்கள்.
🔹 விளையாட்டும் ஆரோக்கியமான உணவும், போதுமான நித்திரையும் உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானதும் அவசியமானதும்கூட..!
உங்களுக்கு ஆரோக்கியம் தரும் நீண்ட நடைப்பயிற்சி செய்வது போன்ற
உடல் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
🔹 வழக்கமான தூக்க நேரத்தை தொடர்வது. உங்களுக்கு விருப்பமான விடயங்களில் ஈடுபடுவதுடன் தொடர் பணிகளுக்கிடையில் ஓய்வு, இடைவேளையை எடுத்துக் கொள்ளுங்கள்.
🔹 உடலை தளர்த்தி அமருங்கள். உள்ளிருக்கும் பயம், மன அழுத்தங்களை வெளியேற்றுங்கள் ( தியானம் செய்யுங்க என்பார்கள்) ஆனால் குழப்பமான மன நிலையில் மனதை ஒருமுகப்படுத்த முடியாது. ஆனால் எல்லாத்தையும் துங்கி போட்டு விட்டு அக்கடா என்று உடல் இறுக்கம் தளர்ந்து அமர முடியும். உடலை லேசாக விட்டாலே உடல் வலிகள் ஓடி விடும்.
🔹 உங்களுக்கென சிறு திடடம், ஒரு நாள் என்று ஒதுக்கி புதிய மாற்றங்களை உருவாக்குங்கள்.
🔹 ஒரு டயரியில் உங்களுக்கு பிடித்த அழகான இனிய நல்ல நினைவுகளை எழுதுங்கள். Positive சிந்தனை தரும் காரணங்களை குறித்து கொள்ளுங்கள்.
🔹 உங்களுக்கு எரிச்சல் தரும் காரியங்களை விலக்கி, உங்களை வருத்தம் தரவென விமர்சிப்போரை விட்டு விலகுங்கள்.
🔹 குழந்தைகள், பொருளாதார சிக்கல்கள், காதல் தோல்வி போன்ற காரணங்கள் எதுவானாலும் அனைத்தும் தற்காலிக பிரச்சனைகளே என்று உணர்ந்து கொள்ளுங்கள்.( யோசித்தது பார்த்தால் கடைசியில் ஒன்றும் இருக்காது )
✳️ ( இணையதளங்களில் ) Face book ல் எழுதும் பதிவுகளும் பலர் மனஅழுத்தத்தின் வெளிப்பாடாக இருக்கும்.
✅ பலருக்கு இங்கே எழுதுவதே மன அழுத்தத்திலிருந்து ரிலாக்ஸ் தரும்.
❎ இணைய வழி நண்பர்கள் பதிவுகளை பாலன்ஸ் செய்ய முடியாதவர்களுக்கு ஓவர் மன அழுத்தமும் உருவாக்கும். இணைய
நட்புகளுடன் தாமரை இலையும் தண்ணீரும் போல் இருந்தால் எல்லாமே ஆரோக்கியமாக இருக்கும்.
“ எண்ணம் போல் வாழ்க்கை“
எங்கள் எண்ணம் நலமாக இருந்தால் வாழ்வும் வளமாகும்.
உலக மனநல நாள் ( அனைவருக்கும் மன ஆரோக்கியம்'. Part -2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!