எனக்கு OP முடிந்து நாளையுடன் 50 நாள்கள் மருத்துவர்கள் கொடுத்திருந்த ஆறு வாரம் தீவிர சிகிச்சை தேவைப்படும் எனும் கால எல்லைக்கு முன்பே 30 நாள்கள் ( நான்கு வாரம் ) ஹாஸ்பிடலில். இருந்து வீட்டுக்கு வந்து நானே சமைத்து, உறவுகள் உதவியோடு மூன்று பார்ட்டி க்கு உணவு தயார் செய்து கொடுத்து ( கை கால் பலம் பெறும் வரை பிடி ஊன்றி நடக்கின்றேன், இன்று பிசியோ தெரபி முடிந்து வியர்க்க விறுவிறுக்க 25 நிமிடங்கள் சைக்கிளும் ஓடினேன்) புரிந்து கொள்ளுங்கள்.
கொரோனா தடைகளால் வீடு, ஹாஸ்பிடல், பிசியோ தெரபி தவிர சும்மா தான் இருக்கின்றேன். நேரம் குவிந்து கிடக்குது.
கடந்து வந்த அனுபங்களை இங்கே எழுதுகின்றேன் என்பதை உணர்ந்து தொடர்ந்து வரும் பக்க விளைவுகளிலிருந்தும் மீண்டு வரும் படியான தன்னம்பிக்கை, தைரியம் தரும் வார்த்தைகளையும் எனக்கு கொடுக்க முடிந்தால் கொடுங்கள்.🏋️♂️🪂🌹
என் பதிவுகளின் மூலம் உங்களுக்கு நான் உணர்த்த நினைப்பது புரிகின்றதா..? அல்லது இது வேண்டாத வேலை ...-அவசியமில்லை என்று நினைக்கின்றிர்களா..?
உடலில் ஏற்படும் சில காரணங்கள் நம் உடலில் ஏதோ ஒரு பிரச்சனைக்கான ஒரு எச்சரிக்கை மணி என்று அறிந்தோர் குறைவு. உதாரணமாக கை, கால் மரத்து போவது, காது அடைப்பது ( பக்கவாதத்தின் அறிகுறியாகவும் இருக்கும்)
தொடர் இருமல் இதயம் நுரையீரலில் எதோ சரி இல்லை என்றும் சொல்லும். ஆனால் நாங்கள் சாப்பாடு சரியில்லை, செரிக்கல்லை, காத்து நிற்குது என்று எங்களுக்குள் தீர்வுகள் தேடி தீராத வியாதிகளையும் இழப்புகளையும்தேடி கொள்கின்றோம்.
யாராவது திடீரென விழுந்தார், உணர்விழந்தார், உடல் செயலிழந்தது ( ஸ்ட்ரோக்) மரணித்தார் என்று அறியும் போதெல்லாம் ( சிலருக்கு பிரின்சஸ் இளவரசனின் தந்தை மரணம் நினைவுக்கு வருகின்றதா..? ) இவர்களுக்கும் என்னை போல் உடல் அறிகுறிகளை உணர்த்தி இருக்குமே..? என் கண்டு கொள்ளாமல் போனார்கள் என்று நினைத்து வருந்துவேன். இருந்தாலும் இந்த நோயிலிருந்து ஓரளவு குணமானால் தான் அடுத்தவர்களுக்கு ஆறுதலோ, ஆலோசனையோ, விழிப்புணர்வோ தரும் தகுதி எனக்கு உண்டு என்று புரிந்து அமைதியாக என்னை நானே ஆய்வு செய்யும் சோதனை எலியாக மாற்றி கொண்டேன்.
அது மட்டும் இல்லாமல் உடலில் ஒரு பிரச்சினை வந்தால் அதுகுறித்து முழு மருத்துவ அறிவியல் தெளிவும் விளக்கமும் தெளிவாக தமிழில் கிடைப்பதும் இல்லை . ஆங்கிலம் அல்லது ஜேர்மன் மொழியில் தேடி அறிந்து கொள்வேன். அதனால் மருத்துவமனைக்கு முன் மட்டும் அல்ல அதற்கு பின் வரும் அனுபவங்களை தமிழில் எழுத வேண்டும் என்று மூளைக்கு பதிவு செய்து அனைத்தையும் கவனித்து விழித்திருக்கும் போது குறித்து கொண்டும் வந்தேன்.
கடந்த ஐந்து வருடங்களாகவே ( தலையில் ட்யூமர் கண்டு பிடிக்கு முன் என் உடல் உணர்த்திய எச்சரிக்கைகள், அதை நான் உணர்ந்து கொண்ட விதம் ட்யூமர் என்ற கண்டு பிடிப்புக்கு பின் மருத்துவர்களின் ஆலோசனை ஆதரவு , என் உடல் நிலை மாற்றங்கள், உணர்வுகள், சிகிச்சைகள், நான் எதிர்கொண்ட சிரமங்கள், வலிகள் குறித்தும் இதிலிருந்து மீண்டும் மீண்டு வந்தேன் என்று பாமரருக்கும் புரியும் படி எழுத வேண்டும் அதனால் வருடம், தேதி, நேரங்கள் என்று கூட சிறு சிறு குறிப்புகளும், எனக்கான சிகிச்சைகளுக்குரிய Report எனக்கும் ஒரு copy தேவை என்று வாங்கி சேகரித்து, உடனுக்குடன் அதில் குறிப்பிட்டிருக்கும் ஜேர்மன் மொழி மருத்துவ வார்த்தைக்கு விளக்கம் இணையத்தில் தேடி அவ்வப்போது எழுதி save செய்து வந்திருக்கின்றேன்.
OP க்கு முன்னும் பின்னும் சிகிச்சை மருந்துகள் குறித்தும் அது ஏன்? எதற்கு ? என்று கேட்டு தெரிந்தும் தெளிந்து மருத்துவர்களுக்கு முழுமையாக ஒத்துழைத்தேன். எதிர்பாராத சில பின்னடைவுகள், பக்கவிளைவுகள் ஏற்பட்டு திடிரென்று நியூரோ பிரிவிலிருந்து
கார்டியோ எமெர்கென்சி க்கு கொண்டு சென்று ( ஹார்ட் அடைப்பு ) ஒரு நாள் முழுதும் இருந்த போதும் பயப்படவே
இல்லை. என்னை எனக்குள் ஆராயும் ஆர்வமே இருந்தது என்றால் நம்புவீர்களா?
உடம்பெல்லாம் வயர்கள் சுற்றி படுக்கையில் கிடக்கும் என்னிடம் ......நீ பயப்பிடுகின்றாயா..? என்று கார்டியோ ஸ்பெஷலிஸ்ட் கேட்ட போது ..
இல்லை, Keine Angst ... ஆனால் இந்த பரபரப்பும் சிகிச்சையும் என் என்று புரியவில்லை என்று தான் சொன்னேன். அந்த நேரத்தில் உறவுகள் அறிந்தவர் யாரும் அருகில் இல்லை. ஆனால் என்ன நடந்தாலும் அதை எழுதி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு தரணும் எனும் சிந்தனையில் தெளிவாக இருந்தேன். அதே போல் ஏன் OP க்கு பின் எனக்கான சிகிச்சை குறித்தும், திடீர் அபாயங்கள் நேரம் என் எது நல்லதோ அதை என் நியூரோ சர்ஜன் முடிவெடுக்கும் உரிமையையும் எழுதி கொடுத்து இருந்தேன். அந்த நம்பிக்கையை அந்த மருத்துவர் இன்று வரை நிறைவேற்றுகின்றார்.
நாக்குள்ளே நமக்கு என்ன மாற்றம் ஏற்படுகின்றது என்ற கவனிப்பும், விழிப்புணர்வும் , மருத்துவர்கள் தரும் சிகிச்சை குறித்து தெளிவும் இருந்தால் முன்னெச்சரிக்கையால் பல இழப்புகளை தவிர்க்க முடியும்.
அதிலும் ஒரு பெண்ணாக என் வயதும் நோய் குறித்த அனுபவங்களும், உணர்வும் பல பெண்களுக்கு விழிப்புணர்வை தந்து தன்னை தானே கவனிக்க வேண்டும் எனும் உணர்வை தரும் என்றும் நம்புகின்றேன்.
“ஆணுக்கு நோய் வந்தால் கிடைக்கும் அக்கறையும், கவனிப்பும் பெண்களுக்கு கிடைப்பது இல்லை “
அழுதாலும் அவள் தான் பிள்ளை பெற வேண்டும்..? வலித்தாலும் அவள் தான் சமைக்க, துவைக்க வேண்டும் எனும் நிலைமையே இன்னும் இருக்கின்றது.
பெரும்பாலான பெண்கள் கணவன், பிள்ளை, சொந்த பந்தம் என்று மீந்ததை தின்று, கிடைப்பதை உடுத்தி அனைத்தையும் சகித்து தன்னை தானே சரியாக கவனிப்பது இல்லை. 40 வயது வரை உடலளவில் அவளை எதுவும் பெரிதாக உறுத்துவதும் இல்லை. ஆனால் அதன் பின் மெனோபாஸ் சார்ந்த பிரச்சனைகளோடு பிற நோய்களும் சேரும் போது அவளுக்கு இரண்டந்தனை ஆதரவும், கவனிப்பும் தேவை பட்டாலும் அதை புரிந்து கொள்வார் இல்லை. உரிமைகள் மட்டும் இல்லை. வலிகளின் வேதனை வேதனைகளை கடந்து வர தேவையான அன்பும், அரவணைப்பும் கூட ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒன்றே போல் கிடைப்பது இல்லை. குடும்ப கௌரவம், வெட்கம், மான அவமானம் என்று பெண்களும் தங்கள் பிரச்சனைகளை உறவுகள், நண்பர்களிடமும் சொல்வதும் இல்லை என்பதையும் அழுத்தமாக என் எழுத்துக்களில் பதிவு செய்ய விரும்புகின்றேன். ( உடனே என் சொந்த சோக கதை என்று ஆறுதல் என்று யாரும் கிளம்பு வேண்டாம் ) வீட்டுக்கு வீடு வாசப்படி, எல்லா வீட்டிலும் அடைசல்கள் நிறைந்து கிடக்கின்றன. கொஞ்சம் தெளிந்து உணருங்கள் போதும்.
“ எங்களை நேசித்து எங்களுக்காகவும் கொஞ்சம் வாழ்வோம் “
https://www.facebook.com/100000786292216/posts/3279369752099202/?extid=LNsC3C1wSrol6xQH&d=n
மீண்டும் வருவேன்..🌻
28.09.2020
❤️ நிஷா ❤️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!