09 ஆகஸ்ட் 2020

உளவியல்_உண்மைகள் 2

#உளவியல்_உண்மைகள்  

சிலரை பார்த்ததும் அவர்களிடம் நம் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச அவர்சொல்வதை கேட்டு நடக்க தோன்றும், அந்த நபர் கெட்டவராக இருப்பார் எனும் சந்தேகம் இல்லாமல் அவர் சொன்னால் சரியாக தானிருக்கும் எனும்  முழு நம்பிக்கை தோன்றும். 

இன்னொருவரிடம் பகிர முடியாத  தன் கவலைகளை புரிந்து தனக்கு ஆதரவாக இருப்பார் எனும் நம்பிக்கையை  நம்மால் ஒருவருக்கு கொடுக்க முடிவதே  உளவியல் ஆலோசகருக்கான அடிப்படை..!

உளவியல் சார்ந்த பிரச்சனை என்பது எல்லோருக்கும் இருப்பது தான். எனக்கும், உங்களுக்கும், நம்மை சுற்றி இருக்கும் பலருக்கும்  எதோ ஒரு வடிகால் தேவைப்படவே செய்யும். 

இதற்கு முந்தைய பதிவில் சொல்லி இருந்தேன்.உளவியல் தத்துவத்தின் பிரதானமானது ஆலோசனை சொல்வதோ... அதன் படி நடக்க வற்புறுத்துவதோ இல்லை. 

நம்பிக்கை கொடுப்பது  முதல் படி என்றால் அவர்கள் சொல்வதை பொறுமையாக  கேட்பது  அடுத்த படி..!  பேச விட்டு அவர்கள் மனப்பாரம் குறைப்பது. யாரோ ஒருவரிடம் மனதில் இருப்பதை சொல்வதால் மனதின் பாரம் குறையும் போது அது வரை பெரிய பிரச்சனையாக மனதுள் பேயாட் டம்  போட்ட தெல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆகி போகும். இது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. 

“ நம்மை பத்தி திறந்த புத்தகமாய் மனதின் பாரங்களை எவரிடமேனும் 
பகிர்ந்து கொள்ள முடியும் என்றால் மன அழுத்தம் பாதி குறைந்து விடும். இது மனோதத்துவம்“

இதில் நாம்  யாராகவும் இருக்கலாம்.. மனம் விட்டு சொல்லும் நிலையிலும்... அடுத்தவர் சொல்வதை, பேசுவதை கேட்கும் நிலையிலும் எங்களை உருவாக்கி கொள்ளலாம்.

உளவியல் ரீதியான பிரச்சனைகள் என்பது ஒன்றுமே இல்லாமலும் இருக்கும். ஆலோசனைகள் தேவையற்ற சாதாரண சின்ன சின்ன குழப்பங்கள் மனம் விட்டு பேச பகிர ஆளில்லாத நிலையில் உள்ளே அமுங்கி மன அழுத்தமாக உருமாறுகின்றது. இதை புரிந்து கொள்ளாமல்   எங்கள் சமூகத்தினுள் புரையோடி 
கொண்டிருக்கும் டிப்ரேஸிவ் தற்கொலை, கொலைகளுக்கு 
தீர்வு தேட முடியாது..ஒரு பிரச்சனைக்கு  பிறகு மட்டும் பேசி அடங்கி மீண்டும் ஒன்றில் தொடங்குவதை விட தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக  எழுதி அனைத்துக்கும் தீர்வு எங்களிடமே இருக்கின்றது என புரிய வைக்க நினைக்கின்றேன். 

எப்போதும் என் பயணம் இலக்குகளை நோக்கியே இருக்கும். என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வரும் உங்களுக்கு நான் எழுதுவது புரியும்.இங்கே எழுதுவதை வைத்து பலர் inbox ல் எனக்கு தெரிந்த மன நல ஆலோசகர் அதுவும் தமிழில் தெரிந்தவர்களை சொல்லுங்கள் என்று வருகின்றார்கள். அவர்களுக்காகவும், எனக்காகவும், உங்களுக்காகவும்  நான் இங்கே எழுதுகின்றேன்.

சாப்பிடும் போது சோத்துக்குள் கல் கிடந்தால் தூக்கி போட்டு விட்டு சாப்பிடுவது போல் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களையும் தூக்கி போட்டு போயிட்டிருக்கணும்.. 
நான் எழுதும் பதிவுகள் யாரோ ஒருவருக்கு தேவையாக பயனுடையதாக இருக்கின்றது எனில் அது என் சொந்த அனுபவமாக இருந்தாலும் எழுதலாம் என்று நினைக்கின்றேன். இத்தனை எழுதுவதால் நான் ஒன்றும் தெய்வ பிறப்பு இல்லையே..? எனக்கும் பிரச்சனை உண்டு. 

இங்கே நான் எழுதுவதை பார்த்து  பலர் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்க்கின்றார்கள்..உண்மையில் யாருக்கும் நான் ஆலோசனையோ, தீர்வோ சொல்வது இல்லை. என்னை தொடர்பு கொள்ளுங்கள், உதவுகின்றேன் என்று எவருக்கும் உத்தரவாதம் தருவது இல்லை. அவரவர் பிரச்சனைக்கு அவர்களே தீர்வு காண வேண்டும் என்பதே என் பாலிசி. தனி தனியே சொல்வதை விட அவர்களே தம் நலன் நாடுவோருக்கு ஆறுதலாக இருக்கலாம் என்றே இங்கே எழுதுகின்றேன். 

வானம் என்ன வானம் தொட்டு விடலாம்..💃💃🪂🪂

 இணைத்திருக்கும்  நான்கு நிமிட  வீடியோவில் முதல் இரண்டு நிமிடம் Swiss Murten நதியில்  One day 🏞🛳🛳 கப்பல் பயணம்❣️❣️❣️

அடுத்த இரண்டு நிமிடம்  நேற்று ஒரு பார்ட்டி ஆர்டர்..🥰⛱🏝🏖 கோடைவெயிலின் சூடடை தணிக்க மலை அடிவாரத்து  நதியோரம், நீச்சலும், கலந்துரையாடலும் மாலை உணவுமாக ஒழுங்கு செய்து இருந்தார்கள்🎂🍨🍯🍰🍷

இரண்டாம் வகுப்பு தொடக்கம் ஆறாம் வகுப்பு வரையான பிள்ளைகளுக்கு  சாரணர் பயிற்சி   எங்கள் பகுதியில் இருக்கும் அனைத்து சர்ச் இணைந்து நடத்துகின்றார்கள். அதன் வருடாந்த கூட்டம். அங்கத்தவர்கள், பயிற்சியாளர்கள், வழிநடத்துனர்கள் என எங்கள் பகுதி பிரபலங்களுடன் என் குடும்ப மருத்துவரும் வந்திருந்தார்.

என்னை கண்டதும்.... எப்போதும் நலன் விசாரிப்புக்கு பின் உங்கள் நிறுவன சாப்பாடு சூப்பர் என்பார். நல்ல ருசி என்பதால் நான் மூன்று முறை சாப்டேன் என்பார்😛🥰

நேற்று என்னை கண்டதும் நல விசாரிப்புக்கு பின் இந்த  நிலையிலும் உன்னால் எப்படி முடிகின்றது என்று ஆச்சரியப்படடார். எந்த நிலை வந்தாலும் முடியாது என்று முடங்கி விடாமல் முடியும் எனும் சுய முயற்சி இருந்தால் முடியும் தானே டாக்டர் என்றேன்❣️😍 ( டாக்டர்க்கே டாக்டர் 🤣) 

ஆமாம்...பல முடியாமைகளுக்கு  💊 என்னால் முடியும் எனும் நம்பிக்கை தான் இது வரை உடன் பயணித்திருக்கின்றது. 

இனியும்...... வானம் என்ன வானம் தொட்டு விடலாம்..💃💃🪂🪂

இந்த பதிவோடு சிறு ஓய்வுக்கு செல்கின்றேன். ( நாள்கள், வாரங்கள் குறித்து எனக்கு தெரியாது) என்னை காணவில்லை எனும் என் நலன் விரும்பிகளுக்கு  Inbox யிலும் பதில் தர முடியுமா என்றும் தெரியாது என்பதால்..🌺🌹🌻🙏

சின்ன இடைவேளைக்கு பின் மீண்டும் இங்கே தொடர்வேன். 

உங்கள் நிஷா❤️



Video காட்சி படுத்தல் by me 😎

Video& பாடல் இணைப்பு & editing 

Thank you Mohamed Musammil😇