கொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி।- 7
உணவுப்பொருள் பதப்படுத்தல் சேமித்தல்
பழங்கள்,காய்கறிகளை
• வெயிலில் உலர்த்துதல்
• சர்க்கரை,தேனில் பதப்படுத்துதல
• உப்பு சேர்த்த காடியில்
ஊறுகாய் ,அச்சாறு போடுதல்
• குளிர்சாதனப்பெட்டி அல்லது குளிரூட்டும் வெப்பநிலை (0° C - 5°C)
• உறைந்த வெப்ப நிலையில் (FREEZING TEMPERATURE)
போன்ற வாய்ப்புகளில் எங்களுக்கு வசதியான முறைகளில் உணவுப்பொருட்களை பதப்படுத்திக் சேமிக்கலாம்.
உணவு பொருள் பதப்படுத்துவதற்க்கான
முன்தயாரிப்பு முறைகள் பொதுவானவை :
சந்தைப்படுத்தலுக்கு :
• பழங்கள், காய்கள் ஒரே மாதிரியான அளவுள்ள பழங்களை தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
• பழங்கள் முதிர்ந்த மற்றும் முழுமையான பழங்களாகவும்,
• காய்கள் பிஞ்சாகவும் முற்றாமலும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
🔸 சுத்தமாக்கி கழுவி நீர் இல்லாமல் துடைத்து உலர்த்தி, தோல் உரித்து . சிறு துண்டுகளாக, கீற்றுகளாக, கனசதுர வடிவங்களாக. வடடமாக வெட்டி கொள்ள வேண்டும்.
🔸 நீராவியில் அல்லது குறைந்த கொதிநீரில் சில நிமிடங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை மூழ்க வைத்து லேசாக வேக விட்டு, முழுமையாக வேக வைத்து அல்லது அப்படியே பதப்படுத்தலாம்.
உலர்த்துதல் : வற்றல் வடாம் கருவாடு
இலங்கை இந்தியா போன்ற அதிக வெப்பமான தட்பவெப்ப நிலை பகுதிகளிலும், உலர்ந்த வறண்ட சூழல் கொண்ட பகுதிகளிலும் சூரிய ஒளியில் உலர்த்துதல் மூலம் பல வருடங்களுக்கு தேவையான உணவை சேமிக்கலாம்
தேவைக்கு போக மிகுதியாகும் உணவுப்பொருட்க்களை சூரிய ஒளி மற்றும் காற்றுபடுமாறு உலர வைப்பதன் மூலம் உணவில் உள்ள ஈரத்தன்மை அகற்றப்பட்டு, நீரின் அடர்வு குறிப்பிட்ட அளவிற்குக் கீழே கொண்டு வரப்படுகிறது உணவு பொருள்களை அழுகி போக வைக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, உணவு பாழாதல் தவிர்க்கப்படுகிறது।
தமிழர் உணவு பாரம்பரியத்தில் சூரிய ஒளியில் உலர வைக்கப்பட்டு
பதப்படுத்தப்படும் பப்படம், வடகம் , வத்தல்களுக்கு தனி இடம் இருக்கின்றது
பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், மீன், இறைச்சி போன்றவை வெயிலில் உலரவைத்தல் மூலம் வற்றலாக பதப்படுத்தப்படுகின்றன.
உலரவைத்தல் மூலம் வற்றல் ஆக கூடிய காய்கறிகள் கீரைகள் பழங்கள் எவை ?
🔸 பெரும்பாலான காய்கள் கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சளும் , மிளகாய் தூள் உப்பும் சேர்த்து பிரட்டி வெயிலில் உலர்த்தி கொள்ளலாம். ( சுவை கூட்டவும்
நீண்ட கால பயன் படுக்கும் வெந்நீரில் அவித்து உலர வைத்தால் நல்லது. )
🔹 குறிஞ்சா கீரை ( அரிந்து)
🔹 திராய ( சுத்தமாக்கி)
🔹 கறிவேப்பிலை ( கழுவி உதிர்த்து )
🔹 மாங்காய் ( துண்டங்கள் )
🔹 பப்பாசி காய் ( துண்டங்கள் )
🔸 சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சளும் உப்பும் சேர்த்து பிரட்டி வெயிலில் உலர்த்தி ஒரு நாள் வெயிலில் காயவைத்து. இதனுடன் புளி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் ( Slow cook ) கொதிக்கவிடவும். லேசாக வெந்ததும் நீரை வடித்து, திரும்பவும் 2 நாட்கள் வெயிலில் உலர வைத்து உபயோகப்படுத்தலாம்
🔹 கத்தரிக்காய்
🔹 பாவற்காய்
🔹 வாழைக்காய்
🔹 புடலங்காய்
🔹 ஈரபலாக்காய்
🔹 மணத்தக்காளி
🔸 இருபக்கமும் நுனி நீக்கிவிட்டு அலசி உலர்த்தி அளவாக வெட்டி காய்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
காய்கள் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை நன்றாக வடித்துவிட்டு, வெயிலில் காயவிடவும். நன்கு உடைத்து முறுக்கும் பதம் வரும் வரை காய வேண்டும் எடுத்து
பத்திரப்படுத்தவும்.
🔹 அவரைக்காய் வகை
🔹 கொத்தவரங்காய்
🔹 பயற்றங்காய்
🔹 வெண்டைக்காய் , தும்மட்டிக்காய்
🔸பிஞ்சு வெண்டைக்காய்களை ஒரு அங்குலத் துண்டுகளாக வடடமாக வெட்டி வெயிலில் ஒரு நாள் உலர விடவும்.பின் தயிரில் உப்பு சேர்த்து, உலர்ந்த இந்த
வெண்டைக்காய்களையும் போட்டுக் கலந்து 3, 4 நாட்கள் ஊறவைக்கவும். பின்னர் வெயிலில் உலரவைத்து பக்குவப்படுத்தினால் குழம்பு பொரியல் என சமைக்கலாம்
🔹 மோர் மிளகாய்
🔸 பச்சை மிளகாயைக் கழுவி, துடைத்து, நுனியில் சற்று கீறிவிடவும். கண்ணாடி பாத்திரத்தில் தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து மிளகாய் மூழ்கும் அளவு ஊற்றி 3 நாட்கள் ஊற வைக்கணும்.மூன்றாம் நாள் தயிரிலிருந்து மிளகாயை பிழிந்து எடுத்து தட்டு ஒன்றில் பரப்பி, நல்ல வெயிலில் ஒரு நாள் முழுதும் காய வைக்கவும். உலரும் மிளகாயை பின்னேரம் எடுத்து திரும்பவும் தயிருடன் கலந்துவிடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மிளகாயை இப்படி வெயிலில் உலர விடல் மிளகாயும், தயிரும் மொறு மொறு என காய்ந்துவிடும். காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தவும் (எண்ணெயில் பொரித்து சாப்பிட வேண்டும்).
தெளிவு
******
🔸தேவைக்கு மிஞ்சிய (Surplus) உணவுகளை சேமிப்பதன் மூலம் உணவு விரயமாவது தடுக்க படுகின்றன.
🔸 சர்க்கரை மற்றும் உப்பு, உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கு உதவுகின்றன. உப்பு ஒரு சிறந்த வீரியமான பதப்படுத்தும் பொருள்.
🔸 உணபு பொருள்களை கெட்டு போக வைக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உப்பும் சக்கரையும் தடையாக இருக்கின்றன
🔸 சூரிய ஒளியில் உலர்த்தி பதப்படுத்திடும் முறைகள் வெப்பநிலை, காற்றில் உள்ள + ஈரப்பதம். காற்றின் வேகத்தை பொறுத்து உலர்த்துவதற்கு தேவைப்படும் நேரம் உணவிற்கு உணவு வேறுபடும்
🔶 உலரவைக்கும் இயந்திரங்களைக் கொண்டு உலரவைத்தல் : அதிக அளவில் பதப்படுத்தி சந்தைப்படுத்தல் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளலாம்
🔸இந்த முறைகளில் பெரிய அளவுகளில் உணவு சேமிப்பு விவசாயிகளை தொழில் முனைவோர் ஆக்கி சந்தைப்படுதலை இலகுவாக்கி அதிக இலாபம் பெற்று தரும்.
🙏 முதல் தடவை முயற்சி சிறிய அளவில் தொடங்குங்கள்.
எப்போதும் ஆரம்பம் சொதப்பும் 🤣
இந்த தொடர் பதிவின் ஊடாக நாங்கள் எங்கள் அன்றாட தேவைக்கு போக மிகுதியாக கிடைக்கும் உணவு பொருள் விரயமாகமல் எப்படி பதப்படுத்தலாம்
என்பதை என் உணவுத்துறையின் ( 15 வருட ஈவண்ட்ஸ் ஹோட்டல் ) அனுபவங்களின் ஊடாக உங்களுக்கு எழுதுகின்றேன்.
ஆர்வமுள்ளோர் பயன் படுத்துங்கள்.
கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.
இன்னும் தொடர்வேன்
Nisha 🙏
03.05.2020
பயனுள்ள அருமையான பகிர்வு...தொடர வாழ்த்துகள்
பதிலளிநீக்கு