செவிலியரான எனது மனைவி தினமும் COVID19 நோயாளிகளுக்கு மருத்துவம் செய்கிறார்।।।அவரும் நாங்களும் எந்தவிதமான முன்னெச்சரிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் (அவர் தன்னைதானேதனிமைப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்)
மிகவும் முக்கியமான கேள்வி இது
Covid 19
சிறப்பு மருத்துவ பிரிவு
பொது மருத்துவமனை பிரிவுகளோடு இல்லாமல் தனித்தே இயங்க வேண்டும் .
இலங்கையில் எவ்வாறான ஏற்பாடுகள் என்று தெளிவாக தெரியவில்லை
இப்போதிருக்கும் நிலையில் உங்க மனைவி உட்பட covid சிறப்பு மருத்துவ மனை பணியாளர்கள்/ துப்பரவு பணியாளர்கள் / ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அனைவரும் தொற்று உறுதிப்படுத்த பட்ட நோயாளர்கள் கொண்ட பிரிவில் பணி புரிவார்கள் எனில்
அவர்கள் வீட்டுக்கு செல்ல கூடாது
அரசு மருத்துவ பணியாளர் பாதுகாப்பாக
தங்குவதற்கு ஏற்பாடுகளை முன்னேற்பாடு செய்ய வேண்டும். ஓய்வு நேரம் அவர்களுக்கு முக்கியம் / இது வரை இல்லை எனில் இதை அரசின் கவனத்துக்கு கொண்டு போக சொல்லுங்கோ
எவரையும் சந்திக்காமல் / முக்கியமாக குழந்தைகள், மூத்தோர், கர்ப்பிணிகள், மாற்று திறனாளிகள், உடல் வலு இழந்தோர்
நீரழிவு
இதயம் சார்ந்த நோய்
சி று நீரகம் சார்ந்த நோய்
சுவாச நோய்கள்
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதோர்
என எவர் இருந்தாலும் எவரையும்
நெருங்க கூடாது ( இரண்டு மீற்றர் தூரமென சீனா சொன்னது ) ஆனால் இருமல், தும்மல், பேசும் போது வந்து விழும் எச்சில் துகள்கள் காற்றில் மிதந்து உயிர் வாழ்வதாக ஆய்வுகள் நிரூபிக்கும் போது வீட்டுக்குள் இருக்கும் அறைகள் கூட தனித்திருத்தலுக்கு பாதுகாப்பில்லை.
குடும்பத்திலிருந்து தனித்திருந்தால் உங்களுக்குள் உங்கள் உறவுகளுக்கும் பாதுகாப்பானது
மருத்துவ மனையில் உங்கள் மனைவிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள்,முன் எச்சரிக்கைகள், சுய பாதுகாப்பு முறைகள் பயிற்சி படுத்தி இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.
உங்கள் மனைவி முதல் மூன்று வாரங்கள் தொடர்ந்த பணிக்கு நியமிக்க பட்டிருந்தால் அக்காலத்தில் அவர் நோயாளர்கள் பணிக்கு செல்லுமுன் உணவு குடி நீர் போதுமாக உண்ண சொல்லுங்கள்.
நோயாளர்களுக்கு உதவ தொடங்கிய பின் உண்ண கூடாது.மீண்டும் அனைத்து பாதுகாப்பு ஆடைகளையும் களைந்து ஷாம்பு சோப்பு போட்டு நன்றாக தலை முழுகிய பின் தான் மீண்டும் உணவு எடுக்கலாம்.
பணி நேரத்தில் எக்காரணம் கொண்டும் அவர் கைகள் முகம் தொட கூடாது.
அதன் பின்னும் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்படடால் 14 தொடக்கம் 21 நாள்கள் தனித்து இருக்க வேண்டும்.அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யணும்.அதன் பின்பே குடும்பம், குழந்தைகளை சந்திக்கல்சம்.
( 🆘 இது வரை இலங்கை மருத்துவ துறை இந்த ஏற்பாடுகள் செய்ய வில்லை எனில் விரைந்து முடிவெடுக்கும் படி சுகாதார துறையின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்
தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்
• கொரோனா வைரஸ் அருவருப்பான நோய் இல்லை
• உயிர் கொல்லி நோய் இல்ல
• தொற்று நோய் என்பதால் வேகமாக பரவுகின்றது
• சரியான புரிதல் இல்லாததால்
பயத்தில் பாதி பேருக்கு மூச்சு திணறுகின்றது
•வெறும் ஐந்து வீதம் அதுவும் மேலே குறிப்பிடட நோய்கள் இருப்போரை கடுமையாக தாக்குகின்றது
✔️தைரியமா தன்னம்பிக்கையோடு போதுமான நோய் எதிர்ப்பு சக்தியே இந்த நோயை விரட்டுது
நாங்கள் இலங்கைக்குள் ஆரம்ப நிலையில் இந்த நோயை வெல்ல அனைத்து வகையிலும் முயற்சிப்போம்
உங்கள் மனைவி போன்ற தேவதைகளுக்கு எமது வந்தனங்கள் 🙏❤️
அவர்களை உற்சாக படுத்துங்கள்.வீட்டில் பிள்ளைகள் பிரிந்து இருக்கும் கவலை வரும். நோயை விட உளவியல் ரீதியான தாக்கம் அதிகம் இருக்கும்.தினமும் போன் பேசி உற்சாக படுத்துங்கள்
நீங்களும் பயந்து அவங்களையும் அதைரியப்படுத்தாதீங்க 🙏
முடிந்த வரை அவர்கள் ஓய்வு நேரம் ஹாஸ்பிடல் , நோயாளர் குறித்து பேசாமல் சூழலை 🎈இனிமையாக்குங்கள்
இங்கே பல விடயங்கள் சுருக்கமாக எழுதுவதாக நினைத்து குழப்பத்தையும் பயத்தையும் உருவாக்கி விடுகின்றார்கள் எனில் இன்னொரு சாரார் கொரோனா ஒண்ணுமில்லை என சொல்லி அசடடையை ஏற்படுத்தியும் விடடார்கள்.
என்னுடைய நண்பர்கள் பலர்😇 ( டாக்டர், தாதியர், ஆம்புலன்ஸ் முதலுதவி Covid சிறப்பு பிரிவில் பணி செய்து கொண்டு இருக்கின்றார்கள். Swiss இல் உயிரிழப்பு என்பது 60 + அதுவும் வேறு புற நோய்களும் இருந்தோர் தான்.
ஐரோப் நாடுகளை விட இலங்கை வேகமாக முடிவு எடுத்து மக்கள் மேல் இருக்கும் அக்கறையை காட்டுது.
அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுங்கள், மற்றவர்களுக்கும் சொல்லுங்க.இலங்கையில் 80 % மக்கள் ஒரு மனமாய் ரெண்டு வாரம் வீட்டினுள் இருந்தால் போதும்
நன்றிப்பா🙏
- Nisha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!