30 அக்டோபர் 2017

எங்கள் நிறுவன வளர்ச்சியில் சுவிஸ் மண்ணின் மைந்தர்கள்.

புலம்பெயர்ந்து தன் நாட்டுக்கு வருவோரை இருகரம் அணைத்து வரவேற்றாலும் அன்னியர் தங்களை விட வசதி வாய்ப்பில் , பதவியில் வளர்வதை சற்றுப்பொறாமையோடு நோக்கும் குணம் சுவிஸ் மக்களிடமும் உண்டு. அதிலும் வயதில் மூத்தவர்களிடம் தங்கள் நாட்டின் வளம் குறைக்க, வந்த பாதகர்கள் என்பதான எண்ணமும் இங்குண்டு.
சிலர் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் பல முதியோர் புலம்பெயர்ந்து நிறம் குறைந்தோரை ஒரு படி கீழிறக்கியே வைத்திருப்பார்கள்.
ஆனாலும் எங்கள் Hegas Catering Services ஆரம்ப காலம் முதல் சுவிஸ் மண்ணின் மைந்தர்கள் ஆதரவோடும், பல முன்னனி நிறுவனங்களின் நல்லாசிகளோடும் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
2011 ஆம் ஆண்டில் Annamaria அவர்களின் 99 ஆவதும் அவர் மகளின் 77 ஆவதுமான பிறந்த நாளை எங்கள் நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் இந்திய இலங்கை சுவிஸ் உணவுகளினை சுவைத்து மகிழ்ந்து சுவிஸ்மக்களையும் கவர்ந்திழுக்க முடியும் எனும் நம்பிக்கையை கொடுத்து எங்கள் வளர்ச்சிக்கு ஆரம்ப வித்தினை இட்டார்கள்.
அதன் பின் பல சுவிஸ் மக்கள் தங்கள் 40. 50. 65. 70 . 75. 85 என கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த வாரம் Zimmermann , Unterseen அவர்களின் வீடு கட்டி எண்பதாவது ஆண்டு நிறைவை குடும்பத்தினர் அனைவரோடும் எங்கள் உணவகத்தில் வந்து கொண்டாடினார்கள் என்பதுடன் அவர் மனைவி லில்லியின் 85 ஆவது பிறந்த நாளையும் எங்கள் விழா மண்டபத்தில் தான் குடும்ப அங்கத்தவரோடு விருந்துண்டு கொண்டாடினார்கள்.
நிறுவன வளர்ச்சியில் இந்த நாட்டு மண்ணின் மைந்தர்களாம் மூத்தோரின் ஆதரவை பெறுவதும் அவர்கள் நல்மதிப்பை தொடர்ந்தும் தக்க வைத்திருப்பதும் புலம்பெயர்வாழ் மக்களுக்கு கடினமான காரியம் தான் என்றாலும் நாங்கள் இளையோரை மட்டுமல்ல மூத்தோரையும் தொடர் வாடிக்கையாளர்களாக கொண்டிருப்பதை நினைத்து பெருமிதம் அடைகின்றோம்.
பொதுவாக சுவிஸ் மக்களுக்கான விருந்தின் இறுதியில் எங்களை பாராட்டி, அறிமுகம் தந்து கரங்களை தட்டி கனப்படுத்துவார்கள். நேற்றைய நாளில் விருந்தின் முடிவில் எமக்காக இலங்கையிலிருந்து பிரபல்யமான் டிலான் அவர்களின் சிங்கள பாடல் ஒன்றை ஒலிக்க வைத்து எம்மை வரவேற்று கைகளை தட்டி ஆரவாரித்து கௌரவப்படுத்தியதை மறக்க முடியாது.
Andreaskapelle Ex Paster Schack Siegfried 
Pfingstgemeinde Thun அவர்களின் 75 ஆவது பிறந்த நாள் விழா 28.10.2017 எங்கள் விழா மண்டபத்தில் கொண்டாட்டத்தின் இறுதியில் டெசட் பவ்வே ஆரம்பமான போது தான் புகைப்படம் எடுகக் வேண்டும் என நினைவில் வந்தது.

வெல்கம் குடிபானங்கள். சிற்றுண்டிகள் மற்றும் மெயின் கோர்ஸ் அனைத்தும் பவ்வே முறையில் ஒழுங்கு செய்திருந்தும் அவைகளை புகைப்படம் எடுக்க மறந்து போனேன்.
ஒரே நாளின் நான்கைந்து கேட்டரிங்க் ஆர்டர்களுக்குரிய உணவுகளை தயார் செய்து அனுப்ப வேண்டிய சூழலில் இப்போதெல்லாம் நிகழ்வுகளை புகைப்படமாக்கவோ விடியோவில் பதியவோ நேரம் செலவிட முடிவதில்லை.





வீடியோவை பார்க்கவும் புகைப்படங்களை ரசிக்கவும் இங்கே செல்லுங்கள்.
என் பேஸ்புக்   Nishanthi Prabakaran

என் நிறுவன லைக் பேஜ்   hegas Catering Services
இப்பதிவினை படிக்கும் எம்மவர்கள் எங்கள் உணவின் தரம் சுவை மற்றும் அலங்காரம் போன்றவை குறித்த கருத்தினையும்,  உங்கள்  ரெவ்யுவினையும் லைக் பேஜ்ஜில் இட முடிந்தால் எமக்கு அதுவும் விளம்பரமாக இருக்கும். 

அன்புக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி. 

10 கருத்துகள்:

  1. இப்பதிவினை படிப்பவர்கள் உங்களது உணவின் தரம், சுவையை எப்படி எடை போடமுடியும் ?

    ரெண்டு பொட்டணம் தேவகோட்டை பார்சல் அனுப்பினால் தின்று பார்த்து சொல்கிறேன்.

    யூ.ஏ.ஈ. நாட்டார்கள் பிழைக்க வந்தவரை கண்டு பொறாமைப்பட மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம+1

    பதிலளிநீக்கு
  3. மேலும் பல சிறப்புகளைப் பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. நிறுவன வளர்ச்சி குறித்து மிகவும் சந்தோசம்...

    உதவின அனைவருக்கும் வாழ்த்துகள்... நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் அக்கா....
    வளர்ச்சி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள்....

    உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்களும்...

    fbல உங்களை தொடர்வதால்
    படங்களை ஏற்கனவே அங்க பார்த்துட்டேன்..

    பதிலளிநீக்கு
  7. தங்கள் நிறுவனம் மேலும் வளர வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. ஹாய் தோழி ,
    வாழ்த்துக்கள் உங்கள் நிறுவனத்துடன் உங்கள் வளர்ச்சியும் பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள்! தங்களின் நிறுவனம் மேலும் பல சிறப்புகளைப் பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. அன்னியர் தங்களை விட வசதி வாய்ப்பில், பதவியில் வளர்வதை சற்றுப்பொறாமையோடு நோக்கும் குணம் இங்கும் பலரிடத்தில் உண்டு. முன்பு மூத்தவர்களிடம் மட்டுமே காணப்பட்டு இக்குணம் இப்போது இளையவர்களிடத்திலும் காணப்படுவது வருத்தமளிக்கிறது.

    சுவிஸில் சிலரிடம் இப்படியான மனோநிலை இருந்தாலும் உங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து முன்னேற வழிவகுத்தவர்களுக்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். உங்கள் பதிவின் வாயிலாக எமது நன்றியும் அவர்களுக்கு உரித்தாகட்டும். உங்களது உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் இந்த அளவுக்கு உங்களை முன்னேற்றிக்கொண்டிருக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள்மா.

    எந்த வேலை இருந்தாலும் உணவுகளையும் பரிமாறல்களையும் படமெடுக்கத் தவறாதீர்கள். உங்கள் தொழிலுக்கு மிக முக்கியமானவை அல்லவா? அதற்கென்றே ஒருவரை நியமித்துவிட்டால் அந்தப் பொறுப்பை அவர் பார்த்துக்கொள்வார். இனிய வாழ்த்துகள் நிஷா.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!