13 ஆகஸ்ட் 2017

கடைசி வரை யாரோ?

உள்ளதை உள்ள படி
நடந்ததை நடந்த படி 
கடந்தவை கடந்த படி
உணர்ந்ததை உணர்ந்து படி

இன்று நடப்பவை யாருக்கோ எவருக்கோ தானே என கடந்தபடி செல்லும் நாம் அப்படிகளை தாண்டும் சூழலுக்குள் தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்தே கடப்போம்.
நாம் வாழும் காலத்தில் நம நலனில் அக்கறை காட்டி புத்திமதி சொல்பவர்களை தூரமாய் நிறுத்தி நமக்குத்தேவையில்லாதவர்களாகி ஒதுக்கி அவர்களின் திட்டலுக்கும் குட்டலுக்கும் பின்னிருக்கும் ஆழ்ந்த அன்பை உணராமல் சட்டென கோபம் கொண்டு விலகிச்சென்று விடுகின்றோம்.
குறைகள் சொல்லாத, போலித்தனமானவர்களை உண்மை நட்பென நம்பி உயர்த்தி மதிப்பளிக்கின்றோம்.
சூழ்நிலைகள் எங்கே எவருக்கு சாதக. பாதமாகும் என எவராலும் நிச்சயித்திட முடியாது.
விதியை மதியால் வெல்ல நினைப்பதும், எதிர்காலக்கனவுகளைக்குறித்த திட்டமிடலும், என்னாலே எல்லாம்முடியும் எனும் செருக்குடனும், 
நாமும் துன்பப்பட்டு, அடுத்தவரையும் துன்பப்படுத்தாமல் நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம்.

நட்பெனப்படுவதும், உறவெனப்படுவதும் உள்ளதை உள்ளபடி உள்வாங்கி கண்டு கொள்ளாமல் செல்வது அல்ல. நன்மை, தீமை உணர்ந்தி வழி காட்டுவதே!
இவ்வுலக வாழ்வெனப்படுவது நீண்ட தூர ரயில் பயணமே! நிலையான தரிப்பிடம் நமக்கு இங்கே இல்லை. நிர்வாணியாய் வந்தோம், நிர்வாணியாய் செல்வோம், நாம் செல்லும் போது நாம் ஓடி ஓடி சேர்த்த பொன் பொருள் எதுவும் நம்முடன் வரப்போவதே இல்லை.
எத்தனையோ திட்டங்களை தீட்டுகின்றோமே.. மரித்தபின் என்னாவோம் என யோசித்திருக்கின்றோமா?
நான் எனும் அகந்தை அழிந்து அதுவானபின் என்னவாவோம்?
சுயமில்லாமல் உணர்வற்று உயிர் வற்றி போனபின்னரான சூழலை எதிர்கொள்ளும் படியாக நம்மை சார்ந்து நம்பியிருப்போரைக்குறித்து சிந்தித்திருக்கின்றோமா? .
  • ஒரு மரணம், தாய், தாரமிருந்தும் அனாதைப்பிணமாக எரிக்க அரசு முடிவெடுத்ததாக அறிந்த   தாயின் கதறலையும் தாய் மாமன் பதறலையும் அருகிலிருந்து உணர்ந்து இறுதிக்கிரியைகளை செய்யவேணும் அவன் உடலை பெற்றுக்கொடுங்களேன் எனும் இறைஞ்சி நின்ற போது  மொழி புரியாமல்  புலம்பெயர் எங்கள் இனம் படும் பாடுகள் கண்டு என் மனம் துடித்தது..சடலத்தினை வைத்து வேட்டையாடும் மனிதர் குணம் கண்டு அதிர்ந்தே அடங்கியது.
  • இறுதிச்சடங்கை  செய்ய அவன் உடலை பெற்று அவனை அதற்கான வாகனத்தில் அனுப்பும் வரை நாங்கள் அலைந்த அலைச்சலும் பாடுகளும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தினை தந்திருக்கின்றது.  என்ன தான் காசு பணம் சேர்த்து வைத்தாலும் கடைசி நேரம் துணை வரவும், துணாய் நிற்கவும் நான்கு மனிதரையேனும் நாம் சேர்த்து வைக்க வேண்டும். 
நாங்கள்குடும்பமாய் வருடத்துக்கு ஒரு வாரம் சேர்ந்து நான்கு பேரும் இத்தாலி செல்ல விடுமுறைப்பயணம் திட்டமிட்டிருந்தோம், பயணத்திட்டத்துக்கு முதல் நாள் நதியில் கண்டெடுத்த சடலத்தினை உறுதிப்படுத்த டீ,என்ஏ டெஸ்டுக்காக தாயை அழைத்த போதே புரிந்து கொண்டேன். (நாங்கள் இங்கே  மொழிபெயர்ப்பு மற்றும் உதவிகள் செய்வோம், சர்ச் ரிதியிலான ஊழியம் கடந்த இருபது ஆண்டுகளாக இனமதம் மொழி பாராது அர்த்த இராத்திரியானாலும் பிரச்சனை உதவுங்கள் என கேட்பவர்களுக்கு உதவி செய்கின்றோம்). அதன் பின் பயணத்திட்டம் கைவிடப்பட்டு பிள்ளைகளும் சரியாக புரித்துணர்வோடுஒத்துழைத்து இவ்வருடம் இல்லாவிட்டால் என்ன அடுத்த வருடம் செல்வோம் என பேசி இங்கே இருந்து அனைத்தையும் ஒழுங்கு செய்து இன்னும் அதற்காக காரியங்கள் முடியவில்லை.. உண்மையில் நாங்கள் இத்தாலி புறப்பட்ட பின் இப்படி செய்தி அறிந்திருந்தால் அந்த தாயின் நிலை குறித்து எங்களால் நினைக்கவே முடியவில்லை. ஏன் எனில் அவர் நீரழிவு நோயினால் பாதிக்கப்ட்டு இரு கால்களும்  நடக்க முடியாத நிலையில் இருக்கின்றார். இத்தாலி பயணத்திட்டம் ஒரு மாதம் முன் ஆரம்பித்தும் நான் ஹோட்டல் ஏதும் புக் செய்யாமல் போகும் முதல் நாள்  போன் செய்து  புக் செய்வோம் என தள்ளிப்போட்டதும்   காரணத்தோடு தான் என்றானது. 

இந்த உணர்விலிருந்து சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என நினைத்தாலும் தொடரும் காரியங்கள் அது எளிதானதலல் என்றே உணர்த்தி நிற்கின்றது. பார்க்கலாம். யார் பதிவும் படிக்கவில்லை, மனசு சேன்ஞ் ஆக எதிர்பார்த்து அவ்வப்போது பேஸ்புக்கில் அமர்வதோடு சரி

மரணத்தின் பின் சடலத்தை வைத்து  அலைந்த அலைச்சல்களின் தாக்கத்தினால் என் மன உணர்வுகளை அந்த நொடியே கண்ணீர் அஞ்சலி ஆக்கினேன்.  
 

12 கருத்துகள்:

  1. மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. யூ ஆர் கிரேட் ........நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பதினர் அனைவரும் கிரேட்.....உங்களின் நல்ல செயல்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. உங்களின் செயலை பாராட்டி வாழ்த்துவதைவிட பாராட்டி தலைவணங்குகிறேன் நிஷா

    பதிலளிநீக்கு
  4. உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறதுமா நிஷா. நாம் பார்த்துப் பழகியவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நம்மால் கைகட்டிக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. உண்மையா அன்பால் நிச்சயம் முடியாது.

    நாங்கள் பள்ளியில் படிக்கும்போது எங்கள் தமிழாசிரியை அடிக்கடி சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது. அவர் சொல்வார், அழ அழப் பேசுபவர் தன் மனிதர், சிரிக்க சிரிக்கப் பேசுபவர் பிற மனிதர் என்று. அழவைத்தாலும் நம்மை சரியான பாதையில் செலுத்துபவர்களே நம்மீது அக்கறை வைத்திருப்பார்கள். மேலோட்டமாக சிரித்துப் பேசி குழியில் விழவைப்பவர்கள்தான் இங்கு அநேகம்.

    இறப்பைத் தவிர்க்க முடியாது. ஆனால் இப்படியான இறப்புகளைத் தவிர்க்கமுடியும். அதற்கான மன உறுதியை இக்காலத் தலைமுறையினர் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

    நல்லவேளையாக நீங்கள் ஊரில் இருந்தீர்கள். நீங்கள் சொல்வது போல ஆபத்து நேரத்தில் உதவ முடியாமல் போயிருந்தால் வாழ்நாள் முழுக்க அந்தக் குற்றவுணர்வும் நம்மை அரித்துக்கொண்டே இருக்கும். இந்த வலியோடு சுற்றுலா செல்வதும் சாத்தியமல்ல.. பிள்ளைகளுக்கு இந்தப் புரிதல் இருப்பது உண்மையில் பாராட்டவேண்டியது.

    கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவாருங்கள். மனத்தை வேறு சிந்தனைகளில் செலுத்துங்கள். காலம் துணை செய்யட்டும்.

    பதிலளிநீக்கு
  5. முகநூலில் பார்த்த போது உங்களின் உறவு என்று நினைத்துக்கொண்டேன்! இங்கே தான் புரிகின்றது நீங்கள் பரமபிதாவுக்கு சேவகம் நிஜமாகச்செய்யும் ஒரு நிஜமான ஊழியம் !பாவம் அந்த தாய் !

    பதிலளிநீக்கு
  6. மனம் கனக்க வைத்த விடயங்கள் நான் முகநூல் செல்வதில்லை ஆகவே எனக்கு தெரியாது தங்களது செயலுக்கு சல்யூட்.

    பதிலளிநீக்கு
  7. அந்த தாயாரை நினைக்கும் பொழுது இன்னும் வேதனையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. நிஷா உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! எப்பெரிய சேவை!!! மாபெரும் ஊழியம்!!! மனித நேயம்! வாழ்த்துகள்! நீங்கள் ஊரில் இருந்ததால்..ஒரு வேளை அதனால்தானோ என்னவோ நீங்கள் ரூம் கூட புக் செய்யாமல் உங்களைத் தள்ளிப் போட வைத்தது. நடப்பதற்கு எல்லாமே ஒரு கணக்கு உண்டு என்று சொல்லப்படுவதுதானே!! நீங்கள் சென்றிருக்கும் போது இதை அறிய நேர்ந்திருந்தால் உங்கள் மனம் படாத பாடுபட்டிருக்கும். சுற்றுலாவையும் அனுபவித்திருக்க முடியாது. நடப்பதெல்லாம் நலல்தற்கே...உங்கள் குழந்தைகளும் நல்ல புரிதல் இருப்பது மிக மிகப் பாராட்ட வேண்டிய ஒன்று. வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. தங்களின் செயல் போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு
  10. தங்கள் செயல் மிகவும் போற்றுதலுக்கு உரியது அக்கா...
    அந்தத் தாயின் அத்தனை வலியையும் தாங்கள் சுமந்திருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  11. இந்தப் பகிர்வின் ஒவ்வொரு வரிகளும் உண்மையும் உணர்வும் கலந்ததாய்,வாசிக்கும்போது மிக நெகிழ்ச்சியுமாய் இருந்தது.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!